Tuesday, October 17, 2017

Friday, September 15, 2017

ஆலோசனைகள்

ஆலோசனை!

நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை
செயல்படுத்த...கடலில் கலக்கும்
வெள்ள நீரை சேமிக்க அசத்தல் திட்டம்

நதிகளை இணைத்து, தேசிய நீர் வழி போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும்,நீர்வழி,போக்குவரத்தை, செயல்படுத்த, ஆலோசனை!

கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 30 நதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை, 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பதினைந்தாயிரம் கி.மீ., நீள, கால்வாய் கட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் இடையே, தண்ணீரை சேமித்து வைக்கும் ஏரிகள் போன்ற, 3,000 நீர் நிலைகளை உருவாக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதல்கட்டமாக, கென் - பெட்வா, தமங்கங்கா - பிஞ்ஜால், பர் தபி - நர்மதா, மகாநதி - கோதாவரி, மனஸ் - சங்கோஷ் தீஸ்டா - கங்கை ஆகிய நதிகளை, இணைக்கும் திட்டம், வரும் டிசம்பரில் துவக்கப்பட உள்ளது.

எதிர்ப்பு

நதிகளை இணைத்தால், தங்களின் நீராதாரம் பாதிக்கும் என கருதுவதால், இந்த திட்டத்துக்கு, சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், மதுரையை சேர்ந்த, பேராசிரியர், ஏ.சி.காமராஜ் முன்வைத்த, நீர்வழி போக்குவரத்து திட்டம், பல மாநில

அரசுகளின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, திட்டம் சிறப்பாக உள்ளதாக, காமராஜுக்கு, பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆர்வம்

காமராஜின், நீர்வழி திட்டத்தை அமல் படுத்துவ தோடு, நீர் வழிப்பாதைகளில், போக்கு வரத்தை செயல்படுத்தவும், அமைச்சர் நிதின் கட்கரி ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

தென்னக நதிகளில் நீர்வழி போக்குவரத்து

மதுரையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ், நதிகள் இணைப்பிற்கான, மத்திய அரசு நிபுணர் குழுவில், உறுப்பினராக உள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள நதிகளை, சிறப்பான வகையில் பயன்படுத்த, தென்னக நதிநீர் போக்குவரத்து திட்டத்தை, காமராஜ் முன்வைத்துள்ளார்.இதுகுறித்து, காமராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டில், எந்த மாநிலமும், நீர் இன்றி கஷ்டப்பட கூடாது என்பதே, என் நோக்கம். அதற்காக, நீடித்து நிலைக்கத்தக்க, நீர் பகிர்மான திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்துக்கும், தேசிய நீர்வழி போக்குவரத்து திட்டத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன.

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.ஆனால், நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதால், அனைத்து மாநிலங்களுக்கும், பல்வேறு பலன்கள் கிடைக்கும்.நதிகள் இணைப்பு திட்டத்தால், 3.5 கோடி ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மாறாக, நீர்வழி போக்குவரத்து திட்டத்தால், நாடு முழுவதும், ஆறு கோடி ஹெக்டேர் விவசாய நிலம் பாசனம் பெறும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தால்,

60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு காமராஜ் கூறினார்.

எதிர்ப்பு இருக்காது!

மழை, வெள்ள நீரை பயன்படுத்துவது குறித்து, காமராஜ் கூறியதாவது:

நதி இணைப்பு திட்டம், ஒரு திசை நோக்கி செயல்படும். மாறாக, நீர் வழி போக்குவரத்து திட்டம், இரு திசை நோக்கி செயல்படும். இந்த திட்டம் மூலம், மழை, வெள்ளத்தால், ஆண்டுதோறும் வீணாகி வரும், 1,500 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.நீர்வழி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றினால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். 2,000 கி.மீ., நீள, நீர்வழி போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்.

ஆண்டுதோறும், கோதாவரி நதி நீர் மட்டும், 3,000 டி.எம்.சி., கடலில் கலந்து வீணாகிறது. ஆனால், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் தண்ணீர் தேவை, இதில், 25 சதவீதம் மட்டுமே. நதிகள் ஓடும் மாநிலங்களில், அவற்றின் பயன்பாட்டுக்கு அதிகமான நீர் மட்டுமே சேகரிக்கப்படுவதால், இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதில், எந்த மாநிலத்துக்கும் சிரமம் இருக்காது.இவ்வாறு காமராஜ் கூறினார்.

- மோடி ஒழிக . . .
கூவுங்க நடுசெண்டர் நக்கிகளே . . .

மோடியும் அவர்தம் 100 ஐஏஎஸ் அதிகாரிகளும் 
உங்களுக்கும் உங்கள் முன்னேற்றத்துக்கும்   தலைமுறைக்கும் சேர்த்துதான்  உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நீ்ங்கள் மோடியை.....

.நீங்கள் மோடியை கண் முடி தனமாக எதிர்பிர்கள் என்றால் .நான் மோடியை கண்முடித்தனமான ஆதரிப்பதில் என்ன தவறு இருக்கிறது .
.
.
தவறிருந்தாலும் நான் மோடியை ஆதரிப்பேன்!!!
நண்பர் ஒருவர் கேட்டார் இத்தனை புள்ளி விவரங்கள் ஆதாரங்களோடு மெனக்கெட்டு மோடி அரசாங்கத்தை ஆதரிக்கறீர்களே???

உங்களுக்கு ஆட்சியின் மீது விமர்சனம் இல்லையா???

இருக்கிறது உங்களை விட பல மடங்கு விமர்சனங்கள் இருக்கிறது எனக்கு!!

நான் ஆதரித்து எழுதும் நீட் தேர்வாகட்டும் GST ஆட்டும் உங்களின் எண்ணவோட்டத்தில் அல்லாமல் எனக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு (ஆனால் கண்டிப்பாக வேண்டாம் என்றோ இப்போதைக்கு வேண்டாம் என்றோ அல்ல!!!)

ஆனால் இன்றைய நிலையில் இந்த அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் அதனை வைத்தே அரசாங்கத்தை காவு வாங்க துடிக்கும் போலி மதவாதிகளை தோலுறிக்க என் விமர்சனங்களை தவிர்க்க தேவையாகிறதே!!!
எடுத்துக்காட்டு! !!

சில நாட்களாக பெட்ரோல் விலை கனிசமாக உயர்ந்து கொண்டே சென்றது (!) NEET ஐ இறக்கிவிட்டு அடுத்து இதை பாடையில் ஏற்றி விட்டார்கள்

ஆனால் அதற்கு பின்னர் உள்ள உலக அரசியல் என்ன???

பெட்ரோலிய ஏற்றுமதியின் ராஜாவாக திகழும் exxonMobil நிறுவனம் இந்தியாவோடு 2009 இல் போட்ட ஒப்பந்தத்தின் பழைய சந்தை மதிப்பிலேயே இன்றும் விற்றுக் கொண்டிருந்தான்!!!

இந்தியா அந்த ஒரு நிறுவனத்தை மட்டுமே நம்பி 25 சதவித எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்தது!!!

இந்தியாவின் பல கோரிக்கைகளை அலட்சியபடுததியது அந்நிறுவனம்.

தொடர்ந்து பெட்ரோலிய துறை சீர்திருத்தங்களால் பலப்படுத்தபட்டிருந்திய அரசாங்கம் அதிரடி முடிவொன்றை எடுத்தது விலையை குறைக்கும் வரை இறக்குமதியை ரத்து செய்கிறோம் என்று!!!

25% இறக்குதி குறைப்பால் சில மாதங்களாக பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே போனது.

அதனால் ஆடிப்போன ExxonMobil நிறுவனம் முந்தாநாள் விலையை குறைத்து ஒப்பந்தத்தை மறுசீ ராய்வு செய்துள்ளது.

இனியும் சில வாரங்கள் உயரும். பிறகு இதன் பயன் மக்களுக்கு வரும் (Time taken to Export the Petroleum and to process the same)

இதுக்கு ஆயிரம் ஆதாரங்கள் Reuters போன்ற உலக நாளேடுகளில் நான் தரமுடியும்!!

இவ்வளவு சொன்னாலும் ஆதாரத்தோடு மீண்டும் எல்லாரும் சொல்லுறாங்கனு மோடி ஒழிகம்பீங்க.
சரி இதுமட்டுமா உலக வல்லரசுகளின் Medical Mafia வை வீழ்த்தி Cancer போன்ற நோகளுக்கான Genric Medicine விலையை 30% சதவிதம் குறைத்தது

Heart valve Stent, செயற்கை மூட்டு விலையை 70 % மேல் குறைத்தது (இந்தியாவில் அதிக உயிரிலப்பு கேன்சர் ஹார்ட் வாலவ் தேவைகளால் நடைபெறுகிறது)

Vicks உட்பட 300 மேற்பட்ட உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற மருந்துகளுக்கு தடை(அதை மீண்டும் நீதிமன்றத்தில் கம்பெனிகள் வென்று இருக்கலாம் ஆனால் அது இடைக்கால நிலவரமே Permanent Ban On the Way!!!

இந்திய விவசாயிகளின் விவசாயத்தை நிர்மானித்துக் கொண்டிருந்த Mantanzoக்கு கட்டுப்பாட்டை விதித்து தேவைனா இரு இல்னா கெளம்புனு சொன்னது!!!

அவ்வளவு ஏங்க இன்னைக்கு கல்வி வியாபாரம் ஆக காரணம் Donation அதை ஒழித்தே விட்டார் மருத்துவ படிப்பில் அதை பின் தொடர இருக்கிறது Engineering. படிப்பும்

இப்படி.
அத்தனைக்கும் ஆதாரத்தோடு விளக்கினாலும் மோடி ஒழிக என்று கூப்பாடு போடுபவர்கள் இருக்கும் ஒரு இடத்தில் அவரை ஏன் விமர்சிக்கணும்?

நிச்சியம் கண்ணை மூடிக்கிட்டு ஆதரிப்பேன்.

பிடிக்காதவங்க படிக்காதீங்க!

எங்கப்பா திராவிடம்...

இந்திய வரலாற்றில் மிகப்பிரமாண்டமான திட்டம் "சாகர் மாலா".கடல் தற்சார்பு வாழ்வை ஆட்டிப்படைக்கப் போகிறது.

எங்கப்பா திராவிட நடுசெண்டர்ஸ்
வாங்கப்பா வந்து
மோடி ஒழிகன்னு கோஷம் போடுங்க . . .

இதனால கிடைக்கும் பலன் எல்லாம்
மோடி குடும்பத்துக்குதானே போகப்போகுது . .

Wednesday, August 23, 2017

என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது.

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன்.
"இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு". அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.
தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள். 
யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.
மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?
மனித நேயம் சாகவில்லை...
தானியங்கு மாற்று உரை இல்லை.