Thursday, November 21, 2024

வீட்டிலும் கோயிலிலும் விளக்கேற்றுவது ஏன்?


 

வீட்டிலும் கோயிலிலும் விளக்கேற்றுவது ஏன்?

செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணை கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கு சுடருக்கு..

தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை அதாவது நெகட்டிவ் எனர்ஜியை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கப்படும்போது நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி அதாவது நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

நம் சுற்றுபுறம் பிரகாசமாகவும், நேர்மறை ஆற்றலுடன் துஷ்ட சக்திகளை அண்டவிடாமல் செய்கிறது.

அதனால்தான் வீட்டிலும் கோயிலிலும் விஷேசகாலங்களிலும் எந்த நிகழ்வும் விளக்கு ஏற்றியபின்னரே வேலையை தொடங்குகிறோம்,.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

நம் வீட்டு பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் இரகசியம் என்ன?

 


நம் வீட்டு பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் இரகசியம் என்ன?

மஞ்சள் பூசிய முகம் மங்களகரமாக இருக்கும். ஆண்களின் மனதை வசீகரித்து கொள்ளை கொள்ளும்.

மஞ்சள் மிகசிறந்த கிருமி நாசினி என்று நம் அனைவருக்கும் தெரியும்.

தெரியாதது..

மஞ்சள் பூசி குளிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்று நோயான கற்பபை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ்  (எச் பி வி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படுவதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கற்ப பையை அகற்றும் சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் பூசி குளிப்பதால் கற்ப பை வாயில் கிருமி தொற்று இன்பெக்ஷன் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மேலும் அதிக துர்நாற்றம், அதிக உதிர போக்கு, அதிக வயிற்று வலி, வெள்ளைப்படுதல் போன்ற பெண்களின் உடல் உபாதைகளுக்கு மஞ்சள் பூசி குளித்தல் மிகசிறந்த நிவாரணியாகவும் பயன்படுகிறது. 

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

Tuesday, November 19, 2024

வெற்றிலை போடுவது சம்பிரதாயமா? அதன் இரகசியம் என்ன?

 


வெற்றிலை போடுவது சம்பிரதாயமா? அதன் இரகசியம் என்ன?

பழந்தமிழர் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறை மட்டுமல்லாது உடலை வலுப்படுத்தும் காரியங்களும் அதில் அடங்கி இருக்கும்.

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்த சுவை உடலையும் மனதையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. இதயத்தை வலுவடைய செய்கிறது

நம் உடம்பில் ஏற்படும் நோய்களுக்கு காரணம் வாதம், பித்தம், கபம். இதன் விகிதாச்சாரம் கூடும்போதோ அல்லது குறையும் போதுதான் நம்மை நோய் தாக்குகிறது.

இதை சமன் படுத்துவது வெற்றிலை போடும் பழக்கம்.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்ததை போக்க வல்லது.

சுண்ணாம்பில் உள்ள சத்து வாதத்தை போக்கும் தன்மையும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பற்றாக்குறையை சரி செய்யவும் உதவும்.

வெற்றிலையில் உள்ள காரம்  கபத்தை நீக்கிவிடும்.

தாம்பூலம் போடும் ஒரே ஒரு பழக்கத்தால் உடம்பில் உள்ள மூன்று விதமான தோஷங்களையும் போக்கும் தன்மை அமைந்து விடுகிறது.

இது மட்டுமல்லாமல், தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி போன்றவை வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. பல் சம்பந்தமான் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

10 இருபது வருடங்களுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது.  காரணம் அவர்களிடம் இருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே.

குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடலுக்கு நேரிடையாக கிடைக்கும்போது எலும்புகள் வலுபெற்று விடுகிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகம் இருக்க வேண்டும். காரணம் மதியம் நேர வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பின் தாம்பூலத்தில் சுண்ணாம்பு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.. அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுப்படுத்தும்.

இரவில் போடும் தாம்பூலத்தில் வெற்றிலையை அதிகம் எடுத்துக்கொண்டால் நெஞ்சில் கபம் அதிகம் தங்காது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


இறப்பு நிகழும்போது ஏன் ஆண் வாரிசுகள் தலையை மழித்துகொள்கிறார்கள்?

 


இறப்பு நிகழும்போது ஏன் ஆண் வாரிசுகள் தலையை மழித்துகொள்கிறார்கள்?

இறந்தவரின் சூட்சம தேகம் குடும்பத்தாரிடையே சிறிது நேரம் சுற்றி வரும். அதிலிருந்து வெளிப்படும் ரஜ-தம அதிர்வலைகள் அந்த வீட்டில் அதிகமாக இருக்கும்.

அது அந்த குடும்பதினரின் ஆண் வாரிசுகளிடம் தலை முடி மூலம் ஆகஷிக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு தலைபாரம் அமைதியின்மை தலைசுற்றல் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆண்களே ஈம சடங்குகளில் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்களின் தலை முழுவதும் மழிக்கப்படுகிறது. இதனால் குடும்ப வாரிசுகள் ரஜ-தம பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Sunday, November 17, 2024

பிறந்த குழந்தைகளுக்கு வசம்பை நூலில் கோர்த்து வளையல் போல் கையில் கட்டி விடுவதன் இரகசியம் என்ன?

 

பிறந்த குழந்தைகளுக்கு வசம்பை நூலில் கோர்த்து வளையல் போல் கையில் கட்டி விடுவதன் இரகசியம் என்ன?

குழந்தையின் ஆரோக்கியத்துக்கு தான்…

கையில் கட்டிய வசம்பை குழந்தை எப்போதும் வாயில் வச்சி சப்பி கடித்துக்கொண்டே இருக்கும் அதனால் குழந்தையின் உமிழ்நீருடன் சேர்ந்து வசம்பு வயிற்றுக்குள் சென்றுகொண்டே இருக்கும்..

இந்த வசம்பு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.  இது குழந்தைகளின் நரம்பு செல்களை ஊக்குவித்து மூளையில் செயல்பாட்டை அதிகரிக்கும்.

அஜீரண கோளாரை சரி செய்யும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு உப்புசம், வயிறு பொருமலையும் சரி செய்யும், பூச்சிகடி வண்டுகடி போன்ற நச்சு விஷத்தன்மையையும் முறிக்கும் திறன் கொண்டது வசம்பு.

மேலும் பேச்சு துவக்கத்திற்கும் திக்குவாய் பிரச்சனையையும் சரி செய்யும் முக்கிய பங்கினையும் சிறப்பான மருத்துவமாகவும் பயன்படுகிறது வசம்பு. 

மழலைகளுக்கு வசம்பு சுட்ட கரியை எண்ணையில் குழைத்து நெற்றியிலும் கன்னத்திலும் திருஷ்டி பட்டுவிடகூடாது என்று பொட்டும் இட்டுவிட்டு நாக்கில் தடவுவதற்கும் அதுதான் காரணம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி