Friday, April 29, 2016

பாசம்

குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுவது நல்லது🙏🙏🙏

மரம்

மரம் வைப்பனுக்கு கூலி இல்லை வெட்டுபவனுக்கே கூலி....

வைப்பவனுக்கும் கூலி என்று சொன்னால் உலகம் பசுமையாய் இருக்கும் ...

மரம் 🌱🌿வளா்போம் மழைபெறுவோம்..

தண்ணீா்

கருத்துள்ள படம்
நீர் வளம் காப்போம்

அம்மா

அம்மாக்கள் சொன்ன அருமையான பொய்களில் ஒன்று
" கடைசி உருண்டைல தான் எல்லா சத்தும் இருக்கு

இத மட்டும் வாங்கிக்கோ கண்ணா"'''

Thursday, April 28, 2016

மரம்

என்னை வெட்டி வீழ்த்தும் போது உன்னால் தடுக்க முடியவில்லை..
உன்னை வெயில் வாட்டி வதைக்கும் போது என்னால் தடுக்க முடியவில்லை...😔
இப்படிக்கு,
மரங்கள்.🌿🌱🌴🍃🌲

Friday, April 22, 2016

எளிமை

எளிமை தான் உண்மையாக வாழக்கற்றுக்கொடுக்கும்...

வாழ்க்கை

சாம்பலா போற போற வாழ்க்கை!
அப்புறம் எதுக்குடா ஒருத்தைன்
#ஆண்டான்!! ஒருத்தன் #அடிமை!!

குழந்தை

நம் இளம் வயது நினைவுகளை தூண்டும் இந்த அனுபவம் இருக்குறவங்க லைக் பண்ணுங்க..

தவுன்

தவுன்
இதன் சுவை யாருக்கெல்லாம் பிடிக்கும்.?
கிராமத்தில் மட்டுமே கிடைக்கும் அமிர்தம்

குழந்தை

உறங்குவது போல நடிக்கும் மகனிடம் பிடித்ததே 'தூங்கிட்டியா?' எனக்கேட்டால் ஆமாம் என்று பதில் தருவதுதான் ; அறியாமை எத்தனை அழகை கொண்டுள்ளது !!!

கோவில்

சரியாக 12 மணிக்கு எடுக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவில்

குருவி ரொட்டி

குருவி ரொட்டிக்கு லைக் போடலாமே!

குளிா் பானம்

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்!
அப்போ கட்டாயம்
இதைப் படியுங்கள்!..............

¨ குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.

¨ வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.

¨ வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.
¨ உடல் பருமன் ஏற்படும்.

¨ செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.

¨ சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு.
¨ நார்ச்சத்து இல்லை.

¨ கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம்.
குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா?

<<<<<< திராட்சையின் நன்மைகள் >>>>>>

¨ வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது.

¨ நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும்.

¨ இதயம் வலுப்பெறும்

¨ மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும்.

¨ உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.

¨ உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.

¨ நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.

¨ எலும்புகள் வலுப்பெறும்.

#குறிப்பு: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். ஜீனி சேர்க்க வேண்டாம்.

ஐஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி ஐஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.

-தமிழன்

விவசாயம்

இப்போ நான் விவசாயி: எம்.பி.ஏ. படித்த மாட்டுக்கார வேலன்!

‘நல்லா படிச்சு மார்க் வாங்கலேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்’ என்று குழந்தைகளைக் கண்டிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்போம். ஆனால் நன்றாகப் படித்து பிளஸ் டூ தேர்வில் 93 சதவீதம் மதிப்பெண்களை எடுத்த ராஜமார்த்தாண்டனிடம், அவருடைய பெற்றோர்கள் ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்கள்.

“எனக்கு மாடு வேண்டும்” என்றார் ராஜமார்த்தாண்டன். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது குடும்பம். தொடர்ந்து படித்துப் பொறியாளராகவும், ஜாம்ஷெட்பூரிலிருக்கும் புகழ்பெற்ற XLRI கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ.வும் படித்து முடித்தார்.

“மதுரை சட்டப்பேரவை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகியான என்னுடைய தாத்தா ஆர்.வி.சுவாமிநாதன். அவர்தான் எனக்கு முன்மாதிரி. ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் தாத்தாவின் பண்ணையில் இருந்தன. தாத்தாவை என்னுடைய ஆதர்சமாகக் கருதுவதால்தான் எம்.பி.ஏ. முடித்துவிட்டு மாட்டுக்கார வேலன் ஆனேன்” என்னும் ராஜமார்த்தாண்டன், தன் வாழ்க்கைக்கான அடித்தளமாகவே மாட்டுப் பண்ணையையும் விவசாயத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை அருகே திருப்போரூரில் நாட்டு மாடுகள் பண்ணை மற்றும் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுவரும் அவர் பேசியதிலிருந்து…

எந்தப் புள்ளியில் பொறியாளர் வேலையை விட்டுவிட வேண்டும் என்று தோன்றியது?

படிப்பை முடித்ததும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு யுண்டாய் கார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்தேன். வாழ்க்கையில் என்னவோ ஒன்று குறைவது போலிருந்தது. என்னைப் போன்றே நண்பர்கள் சிலருக்கும் தோன்றியது. முதல் கட்டமாகத் திருப்போரூரில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கினேன். சோளம், பயறு வகைகள், கீரைகள் பயிரிட்டேன்.

அதற்குப் பிறகும், மாட்டின் மீதான என்னுடைய ஈர்ப்பு அப்படியேதான் இருந்தது. காலையில் குடிக்கும் காபியிலிருந்து சாப்பாடுவரை எனக்கு எதுவுமே சம்பந்தமில்லாததுபோல் தோன்றியது.

சுத்திகரிக்கப்பட்ட பால், பாலில் கலப்படம் என்று தினம் தினம் எவ்வளவோ செய்திகள். என்னால் முடிந்த அளவுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தரமான பாலை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்காவது கொடுக்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவே, ‘சுத் மில்க்’ நிறுவனத்தின் அடிப்படை.

விவசாயம் செய்ய யாரெல்லாம் உங்களுக்கு உத்வேகம் தந்தார்கள்?

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் மூலம் விவசாயத்தின் நுணுக்கங்களை எளிமையாகத் தெரிந்துகொண்டேன். எல்லோருக்கும் வாழ்க்கை முறையை வகுத்துத் தந்திருக்கும் நம்மாழ்வார் வழியைப் பின்தொடர்கிறேன்.

உங்கள் பண்ணையில் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

சோளம், உளுந்து, காராமணி, கீரை, வாழை, முருங்கை ஆகியவற்றைப் பயிர் செய்கிறோம். எங்களுடைய மாடுகளுக்குத் தீனி போடுவதற்காகவே, மூன்று ஏக்கர் பரப்பில் புல்லையும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான CO4 தீவனப் புல் ரகம், தீவனச் சோளம் ஆகியவற்றை வளர்க்கிறோம். இதுதவிர ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியில் உள்ள நண்பர்களின் பண்ணையிலிருந்து வைக்கோல், புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்றவற்றை வாங்கிக்கொள்கிறோம். ஜீவாம்ருதக் கரைசல் இயற்கைப் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை நாங்களே தயாரித்துக்கொள்கிறோம். பெரும்பாலும் வெளியிலிருந்து எந்த இடுபொருளையும் எங்கள் பண்ணையில் பயன்படுத்துவதில்லை.

நாட்டு மாடு வளர்ப்பதன் அவசியம், முக்கியத்துவம் என்ன? என்னென்ன ரக மாடுகளை வைத்திருக்கிறீர்கள்?
உயிர்ச்சூழல் சங்கிலி அறுந்துவிடாமல் பாதுகாப்பதில் மனிதர்களுக்கு உற்ற தோழமையுடன் இருப்பவை நாட்டு மாடுகள்தான். நாட்டு மாடுகளைப் பராமரிப்பது எளிது. பராமரிப்புச் செலவும் குறைவு. நம் நாட்டு சுற்றுச்சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் திறன் அயல் நாட்டு மாடுகளுக்கு இருக்காது.

நம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை நம் நாட்டு மாட்டு இனங்கள்தான். அயல் ரக மாடுகளிலும் கலப்பின மாடுகளிலும் நோய் மூலக்கூறு கொண்ட A1 புரதம் இருக்கும். நம் நாட்டு மாட்டு ரகங்களில் இந்த வகையான புரதம் இருப்பதில்லை. பால் அதிகம் தருகிறது என்னும் காரணத்துக்காகவே அயல்நாட்டு ரகங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன.

உண்மையில் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள், திமில்கள் இருப்பதில்லை. அவற்றின் வியர்வை, பால் மற்றும் கோமயத்தின் மூலமாகவே வெளியாகிறது. இந்த அடிப்படையில் தரத்தைக் கணக்கிட்டால், நம் நாட்டு மாட்டு இனத்தின் பால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. நம் நாட்டிலேயே 40 இன மாடுகள் உள்ளன. இவற்றில் அதிகம் பால் கொடுப்பவை ஆறு இனங்கள். இதில் குஜராத்தின் கிர், கான்கிரேஜ், ராஜஸ்தானின் தார்பார்க்கர் ஆகிய இனங்களில் 20 மாடுகளை என்னுடைய பண்ணையில் வளர்க்கிறேன்.

உங்கள் பண்ணையில் கிடைக்கும் விளைச்சல்,
பொருட்களை எப்படி விற்பனை செய்கிறீர்கள்?

ஒரு நாளைக்குச் சராசரியாக 120 லிட்டர் பாலை அவை தருகின்றன. என்னுடைய `சுத் ஃபார்ம்’ நிறுவனம் மூலமாக ஒரு லிட்டர் 85 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். பழைய மகாபலிபுரச் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நகர்ப் பகுதிகளில் அண்ணா நகர் வரையிலும்கூட எங்கள் பண்ணையின் பால் செல்கிறது. `நல்ல கீரை’ அமைப்பு, சில பசுமை அங்காடிகளில் எங்கள் பண்ணையின் பால் அன்றாடம் விற்பனை செய்யப்படுகிறது.

நீங்கள் விற்பனை செய்யும் பால், பனீர் போன்றவற்றின் சிறப்பம்சம் என்ன?

எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலில், தண்ணீரைச் சேர்த்துப் பயன்படுத்தினாலும், தரம் நன்றாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். பாலைப் பொறுத்தவரை அன்றாடம் 120 லிட்டருக்கு அதிகமாகவும்கூட எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், உடனடியாக உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் இல்லை. எங்களுடைய பால் பொருட்களான பனீர், இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்தப் பண்ணைக்குத் தேவைப்பட்ட முதலீடு, லாபம் பற்றி சொல்லுங்கள்?

இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் பண்ணையில் வேலை செய்கிறார்கள். ஒரு குதிரையும் வைத்திருக்கிறேன். புல்கட்டுகளையும் விவசாயத்துக்குத் தேவையான அன்றாட வேலைகளையும் செய்வதற்குக் குதிரை வண்டியைப் பயன்படுத்துகிறோம்.

ஏழு ஏக்கருக்கான பயிரிடும் செலவு, மாட்டுப் பண்ணை பராமரிப்பு, பண்ணையாட்களுக்கு ஊதியம் எல்லாம் சேர்த்தால் மாதம் சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். பாலின் மூலமாகவும், தானியங்கள் மூலமாகவும் சராசரியாக மூன்று லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. செலவு போக, மாதம் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

ஒரு விவசாயியாக மாறியதால் கிடைத்த தனித்தன்மையான விஷயங்கள்?

அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. என்ன படித்து, என்ன பெரிய வேலையில், எவ்வளவு அதிகமாகச் சம்பளம் வாங்கினாலும் நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும் சந்தோஷத்துக்கு ஈடு இணையே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சந்தோஷமான வாழ்க்கையை ஒரு விவசாயியாக, ஒரு மாட்டுப் பண்ணைக்காரனாக நான் வாழ்கிறேன். தலைகீழாக மாறிவரும் இந்த உலகில், இதைத் தனித்தன்மையான விஷயமாக நான் நினைக்கிறேன்.

உங்களைப் போலப் படித்துவிட்டு, விவசாயத்துக்கு வருபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

விவசாயம் என்பதும் ஒரு தொழில்தான் என்பதைப் புரிந்துகொண்டு வர வேண்டும். இதில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன் சில வருடங்கள் அல்லது சில மாதங்களாவது விவசாயப் பண்ணையில் நேரடியாகத் தங்கிப் பயிற்சி பெற வேண்டும். எந்த வேலையிலும் ஓய்வு இருக்கும். ஆனால் விவசாயம் செய்யும்போது, ஓய்வை எதிர்பார்க்க முடியாது. 24X7 உழைப்பதற்கு நேரத்தைச் செலவிடத் தயாராக இருக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாமல் பணத்தை மட்டும் முதலீடு செய்வதைவிட, பணத்துடன் உழைப்பதற்குத் தயாராக இளைஞர்கள் வர வேண்டும்.

-வாழ்த்துக்களுடன்

Tuesday, April 19, 2016

god



god           god                                                                                                                                                                                                                                                                                                                                                               god

Friday, April 15, 2016

போங்கடா



விடுமுறை நாட்கள் அப்போதும்!!
இப்போதும்!?



Thursday, April 7, 2016

தனிமை

தனிமை பழகிய ஒன்று தான் என்றாலும்
சில நேரங்களில் நாம் நேசிக்கும் ஒருவரின்
பிரிவில் தான் #தனிமை எவ்வளவு #வலியென
உணர்கிறோம்..

நிம்மதியான வாழ்க்கை

நிம்மதியான வாழ்க்கை

தலை விதி

இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவும் வெற்றியாளர்கள் சொல்லும் 9 எளிய விதிகள் என இவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அது இங்கே அப்படியே...!

1.இலக்கை தீர்மானியுங்கள் !

தோட்டா எவ்வளவு வேகமாக இருந்தாலும், அதனை சரியாக செலுத்த துப்பாக்கி அவசியம். அந்த துப்பாக்கிதான் இலக்கு. குறைந்த காலத்திட்டங்கள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என இரண்டு விதமாக உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். குறைந்தகால இலக்காக, பணி உயர்வு பெறுவது, நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றுவது என சின்னச்சின்ன விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்டகால இலக்காக, உங்களின் லட்சியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தகாலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகள் செய்து முடித்து விட்டோமோ? என சுயபரிசோதனை செய்து கொண்டால், அடுத்தமுறை அதற்கேற்றபடி திட்டமிடலாம். நீண்டநாள் லட்சியங்களை வருடத்திற்கு ஒருமுறை எந்தளவு நீங்கள் அதனை நெருங்க முடிந்தது எனப்பார்த்து அடுத்த ஆண்டு, அதற்கேற்ப திட்டமிடுங்கள். நாம் இன்று விதைப்பதைதான் நாளை அறுவடை செய்ய முடியும் !

2.ககபோ !
.
காதலோ, கஷ்டமோ எதுவும் கடந்து போகும். எனவே கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நடந்த, மோசமான விஷயங்களை நினைத்து வருந்துவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருங்கள். நாம் என்ன செய்தாலும், கடந்த காலத்தை மாற்ற முடியாதே? பின்னர் ஏன் அதை நினைத்து வருந்த வேண்டும்? இன்றைக்கு நீங்கள் செய்யும் விஷயங்கள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவற்றில் மட்டும் கவனம் இருக்கட்டும். கடந்த கால அனுபவங்கள் தந்த பாடங்கள் மட்டும் போதும் நமக்கு!

3. கை கொடுக்கும் நம்பிக்கை !

நம்பிக்கையின் வெற்றியே முழுவதுமாக நம்புவதில்தான் இருக்கிறது. உங்களால் எதுவும் முடியும் என்கிற கர்வமில்லாத, முழு நம்பிக்கை மிக அவசியம். அனுபவமும், திறமையும்தான் இந்த துணிச்சலைத் தரும். அதனை அதிகமாக்குங்கள். “சிறகிருந்தால் போதும், சிறியதுதான் வானம்” என்பது கவிஞர் வைரமுத்துவின் வரி. அந்த சிறகு உங்கள் நம்பிக்கைதான்.

4.அடக்கம் அவசியம் !

வெற்றிகளும், பொறுப்புகளும் வர வர அடக்கமும் வரவேண்டும். பணிவுதான் தலைமைப்பண்புக்கு முதல் தகுதி. அந்தப்பணிவை தலைவன் ஆனாலும் விட்டுவிடாதீர்கள். தற்புகழ்ச்சி, சுயவிளம்பரம் இதெல்லாம் நீங்கள் நிச்சயம் வெறுக்க வேண்டியவை. எத்தனை பேரும், புகழும் வந்தாலும், அத்தனையும் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என சொல்லும் பண்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் அவசியம்.

5. மாத்தியோசி
.
“மரம் வெட்டுவதற்கு எனக்கு 9 மணிநேரம் கொடுத்தால், 6 மணிநேரம் நான் எனது கோடரியை கூர் செய்வேன்”- இதைச்சொன்னது ஆபிரகாம் லிங்கன். ஸ்மார்ட்வொர்க் (smartwork) என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம். திட்டமிடப்படாத கடின உழைப்பு முனைமழுங்கிய கோடரியை வைத்து 9 மணி நேரம் மரம் வெட்டுவது போலத்தான். எனவே நீங்கள் செய்யும் பணிகளில் இந்தப்பார்வை மிகவும் முக்கியம். இப்படி கிரியேட்டிவாக பணிசெய்தால், அலுவலகம் எப்படிப்பிடிக்காமல் போகும்?

6.சேமிப்பு !

“உங்களுக்குத் தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்தால், உங்களுக்கு தேவையானதை எல்லாம் ஒருநாள் விற்க நேரிடும்”- இப்படி மிரட்டுவது பொருளாதார நிபுணரும், சிறந்த தொழிலதிபருமான வாரன் பஃபெட். சேமிப்பும், ஒருவகையில் உங்களின் லாபம்தான். சேமிப்பும் ஒரு வருமானம்தான். எனவே சரியான திட்டமிடலுடன் சேமிப்பு ரொம்ப முக்கியம்.

7. நேர மேலாண்மை !

நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களின் கடந்த ஒரு நொடியை கூட உங்களால் திரும்பப்பெற முடியாது. அப்படியெனில் அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்துப் பாருங்கள். எந்த விஷயத்தையும் நாளை என தள்ளிப்போடாமல், “தள்ளிப்போடாதே..” என இன்றே முடித்து விடுங்கள். ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு கூட, மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கலாம்.

8.குழுவாகச் செயல்படுங்கள்
.
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன, சச்சின் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் அல்ல. ஆனால் தோனி ? சொல்லவே வேண்டாம். உங்களது திறமை என்பது வேறு. குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பது வேறு. இந்த திறமையால்தான் சிறந்த கேப்டன் எனக்கொண்டாடப்படுகிறார் தோனி. அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியுங்கள். அடுத்தவர் கருத்துக்கு காதுகொடுங்கள். அவர்களின் சிரமங்களுக்கு கைகொடுங்கள். பிறகு உங்களை விட சிறந்த டீம் லீடர் யாரும் இருக்க முடியாது.

9. கற்றுக்கொள்ளுங்கள்.. கற்றுக்கொண்டே இருங்கள்.

அன்பு

பசியை விடக் கொடுமையானது சாப்டியா னு கேட்க நமக்குனு ஒரு குரல் இல்லாம இருக்கறதுதான்...

Sunday, April 3, 2016

உழைப்பாளி

🔹🔹🔹🔹ஓய்வை⚫🔹🔹🔹விரும்பாத◽ 🔹🔹🔹உழைப்பாளி🔹 ◽✨🔹✨⭐✨🔹✨⭐✨

தமிழன்

⭐தமிழனின்⭐ 🔹கைவண்ணத்தில்🔹 உருவான சிங்கப்பூர் ஸ்டார் ஹாேட்டல் இதுதான் ⭐தமிழனின் ⭐திறமை 🌟✨🌟

விவசாயம்

அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்கு 🌽🚜பதிலாக🌾🚜 விவசாயத்தை சாெல்லி காெடுங்கள்🚜🌿🚜🍀🚜🍃🚜🍁🚜🌺🚜

அவமானம்

மதம்

உனக்கும் எனக்கும் ஒரே வானம் எனும் போது இந்த கடவுள் மட்டும் எப்படி வெவ்வேறாய் இருக்க முடியும் ▪▪▪

குழந்தை

குழந்தைகள் நம் தவறுகளை மன்னித்து விடுகிறார்கள்🔹🔹🔹 நாம் தான் அடித்து விடுகிறாேம்

மதிப்பு

ஆபாச படத்திற்கு கிடைக்கும் மதிப்பு இந்த (அனாதை பிள்ளைக்கா) கிடைக்க பாேகிறது இதெல்லாம் ஒரு சமுதாயமா ❇த்தூ❇ 🙈🙉🙊❇

உதவி

🎇ஏழைகளிடம் 🎇▪தான்▪ மனமும் மனிதநேயமும் இருக்கிறது ▪ஏழைகளின்▪ ♦தோழி ♦

தவறு

தன் தவறை உணர்ந்து
மன்னிப்பு கேட்பவரை
மன்னிக்காது முகம்சுழிப்பதும்
மிகப்பெருந்தவறே....!!