கேசவன்....குருவாயூர் கோயில் யானை இதன் படத்தை நிறைய பேர் வீட்டில் மாட்டி வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன் ...ஏன் இந்த யானைக்கு மட்டும் முக்கியத்துவம் என தேடி இதன் கதையை படித்தபோது சிலிர்ப்பாக இருந்தது உங்களுக்காக அந்த தகவல்கள்..
.மற்ற கோயில் யானைகளை விட கேசவன் வித்தியாசமானது...கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாது..குருவாயூரப்பனை தவிர வேறு எந்த தெய்வ சிலைகளையும் தன் மீது சுமக்காது...வேறு கோயில்களுக்கும் செல்லாது...கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடும்..ரகளை செய்யாது..குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான். ஆலவட்டம்,குடை,செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவான். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.
ஒருமுறை குருவாயூர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல் மூட்டைகளை கொண்டு வந்து தீயை அணைத்தது..1976 ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில் கேசவன் மீது உற்சவ மூர்த்தியை ஏற்றினார்கள் ஆனால் கேசவனால் நடக்க முடியவில்லை..உடனே உற்சவரை வேறொரு யானை மீது ஏற்றினர்கள்..அதை பார்த்துக்கொண்டு கண்ணீர் விட்டபடி மாலை வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை மண்ணில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது.