Thursday, December 31, 2020

சனிபகவானுக்கு செய்ய வேண்டிய பொதுவான பரிகாரங்கள்....

 #SuryaTrust

#Arunagiri

#our Dreams

சனிபகவானுக்கு செய்ய வேண்டிய பொதுவான பரிகாரங்கள்:
✓ #ஆலயங்களுக்கு தீபம் எரிய தேவையான எண்ணெய் தானம் செய்வது.
✓ #தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.
✓ #கால்நடைகள் போன்ற ஜீவராசிகளுக்கு உணவளிப்பது.
✓ #சாலையோரத்தில் வசிக்கும் மனிதர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.
✓ #மாதத்தில் ஒருவருக்காவது ஒருமுறையாவது உணவளிப்பது.
✓ #வயதில் மூத்தவரை மரியாதை செய்வது தேவையான உதவிகளை செய்வது.

✓ #மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வது.
✓ #கோவில் சுற்று பிரகாரங்களை தூய்மைப்படுத்துவது.
✓ #நீங்கள் படித்த பள்ளிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்வது.
✓ #காலணிகள் தேவைப்படுவோருக்கு வாங்கித் தருவது.
✓ #ஆலயங்களுக்கு கோவில்மணி வாங்கித் தருவது / அமைத்துக் கொடுப்பது.
மேலே குறிப்பிட்ட பரிகாரங்கள் அனைத்தும் பொதுவாக யார் வேண்டுமானாலும் தாராளமாக செய்யலாம்.

Monday, December 21, 2020

பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்...

#Sundarji
#பக்தி என்றால் #மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...

அதற்கு மணிவாசக #பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...

பாடல்

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!

#பாடல் விளக்கம்:

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு #எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....
ஆனாலும் சிவ பெருமான் மணிவாசக பெருமானை விடுவதாக இல்லை மீண்டும் கேட்கிறார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் மணிவாசகர் பாடுகிறார்....

பாடல்

#உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே...!

பாடல் #விளக்கம்:

சொந்தங்கள் எனக்கு வேண்டாம், ஊர் வேண்டாம், நல்ல பெயர் வேண்டாம், நல்ல படிப்பு அறிவு வேண்டாம் உன் அருள் இருந்தால் அது தானாக கிடைக்கும். குற்றாலத்தில் அமர்ந்து இருக்கும் ஆனந்த கூத்தனே நான் உன் திருவடிகளை தேடி தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும். பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்....

என்று பக்தியால் மனம் #உருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர் பெருமான
#Sundarji

சிறுதானியத்தினை_இழந்தோம்_பெருநோய்களுக்கு_ஆளானோம்

#சிறுதானியத்தினை_இழந்தோம்_பெருநோய்களுக்கு_ஆளானோம்..!!!

சிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகளைக் கீழே பார்க்கலாம்.

1) ஊட்டச்சத்து நிறைந்தது:

உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

2) கரோனரி தமனி கோளாறுகளைத் தடுக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாருகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப் படுகிறது.

3) அதிக அளவு வைட்டமின் ‘பி’:

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திரமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் ‘பி’ இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (Low-density lipoprotein) அளவினை இரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. இது இரத்த நாளங்களின் தடிப்பு (Atherosclerosis) மற்றும் இரத்தக் கசிவு (Hemorrhage) ஏற்படுவதிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

4) பசையம் (குளுட்டன்) அறவே இல்லை:

காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறுதானியங்களாகும். ஏனெனில் சிறுதானியங்களில் நிறைந்திருக்கும் புரதச்சத்து தான் இதற்குக் காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளைவிட சிறுதானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் போன்ற தேவையற்ற கூடுதல் பொருட்கள் சிறுதானியங்களில் இல்லை. சிறுதானியங்களில் இருக்கும் புரதக் கூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் அதிகச் சத்துக்கள் அடங்கிய சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன் ‍ Gluten) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழுக் கோதுமையில் அதிக அளவு பசையம் (க்குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.

5) விரைவான உடல் எடை இழப்பு:

சிறுதானியங்கள் டிரிப்டோபான் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன்மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதைத் தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6) க்கோலான் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மாற்றும் தாவர ஊட்டச்ச சத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்றுநோய் (Colon cancer) வளரும் அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. லிக்னைன் (Lignan) எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலுருந்தும் 50% சதவீதம் குறைக்கலாம்.

7) உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைத்தல்:

தமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்த்துமா) மற்றும் ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுவதன் அளவினைக் குறைக்கின்றது.

8) பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுத்தல்:

பசையம் ஒவ்வாமை நோய் (Celiac disease) என்பது சிறுகுடலைச் சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதினால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் (குளூட்டன்) போன்ற பசைத்தன்மைக் கொண்ட பொருளைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதன் காரணமகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் முற்றிலுமாகப் பசையம் (குளுட்டன்) என்ற பசையம் கிடையாது என்பதை நான்காவது நன்மையில் பார்த்தோம். சிறுதானியங்களை முதலிலிருந்தே சாப்பிட்டு வந்தால் இந்நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

9) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:

சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் செரிமானத்திற்கான செயல்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது. சிறுதானியங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கிறது.

10) நார்ச்சத்து நிறைந்தது:

சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்குத் தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாப் பெண்கள் நார்ச்சத்து மிகுதிஆன உணவினை உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாக்வதார்கு சரியான தீர்வாக அமையும். குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுவதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

11) உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளின் ஆதாராம் :

சிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருகள் மிக விரைவில் வயதாதாவற்கான செயல்முறையின் வேகத்தைதையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாகச் சிறியவர்கள் முதல் பெரியோர் அனவருக்கும் பரிவ்துரைக்கின்றனர்.

12) தசைகள் சீரழிவதைக் குறைக்கிறது:

சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.

13) தூக்கக் குறைபாட்டினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப் படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல் படுபவர்கள் இரவில் சிறுதானியங்களை உண்ணலாம்.

14) மார்பகப் பால் உற்பத்தி அல்லது தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது:

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் கேழ்வரகு உடலின் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறாது. எனவே கேழ்வரகின் சுகாதார நலன்கள் நமக்கு மிகுந்த வியப்பை உண்டு பண்ணுகின்றன.

15) மாதவிடாய் கால‌ முதுகுவலிக்கு நிவாரணம்:
சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்த அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறது.

16) அதிக அளவு பாஸ்பரஸ்:

சிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் உடலில் உள்ள் செல்களின் வடிவத்தைக் கட்டமைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் “அடினைன் டிரைபாஸ்ட்” (Adenosine triphosphate – ATP) எனப்படும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலைப் பலமடங்காக அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு (Lipid) கூட்டமிப்பினைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. ஒரு கோப்பை சிறுதானியங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டால் ஒரு நாளைக்கு தேவைப்படும் பாஸ்பரஸின் அளவில் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்கிறது.

சிறுதானியங்களை உண்பதால் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள்:

17) தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது:

சிறுதானியங்களில் “எல்‍…லைசின்” அல்லது விளம்பரங்களில் “எல்‍…புரோலைன்” என்று அழைக்கப்படும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் கொலாஜெனை (Collagen) (தமிழில்: வெண்புரத இணைப்புத்திசு) உருவாக்க உதவுகின்றன. இத்தகைய கொலாஜென் சருமத்தின் திசுக்களுக்கு ஒரு அமைப்பைக் கொடுக்கிறது. இவ்வாறு சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் கொலாஜென் அளவு அதிகரிக்கிரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை (Skin Elasticity) மேம்ப‌டுத்துகிறது. இதனால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

18) விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது:

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளன என்பதை முன்னரே கண்டோம். இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் அதிக அளவில் உள்ள சிறுதானியத்தை  உணவில் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுகின்றன. மேலும் உடலில்  உள்ள தேவையற்ற தீவிரமானவற்றை நடுநிலையாக உதவுகின்றன.

மேற்கூறப்பட செயல்களால் தோலின் மீது தென்படும் வயதாவற்கான அறிகுறிகளைத் தலைகீழாக மாற்ற உதவுகிறது. இவை சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள யூபிகயிணோன் (Ubiquinone) முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழுகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

19) வடுக்களைக் குறைக்கிறது:

திசுக்களில் ஏற்படும் வடுக்கள் ஆரோக்கியமான சருமத்தைவிட வித்தியாசமான செல் அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் வடுக்கள் ஏற்பட்ட சருமம் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. சிறுதானியங்களில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளில் ஒன்றான ஆலியம் (Alium) காணப்படுகிறது. இது வடுக்கள் நிறைந்த திசுக்களில் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. ஆலியம் புதிய தோல்வளர்ச்சியில் கலந்து வடுக்கள் குறைவதற்குப் பயன்படுகிறது. இது தோல் பரமரிப்பு அல்லது தோல் பழுது பார்க்கும் (Skin Repair) அமைப்பின் வேகத்தை அதிகரிக்கிறது. மற்றும் தோலில் அமைப்பினை சேதமடைவதிலிருந்து தடுக்கிறது.

20) சூரியன் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்டமின் ‍சி மற்றும் வைட்டமின்-பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் தோல் புற்றுநோய்க்கு எதிராகச் சருமத்தைப் பாதுகாக்கிறது. சூரியனால் ஏற்படும் சேதத்தினால் தோலின் நிறம் மந்தமாவதுடன் மேலும் தோலினை உயிரற்றதாக மாற்றி விடுகிறது. ஆனால் சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன. மேலும் இந்தச் சத்துக்கள் சூரிய ஒளியுடன் தொடர்புடைய தோலின் நிறமாற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுகிறது.

21) நிறத்தைனை அதிகரிக்கிறது:

சிறுதானியங்களில் வைட்டமின்-ஈ நிறைந்து காணப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலுக்கு ஒரு வியத்தகு வைட்டமினாகக் கருதப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலின் அடுக்குகளில் ஊடுருவிச் சென்று இயற்கையாகவே காயத்திற்கான சிகிச்சை (Wound healing) தன்மைய அதிகரிக்கிறது. இது தோலிற்கு ஒரு பாதுகாப்பான அடுக்கினை ஏற்பட்த்துகிறது. இதனால் நுண்ணுயிரிகளின் அபாயத்திலிருந்து காயத்தினைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-ஈ யினால் தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும்.

22) இளமையான சருமம் பெறுதல்:

அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யும் செல்களைப் பாதுகாக்கின்றன. எனவே இவை சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட செல்களை மேலும் பலப்படுத்துகிறது.

23) உடலின் ஈரப்பத்த்தினை அதிரிக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் அவை இயற்கையான ஈரப்பத்தினைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இவை மந்தமான தோற்றம் மற்றும் வறண்ட சருமத்தினை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் விளங்கச் செய்கிறது.

24) முகப்பருவினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் காணப்படும் ஒரு வகையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளானக் கொழுப்புத் திசு (Lipoic) உயிரணு வளர்சிதை மாற்றம் சுழற்சியினை அதிகரிப்பதன் மூலம் மதிப்பு மிக்க அழற்சியற்ற விளைவை உருவாக்குகிறது. இத்தகைய அழற்சியற்ற பொருள் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்படுக்கள் மற்றும் தோலின் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

தினை

சிறுதானியங்களால் கூந்தலுக்குக் கிடைக்கும் பயன்கள்:

25) மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது:

சிறுதானியங்களில் புரத்ச்சத்து நிறைந்துள்ளன. முடி இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் முதன்மையானவை இந்தச் சிறுதானியங்கள். ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடிகளுக்குப் போதுமான அளவுப் புரதம் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. பெரும்பாலான முடிகள் புரதத்தினாலேயே செய்யப்படுகின்றன. முடி செல்களின் உள்புறம் காணப்படும் ஒருவகைப் புரதம் கெரடின் (Keratin) என்று அழைக்கப்படுகிறது. இந்த கெரடின் என்ற புரதம் தான் ஒவ்வொரு முடியின் கலவைக்கும் நேரடிப் பொருப்பாக உள்ளது. புரதத்தின் பற்றாக்குறை காரணமாக அல்லது புரதம் இல்லாத காரணத்தினாலும் கடுமையான முடி இழப்பு நேரிடலாம். எனவே சிறுதானியங்களைப் போதுமான அளவில் உட்கொள்ளும் போது முடி வேகமாக வளர்ச்சியடைகிறது.

மெலும் சிறுதானியங்கள் முடியினை வலுவானதாகவும் உடைந்து போகும் தன்மையினையும் குறைக்கிறது.

26) உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம், அரிப்பு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுகிறது:

சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி (Psoriasis) மற்றும் பொடுகு (Dandruff) போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. முன்கூட்டியே வழுக்கை ஏற்படுவதிலிருந்தும் விடுபடச் சிறுதானியங்கள் நன்மை அளிக்கின்றன. சிறுதானியங்களை தொடர்ந்து உண்பது வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடவும், உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

27) முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது:

சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.

28) முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துகிறது:

மன அழுத்தம் உடலில் கார்டிசோல் (Cortisol) அளவினை அதிகரிக்கிறது. இவ்வாறு கார்டிசோல் அதிகரிப்பது முடி அதிக அளவில் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.

29) இளநரையைத் தடுக்கிறது:

இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது செம்பட்டையாக மாறுவது சிசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (Antioxidants) திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன்மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. இதனால் சிறுதானியங்களை இளைஞர்கள் இளஞிகள் அதிகம் பயன்படுத்துவது நல்லது.

30) கீழ்வாதம் எலும்பு முறிவிலிருந்து மீள உதவுகிறது:

சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொண்டால் கீழ்வாதம் (Rheumatism) வருவது தடுக்கப்படுகிறது. மேலும் எலும்பு முறிவிலிருந்து மிக விறைவில் மீள உதவி செய்கிறது.

தற்போதய காலக்கட்டத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உணவு வகை சிறுதானியமாகும். சிறுதானியங்களில் நிறைதுள்ள ஊட்டச்சத்துக்களை மஅத்ற்ற உணவு வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் உள்ளன என்பதை தெரியாமலே நாம் இருந்துவிட்டோம். ஆனால் இப்போது இந்தக் கட்டுரையின் மூலைம் சிறுதானியங்களின் நம்பமுடியாத நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியும. எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இப்பொழுதே சிறுதானியங்களை உங்களின் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து மகிழுங்கள்
#Sundarji

Thursday, December 3, 2020

இல்லறதர்மம்

#இல்லறதர்மம்.......

கட்டிய #மனைவியை  கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை #கர்மாவே வழி நடத்தும் .

 96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே,அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும். 

சிவமாக இருந்தால் மட்டும்  சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும். 
சிரசு ஏற பல வழி 
1.#தியானம்மூலம் 
2.#பக்திமூலம் 
3.#ஞானமூலம் 
4.#யோகமூலம் 
5.#தீட்சைமூலம் 
6.#சிவசக்திமூலம் 
இன்னும் எத்தனையோ மூலம் வழி உள்ளது சிரசு ஏற. 
ஆனால் 
சிறந்த மூலம்  இல்லற தர்மம். 

சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது ,
சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே  பிறவியே சிக்கலே 
மனம் பொறுத்தம்பூமியிலே ஜெயிப்பது இல்லை 
ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும்.
அந்த சக்தியோடு சிவம் சேரும் போதே 
சர்வமும் சாந்தி ஆகும்.
சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே......!!!
ஆனால் 
சக்தியின் கண்ணீருக்கு  சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை 
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி 
தர்மத்தில் உள்ளது உண்மையே
ஆனால் 
உறவுகளை கொண்டே உலகை வெல்வதும்பிறவி பிணி அறுக்கவும் ஒரு வழி உள்ளது உலகம் அறியாதது. 

"சொந்தம் என்பது 
பழைய பாக்கி என 
அறிந்தவணுக்கு 
சொந்தம் சுமை இல்லை"

"நட்பு என்பது 
பழைய பகை என்பதை 
பண்போடு அறிந்தவணுக்கு 
பதற்றம் இல்லை "

எதிரி என்பவன் 
தனது கர்மாவின் 
தார்மீக கணக்கே என 
தன்மையோடு உணர்ந்தவனுக்கு
எதிரி 
எதிரி இல்லையே

உனது எதிரியும் நீயே!
உனது செயலே கர்மா ஆகி 
அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும். 
ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என நீ 
உணரும் போது 
உன் எதிரி முகத்தில உனது கர்மா 
உனது கண்களுக்கு தெரிய வந்தால் 
எதிரி உனக்கு எதிரே இருந்தாலும் 
கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும்  உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்காலே
பழைய கணக்கு புரிந்தால் 
பந்த பாசம் சகோதரத்துவம் மீது  பற்று அற்ற பற்று வைத்து பிறவி கடமை வெல்லலாம். 

கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மனைவி 
யார் என்றும் புரியும்! 

தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாய் வழி ஏழு ஜென்ம கர்மாவில்இருந்து தப்பிக்கலாம்! 

உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொறுத்து உபகாரமாக உதவி வந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழு ஜென்ம சமூதாய கர்மாவில்இருந்து தப்பிக்கலாம். 

கோயில் போனாலோ,மகா குலத்தில் 
குளித்தாலோ ஒன்னும் மாறாது!

சிறு இன்பம் மட்டும் ,சிறிது காலம் கிடைக்கும் அவ்வளவே 
ஆனால் 
ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால்பிறவி பிணி மொத்தமாக தீரும் அது "மனைவியே"

மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே சிரமம் மட்டும் அல்ல அது தான் உலகிலேயே சிறந்த தவம்! 

தவம் என்பது சாமாண்யன்களுக்கு சிரமமே 
கட்டிய மனைவியையும் உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால்அதுவே 
உலகின் சிறந்த தர்மம் சிறந்த தவம்!

தாய் தந்தையை  வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை. 
பித்ரு தோஷம் நீங்க. 
உறவுகளை மதித்தால் கிரக தோஷம் நீங்க திருவண்ணாமலை இடைக்காடரை
தேட தேவை இல்லை,நவ கிரகமும் 
சுற்ற தேவை இல்லை.

மனைவியை 
பெற்ற பிள்ளையை நேசித்தால் அவர்களை ஆனந்தமாக வைத்தால் 
கர்ம விமோஜனம் தேட அகத்தீசனை தேடி 
பாபநாசம் போக தேவை இல்லை 
இதற்கு தான் இல்லற வாழ்க்கை அமைத்தான் நமது முப்பாட்டன் ஆதி யோக வம்சம். 

"மனைவி அழும் வீடே நரகம்"
மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.சக்தி உணர்ந்தால் மட்டுமே சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!
என்றும் இரை
தேடும் மனிதா,,,,,,, 

கொஞ்சம் நீ 
இறைவனையும்  தேடு ........
#சுந்தா்ஜீ

Tuesday, November 17, 2020

அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா?

#அடடே இப்படி #ஒரு விஷயம் இருக்கா? 
#Sundarji
#Tamilan
#suryatrust

#திருமண #அழைப்பிதழில் 
மணமக்கள் பெயருக்கு முன்னால்...
***************************************
#திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின்  மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.

 #திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும்.

#திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.

           #எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், #வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.

#திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் #திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.

#படித்ததில் பிடித்தது..

Tuesday, November 10, 2020

சித்தர்களின் சக்தி

 #சித்தர்களின் #சக்தி

#Sundarji

#Suryatrust

அந்த காலத்தில் இராஜாக்கள் சித்தர்களின்/மகான்களின் அருளாசியோடு ஆலோசனைப்படி ஆட்சி செய்து வந்ததுடன் அவர்கள் சொன்ன முறைப்படி அவர்களுக்கேற்ற சக்தி கூட்டும் ஸ்வாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து அந்த இறைவனை உளமார வணங்கி வெற்றி வாகை சூடி வந்தனர். அதனால் அந்த ஆலயங்கள் சக்தி நிறைந்தவைகளாய் விளங்கின. இன்னும் பல ஆலயங்கள் சித்தர்கள் ஜீவ சமாதிகளோடு விளங்குவதால் அவைகளும் அபரிமிதமான சக்தி நிறைந்தவையாய் விளங்கின. சாதாரண மனிதன் எழுப்பும் ஆலயங்களை விட சித்தர்கள் தாங்கள் வணங்கி வந்த உபாசனை தெய்வத்திற்கு எழுப்பியுள்ள ஆலயங்கள் அவர்கள் இறைவனுக்கு தினசரி மூலிகைகளால், வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து அதற்கான சக்தி நிறைந்த மந்திரங்கள் சொல்லி உரு ஏற்றி வைத்திருக்கும் சக்தி மற்றும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவர்கள் செய்த தியானம்,

Sundarji,SuryaTrust




மந்திர உச்சாடனம், செய்யும் தான தர்மங்கள், செய்து வரும் நற்காரியங்கள் இவைகளால் அவர்கள் பெற்று வைத்து இருக்கும் சக்தி ஆகிய இரண்டும் சேர்ந்து மிகவும் சக்தி நிறைந்தவையாய் திகழ்கின்றன. அதனால் அங்கு சென்று வழிபடும் போது அங்கு நிறைந்துள்ள அபரிமிதமான #அதிர்வலைகளால் (நிரம்பப் பெற்று இருப்பதால்) அங்கு தொடர்ந்து சென்று வழிபட்டு வரும் போது அவர்களுக்கே தெரியாமல் நிறைய நல்லது நடக்க ஆரம்பிக்கும். அதனால் தான் சித்தர்களை, #சித்தர்கள் கட்டிய ஆலயங்களை தரிசித்து விட்டு நேராக வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்வது. இது தான் அந்த ரகசியம். வேறு ஒன்றும் இல்லை.

Friday, November 6, 2020

தஞ்சாவூர், #பொறியாளர்

சமீபத்திய #தஞ்சாவூர், #பொறியாளர் ஒருவர் மூலம் #தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு #தகவல்.🛕🛕 

கோபுர உச்சியை #உற்று நோக்குங்கள்.
கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்
இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர
கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்
கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்
எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.
ஆக, எட்டு #நந்தியின் எடை மொத்த எடை 80 டன்.

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன #விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்
4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட
கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..
இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு
அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல 
அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்
புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு
அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்
இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.
அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,
ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்க்காக..? 🗣 

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி
மிக பலமான இணைப்பை பெறுகின்றன.

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,
ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசியம் இது.

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது. 

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்..

சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும்  என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது.
#Sundarji
#Arunagiri

Monday, October 26, 2020

சித்தர்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பல நாட்கள் இருப்பது போல நம்மாலும் இருக்க முடியுமா?

#அருணகிாி
#பசி


சித்தர்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பல நாட்கள் இருப்பது போல நம்மாலும் இருக்க முடியுமா? அதற்கு என்ன வழி? என்று யோசித்து தேட ஆரம்பித்தேன்.  அப்போது தற்செயலாக ஒரு வயதான சித்த வைத்தியரை சந்தித்தேன்

நான் சந்தித்த அந்த வைத்தியர் முதியவராக இருந்தாலும் பல முற்போக்கான கருத்துக்களை கொண்டவராக இருந்தார். அவர் பசிதாகம் இல்லாமல் பல மணிநேரம் நம்மாலும் இருக்க முடியும் என்று கூறி ஒரு மூலிகை முறையை எனக்கு சொன்னார்.

குளத்து தாமரையை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். கல் தாமரை என்று ஒன்று இருக்கிறது என்ற சங்கதி நம்மில் பலருக்கும் தெரியாது. எனக்கும் கூட அப்போது நிலைமை அப்படிதான். 

அந்த கல்தாமரையை கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் பனிரெண்டு மணிநேரம் ஊறவைத்து குடித்துவிட்டால் அடுத்த பனிரெண்டு மணிநேரத்திற்கு பசியே எடுக்காது. தாகம் வராது. உடலில் சோர்வு என்பதே தெரியாது என்று சொன்னார். 

அதே நேரம் ஒருமணிநேரம் ஊற வைத்தால் ஒருமணி நேரம் பசிக்காது. இரண்டுமணி நேரம் வைத்தால் அந்த மணிநேரம் வரை பசி எடுக்காது. நீ எவ்வளவு நேரம் ஊற வைக்கிறாயோ அவ்வளவு நேரம் அது வீரியத்தை காட்டும் என்றார். 

கல் தாமரை எங்கே கிடைக்கும் என்று அவரிடம் கேட்டேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று சொன்னார்.

உடனேயே என் பரிசோதனையை ஆரம்பித்து விட்டேன். நாட்டுமருந்து கடையில் கல்தாமரையை வாங்கினேன். தாமரை என்றவுடன் அது பூவை போல இருக்கும். ஒருவேளை பதப்படுத்தி சருகு போல இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 

இந்த கல்தாமரை காய்ந்து போன பாசிபோல் இருந்தது. அதை தண்ணீரில் போட்ட பத்தாவது நிமிடம் புத்தம் புதிதாக விரிந்து விட்டது. மலர்ச்சியாகவும் இருந்தது. பத்துமணி நேரம் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து விட்டேன். 

உண்மையில் அன்றைய  பகல் முழுவதும் எனக்கு பசி இல்லை. அதே நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமே என்ற எண்ணமும் இல்லை. சோர்வும் இல்லை. தாகமும் இல்லை. உண்மையில் அசந்து போய்விட்டேன்...

தொடர்ந்து பலமணிநேரம்
தவம் செய்ய விருப்பம் உள்ளவர்கள்... இந்த கல்தாமரையை பயன்படுத்தலாம்....தொடர்ந்து தரத்தில் அமரும் பட்சத்தில் உடல் சூடாவதும் கால்கள் சூகை பிடிப்பதும் இயற்கை..

இந்த கல்தாமரையை பயனபடுத்தும் போது உடல் சூடாவதில்லை...கால்கள் சூகை பிடிப்பதில்லை...
தியானம் செய்ய அருமையான மூலிகை இந்த கல்தாமரை.....
#மு.அருணகிாி

நான் யாா்?

#நான் #யாா்?
#அருணகிாி

இந்த உலகத்திலேயே மிக மிக கஷ்டமான கேள்வி "நான் யார்?" என்பது தான்.

இதுவரை நான் படித்த ஆன்மீக புத்தகங்களில் அப்புத்தக ஆசிரியர்கள், "நீ யார்?" என்பதை முதலில் கண்டுபிடி என்று கூறும் போதெல்லாம் குழம்பிப் போய் இருக்கிறேன்.
சில சமயங்களில், "அட போங்கடா", என்று அந்தக் கேள்வியைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய் இருக்கிறேன்.

"நான் என்பது உன் பெயரா?"
"நான் என்பது உன் உடலா?"
"நான் என்பது நீ கண்ணாடியில் பார்க்கிறாயே அந்த முகமா?"
 - இது போன்ற கேள்விகள் வந்த போதெல்லாம் முதலில் எரிச்சல் அடைந்திருக்கிறேன்..

காலப் போக்கில், இந்த அனைத்து கேள்விகளும் என் மூளைக்குள் ஏதோ வேலை செய்து அலசி ஆராய்ந்து என்னென்னமோ பதில்களைத் தந்தன...

என் புரிதலை, வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்களாகிய உங்களுக்குக் கடத்த விரும்புகிறேன்.
............

முதலில் சில கேள்விகள்:
1. உடல் - உயிர் - ஆன்மா: இந்த மூன்றும் ஒன்றா?
2. இந்த மூன்றில் உயிருக்கும் ஆன்மாவிற்கும் உங்களால் வித்தியாசம் கண்டு கொள்ள முடிகிறதா?
3. உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு என்ன?
4. உயிருக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு என்ன?
உடலுக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு என்ன?
5. உயிர் என்பது உடலுக்கா? ஆன்மாவிற்கா?
..........

மேற்கூறிய இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் குறைந்த பட்சம், கேள்வியாவது புரிந்ததா?

சரி... மேலும் சில கேள்விகள்:
........
நண்பர்களே... நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா?
ஒரு குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் பரம சாதுவாக இருப்பார்கள், ஆனால், அவர்கள் மகன் ஊரில் பெரிய ரௌடியாக இருப்பான்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் அண்ணன் தம்பிகள் என்றால், அதில் ஒருவன் 1165 மதிப்பெண் எடுத்திருப்பான் 12 ம் வகுப்பில்.... இன்னொருவன் 650 மதிப்பெண் எடுத்திருப்பான்...
ஒரு குடும்பத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீர் என்று ஒருவன் சன்யாசம் சென்று விடுவான்.
....

நண்பர்களே... நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா?
விஞ்ஞானம் சொல்வது உண்மை என்றால், x y கிரோமோசோம் கணக்கில் இன்னார்க்கும் இன்னார்க்கும் பிறந்த குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று விஞ்ஞான அடிப்படை சூத்திரத்தில் மேலே நான் கூறிய அந்த குடும்ப நிகழ்வுகள் எப்படி நடந்திருக்க முடியும்.. நீங்கள் என்ன தான் தாத்தா பாட்டி, கொள்ளு தாத்தா வரைக்கும் வரைபடம் போட்டாலும் x y கிரோமோசோம் சொல்கிற விஞ்ஞானத்தால் இந்த "நான் யார்?" என்கிற கேள்வியை விளக்கி விட முடியாது...

முந்தைய ஜென்மத்தில் ஆன்மீக வளர்ச்சி அடைந்த மனிதன் தான் இந்த ஜென்மத்தில் திடீர் சன்யாசம் சென்று விடுகிறான்.
முந்தைய ஜென்மத்தில் சேர்த்து வைத்த ஞானம் தான் இந்த ஜென்மத்தில் 1165 மதிப்பெண் பெற வைத்தது....

இப்போது யோசித்துப் பாருங்கள், நண்பர்களே...

இப்போது நீங்கள் அனைவரும் என்ன நிலையில் இருக்கிறீர்களோ அது எல்லாம், நீங்கள் பல ஜென்மங்களாக சேமித்து வைத்த வாழ்வு.
அந்த ஒரே காரணத்தால் தான் எனக்கு இந்த உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட மரியாதை உண்டு, ஏனென்றால், முன் ஜென்மங்களில் நல்ல செயல்கள் செய்யாமல்   உனக்கு மனிதப் பிறவி என்கிற ப்ரோமோஷன் கிடைக்க வாய்ப்பில்லை.

...
ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்:
தினமும் நான் புறாக்களுக்கு உணவு போடுவதுண்டு... அந்தப் புறாக்கள் உணவு உண்பதை அப்படியே ரசித்துப் பார்ப்பது என் வழக்கம். அவற்றில் ஒரு புறா, மற்ற புறாக்களை அடித்து விரட்டும்...
வேறு யாரையும் அந்த தானியங்களைக் கொத்தி தின்ன விடாது. ஒரு நாள் இன்னொரு புறாவின் கண்ணிலேயே கொத்தி விட்டது..இது தினசரி  தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தப் புறாவைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்: "ஏன் இப்படி கொடுங்கோல் ஆட்சி செய்கிறாய்? உனக்கு இன்னும் எத்தனைப் பிறப்புகள் கடந்து மனிதப் பிறவி கிடைக்குமோ?" என்றெல்லாம் எனக்குள் புலம்பிக் கொள்வேன்.
...
நண்பர்களே...நாம் மனிதனாகப் பிறந்தது நாம் சேர்த்து வைத்த சொத்து..  நீங்கள் இன்று என்ன குணம் படைத்தது இருக்கிறீர்களோ அது நீங்கள் யுகம் யுகமாக சேமித்து வைத்த குணம்... இந்த புரிதல் வந்து விட்டால் போதும் "நான் யார்?" என்ற கேள்விக்கான பதில் தேடும் முனைப்பின் முதல் படியில் நிற்கிறீர்கள் என்று பொருள்..
...
வாழ்க்கையில் சேட்டை செய்யும் மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் மிகப் பரிதாபமாக இருக்கும்.. "எவ்வளவு கஷ்டப் பட்டு அடைந்த இந்த மனிதப் பிறவியை, அந்த குணத்தை இப்படி சீரழித்துக் கொள்கிறானே, இவன் தன் ஆன்ம பயணத்தை அறியாத ஒரே காரணத்தால் இப்படி ஆன்மாவை கீழ்நிலைக்கு கொண்டு செல்கிறானே," என்று தோன்றும்...
...
கிளாஸ் ல first ரேங்க் வாங்கிய மாணவன் திடீர் என்று திமிர் பிடித்துப் போய் கடைசி ரேங்க் வாங்குவது போன்றது, மனிதப் பிறவி என்கிற first ரேங்க் வரை வந்து விட்டு ரௌடித்தனம் செய்வது...
...
தன்னை அறிந்த மனிதன் எவனும் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட மாட்டான்.
தன்னை அறிந்தவன் எந்த உயிரையும் கொல்ல மாட்டான்.
தன்னை அறிந்தவன் automatically சைவ உணவு உண்ண தொடங்கி விடுவான்.
தன்னை அறிந்தவன் மரணத்துக்குப் பின் பிறப்பு மறுபடியும் உண்டு என்பதை நம்புவான்.
தன்னை அறிந்தவன் இந்தப் பிறப்புகளை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பான்.
தன்னை அறிந்தவன் எப்போதும் தன்னுடைய குணம் பாழ் பட்டுப் போவதை அனுமதிக்க மாட்டான்.
தன்னை அறிந்தவன் முடிந்தவரை தனிமையாக இருப்பான்.
...
நீங்கள் நிறைய தனிமையாக இருந்து பாருங்கள் - உங்கள் ஆன்மா உங்களிடம் பேசும். நீங்கள் இத்தனைப் பிறவிகளில் எப்படியெல்லாம் கடந்து வந்தீர்கள் என்பதை உணர வைக்கும்.

மக்களுடன் கலக்க கலக்க நரகத்துக்குள் சென்று விடுவது போல், நம் ஆன்மாவை உணர முடியாமல் போய் விடுகிறோம்.

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மா என்கிற விஷயத்தில் வேறு வேறு தளத்தில் இருப்பீர்கள்... ஒரு தந்தை தன்னை அறியாத மிருகமாக இருக்கலாம், அவருடைய மகன் முற்றும் துறந்த மனிதனாக இருக்கலாம்... இதெல்லாம் விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாத, கிரோமோசோம் சமாச்சாரம் இல்லாத எல்லை இது... 
...
தன்னை அறிதல் தொடர்பாக எழுத வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது.....

உங்கள் ஆன்மாவிடம் நிறைய பேசுங்கள்..
உங்களை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும்...

மு.அருணகிாி

Wednesday, October 14, 2020

புதுவிதமான பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

 தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் இல்லாத சிறப்பு அம்சம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆமாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒன்றுதான்
சிறப்பிடம் பெற்று இருக்கும்.

ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும்தான்

வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாக இருக்கட்டும்,
கட்டிடகலையின் உச்ச சாதனைக் கோயிலாக இருக்கட்டும்

இயற்கை அழகுசொட்டும் அருவியாக இருக்கட்டும்,
பசுமை போர்வை விவசாய தோழன் அணைகட்டாக இருக்கட்டும்,

புவியியல் சிறப்பு பெற்ற புதை படிமங்களாகட்டும்,
சித்தர்கள் வாசம் செய்யும் மலையகமாக இருக்கட்டும்,

அயல் தேசத்து பறவைகளின் புகலிடமாக இருக்கட்டும்

இப்படி அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற
ஒரே மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமே.

வாருங்களேன். நீங்களும் வந்து கீழ்கண்ட அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து ரசித்து அனுபவித்து மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன்...

முக்கியமாக இந்த சுற்றுலா தலங்களுக்கு
அரசின் எந்தவித நுழைவு வரியும் இல்லை
வாகன நிறுத்துமிட கட்டணமும் இல்லை.

தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருநாள் இன்ப சுற்றுலாவாக திட்டமிட்டு வந்தால் அனைத்து இடத்தினையும் பார்த்து ரசிக்கலாம். குறைந்த செலவில் நிறைந்த சந்தோஷத்துடன் சுற்றுலாவை கண்டு களிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாதலங்களை பற்றி ஒரு சில வரிகளில் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன். படித்து முடித்து ஆர்வம் உள்ளவர்கள் நேரில் வந்து விரிவான விளக்கங்களை அறிந்து ஆச்சரியப்படுங்கள்.

சுற்றுலா ஏற்பாடு செய்யும் முனைவோர்களே.. டிராவல்ஸ் அதிபர்களே...
இதுமாதிரி ஒரு கலவையான சுற்றுலாவை நீங்கள் எங்கும் எப்பொழுதும் அமைத்திருக்க மாட்டீர்கள்., உங்கள் பகுதியில் உள்ளவர்களை பெரம்பலூருக்கு சுற்றுலா அழைத்துவந்து இன்புருங்கள். காத்திருக்கிறோம்.

ஜோதிடர்களே, நாடி பார்ப்பவர்களே, கைரேகை பார்ப்பவர்களே தோஷம் உள்ளவர்களையும், பரிகாரம் செய்யவேண்டியவர்களையும் எங்கள் பகுதியில் உள்ள அருள்மிகு ஏகாபரேஸ்வரர் - குருபகவான் கோயில், கண்ணகிக்கே மனதை ஆற்றுப்படுத்திய அருள்மிகு தண்டபாணி திருக்கோயில், சுவேதகேது முனிவருக்கே தோஷம் அகற்றி முக்தி கொடுத்த அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில் மற்றும் மதுர காளியம்மன் கோயில்களுக்குவரச்சொல்லுங்கள்.

மனநிறைவோடு கடவுள் அருளும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் அதுக்கு நான் உத்திரவாதம்.

உங்களுக்கு பொருளாதாரம் - எங்களுக்கு வாழ்வாதாரம்

வேறு தொழில்கள் வாய்ப்புகள் இல்லாத எங்கள்
வானம் பார்த்த வறண்ட பூமியான பெரம்பலூர்
உங்கள் சுற்றுலாவால் வளம் பெறட்டுமே....
------------------------------------------------------------
1. அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்-வாலிகண்டாபுரம்:
கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பராந்தக சோழனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் கலைநயமிக்க சிற்பிகளால் பார்த்துப்பார்த்து அழகுற கட்டப்பட்ட சிறப்பு பெருமை பெற்றது இத்திருக்கோயில். திரேதா யுகத்தில் கிஷ்கிந்தை நாட்டின் அரசன் வாலியே வந்து இங்குள்ள சுயம்பு ஈஸ்வரரை வணங்கித்தான் எதிரியின் பலத்தில் பாதி பெற்றதும் / வாலியை இராமன் மறைந்து இருந்து அம்பெய்து கொன்ற இடம் இது என்றும் ஆதலால் இங்குள்ள ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்றும் ஊருக்கு வாலிகண்டாபுரம் என்றும் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இது பெரம்பலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியதுவமான திருக்கோயில் ஆகும்.

2. இரஞ்சன்குடி கோட்டை – இரஞ்சன்குடி
சுந்தர சோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கானை மறவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக வாலிகண்டபுரம் கோயில் கல்வெட்டுகள் சிறு குறிப்பினை தருகிறது..நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர் கான், மராட்டியர்கள், முகலாய ஆர்காடு நவாப் கூட்டு படைகள் ,கோட்டையை ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி உள்ளனர் .. 1751-52 ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படை ஆர்டினல் தலைமையிலான பிரெஞ்சுப் படை ஆகியோருக்கு இடையேயான போரில் ஆங்கிலேயர் கோட்டை மீது பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் ..அதன் பிறகு ஆங்கிலேய நவாப் கூட்டுப் படைகளுக்கும்- ஹைதர் அலி படைக்கும் நடந்த போரின் போதும் இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டது. இது பெரம்பலூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அழியாமல் உள்ள ஒரு சில கோட்டைகளில் இதுவும் ஒன்று.

3. மருதையாறு-கொட்டரை நீர்தேக்கம் (கொட்டரை அணை)
பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் வட்டம் கல்பாடி பிரிவிலிருந்து ஆதனூர் கொட்டரை நீர்தேக்கத்தை 18 கி.மீ.ல்வந்தடையலாம் புதிய அணை நீர்தேக்கம். புதிய பூங்கா. பரபர[ப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி மருதை ஆற்றின் அழகையும் இயற்கை வளத்தையும் கண்டுகளிக்கவும் மனதுக்கு இனிமை சேர்க்கவும் சிறந்த சுற்றுலாத்தலம்.

4. அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்-சிறுவாச்சூர்:
கி.பி.9ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதும் ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபட்டு பாடல் பெற்ற முக்கியத் திருத்தலம். சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனம் அமைதியின்றி வாழ்ந்ததாகவும் இங்கு வந்து செட்டிகுளம் தண்டாயுதபாணியால் ஆற்றுப்படுத்தப்பட்டு சிறுவாச்சூரில் அம்மனாக மக்களுக்கு அருள் பாளிப்பதாகவும் பெரியோர்கள் சொல்கின்றனர். வாரத்தில் திங்கள், வெள்ளி மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

5. தேசிய கல்மரபூங்கா-சாத்தனூர்:
இந்தியாவில் வேறு எங்கும் காணக்கிடைக்காத டைனோசர் முட்டை மற்றும் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட மரம் கல்லாகி போன பாசில்கள் (புதை படிமங்கள்) உள்ள ஒரே முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது. பெரம்பலூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூர் வட்டத்தில் திருச்சி தேசியநெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பிரிவிலிருந்து செல்லும் சாலையில் சாத்தனூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் உள்ள இந்த தேசிய கல்மர பூங்காவில் மட்டும்தான். வரலாற்று பெட்டகம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த இடம் ஒருசிறந்த பாடமாகும்.

6. அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில்-சு.ஆடுதுறை:
சுவேதகேது முனிவரால் வணங்கப்பட்டு முக்தி பெற்றதும் கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தலம். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11,12,13 ஆகிய தேதிகளில் சூரியன் மூலவர் சிலை மீது விழும்படி அமைக்கப்பட்ட சிறப்பு பெற்ற திருத்தலம். திருக்கோயில் தொழுதூர் திட்டக்குடி சாலையில் ஆக்கனூருக்கு தெற்கே சு. ஆடுதுறையில் வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

7. மயிலூத்து அருவி – லாடபுரம் மற்றும் கோரையாறு அருவி
தமிழகத்தில் இருக்கும் ஒரு சில அருவிகளில் பெரம்பலூர் நகரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் லாடபுரம் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மயிலூத்து அருவிக்கும் ஒரு சிறப்பு இடம் உண்டு. இங்கு வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் நவம்பர் மாதங்களில் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து வந்து சீசன் களைகட்டும். அருவியில் குளித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க மிகசிறந்த இடம்.
இந்த லாடபுரம் மகாபாரத போரில் பஞ்சபாண்டவர்கள் மறைந்து இருந்த (அஞ்சாதவாசம்) இடம் என்ற செவி வழிச்செய்தியும் உண்டு. பச்சைமலையில் திரௌபதிக்கு கோயில் இருந்ததாகவும் காலவெள்ளத்தில் சிதிலமடைந்துவிட்ட அந்த கோயிலையும் காணலாம். வரலாற்று சுவடுகள்.
கோரையாறு அருவி இந்த பச்சைமலைக்கு வடக்கே(பின்புறம்) அதாவது பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் தொண்டமாந்துறை விஜயபுரம் அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரம் வந்தால் கோரையாறு அருவியை அடையலாம். இயற்கை அன்னையின் மடியில் சுத்தமான காற்று சுத்தமான தண்ணீர் மாசற்ற சூழல் வேண்டுவோருக்கு அமைதியான சிறந்த இடம்.
8. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்-செட்டிகுளம்.
கி.பி.12ம் நூற்றாண்டில் அதாவது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டிய மன்னனால் இவ்வாலயம் கட்டப்பட்டது. சூரிய ஒளி பங்குனி மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் சுவாமிமீது விழும் வகையிலும் சிறுது நேரத்தில் அதே சூரிய ஒளி நகர்ந்து அம்மன் மீதும் விழும்படி இத்திருக்கோயில் தமிழனின் கட்டடகலையின் சிறப்பம்சமாகும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இங்கு குபேரனுக்கு தனி சன்னிதியும் பிரசாதமாக பச்சை குங்குமமும் வழங்கப்படுவது தனிச்சிறப்பு. அதுமட்டுமல்லாது 12 ராசிகளுக்குமான குபேரன் ஓம் வடிவில் தனித்தனியாக ஆலய தூண்களில் அமைத்துள்ளது வேறு எங்கும் இல்லா சிறப்பு. இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாலயம் பெரம்பலூரில் இருந்து துறையூர் சாலை பிரிவிலிருந்து செட்டிகுளம் 25 கி.மீ. திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆலத்தூர் கேட் பிரிவிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

9. விசுவகுடி அணை - கல்லாறு நீர் தேக்கம்
தமிழகத்தில் இருக்கும் மிகசில அணைகளில் 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விசுவகுடி நீர்தேக்கத்துக்கும் ஒரு இடம் உண்டு. அழகிய பூங்காவுடன் அமைந்த இந்த நீர்தேக்கம் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் ஊராட்சியில் 33 அடிவர்ரை நீர் தேக்கும் அளவில் கல்லாற்றின் குறுக்கே பச்சை மலைக்கும் செம்மலைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்குமான சி’றந்த சுற்றுலா தளம்..

10. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்-செட்டிகுளம்
தமிழகத்திலேயே முருகன் 11 கணுக்களுடைய கரும்புடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தில் உள்ள காமாட்சியம்மன் அரக்கணை அழிக்க தண்டாயுதபாணிக்கு கரும்பினை கொடுத்தமையால் அம்மன் இத்தலத்தில் கரும்பில்லாமல் காட்சி கொடுக்கிறார். கி.பி.12ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. இதன் கட்டிடகலைக்கும் வான சாஸ்திரத்திற்கும் ஒரு சான்று எடுத்துக்காட்டு அதாவது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம்19,20,21ம் தேதிகளில் மாலை வேளையில் சூரியனின் ஒளிகதிர்கள் சுவாமியின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இத்திருதலத்தை தவிர வேறேங்கும் இல்லை. இது பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் பிரிவில் இருந்து செட்டிகுளம் சென்றால் மலை குன்றின்மீது இருக்கும் சுவாமி தண்டாயுதபாணியை தரிசிக்கலாம்.

11. பறவைகள் சரணாலயம் – ஆதனூர்
விதவிதமான வெளிநாட்டு பறவைகளையும் உள்நாட்டு பறவைகள் நாரை கொக்கு போன்ற பறவைகளை பார்க்கனுமா? அப்ப உங்க சாய்ஸ் பெரம்பலூர் அருகில் இருக்கும் ஆதனூர் பறவைகள் சரணாலயம்தான். வாருங்கள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே ஏரியில் மரங்களில் பறவைகள் கிறீச்சிடும் ஓசையும் சிரகடிக்கும் அழகும் ரம்யமான சுற்றுச்சூழலும் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். அனைவருக்குமான அருமையான ஒரு சுற்றுலாதலம் இது.

12. பிரம்மரிஷி சித்தர்கள் மலைக்கோயில் – எளம்பளூர்
மலைஏற்றம் விருப்பம் உள்ள ஆட்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாவுக்கான இடம். சிறிய மலை 20-30 நிமிடங்களில் ஏறிவிடலாம். சித்தர்கள் சூட்சுமமாக உலவும் இடம் என்று சொல்லப்படுகிறது.. மலை அடிவாரத்தில் சித்தருக்கு கோயிலும். மலை மேல் விளக்கு தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் இருந்து கீழே பறவை பார்வையில் பெரம்பலூர் நகரத்தையும் தேசிய நெடுஞ்சாலையையும் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். வாருங்களேன் ஒருமுறை பிரம்மரிஷி மலை ஏறித்தான் பாருங்களேன்... உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம். பெரம்பலூரில் இருந்து 3வது கி.மீ. எளம்பளலூரில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் இருந்து ஆத்தூர் செல்லும் சுற்றுவட்டச்சாலையில் அமைந்துள்ளது இந்த பிரம்ரிஷி மலை.
---------------------------------------------
அதிகம் பகிர்ந்து சேவை செய்யுங்கள் தோழமைகளே..!

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சியே உங்கள் கையில்...

தாமரை மக்கள் சேவை மையம்
9944433250