Wednesday, March 25, 2020

அனைவரின் கவனத்திற்கு...

அவசரம்! அவசியம்!!

தமிழக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் பார்வைக்கு,

கடந்த மார்ச் 6 ம், 2020 ம் தேதியிட்ட சுற்றறிக்கை மத்திய AYUSH அமைச்சகம் மூலம் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் அனுப்பியுள்ளார்கள். எண் : D.O.No S 16030/18/2019 NAM Dated : 6th March 2020

அதில் தெளிவாக #சித்த வைத்தியம், #ஆயுர்வேதம், #யுனானி, #ஓமியோபதி எனும் நான்கு வகை பாரம்பரிய முறைப்படி கொரோனா பரவுவதை தடுப்பதற்கும், வந்தவர்களை காப்பாற்றுவதற்கும் மிகச்சிறந்த முறையில் மருந்துகளின் விவரங்கள் கொடுத்துள்ளார்கள்.

மக்களின் நலன்கருதி உடனே மருத்துவத்தை மேற்கொள்ளவும் இந்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுவரை அதுகுறித்து மக்களுக்கு எவ்வித அறிவிப்பும் செய்யாதது ஏன்? இதுவரை மூலிகை மருத்துவத்தை மேற்கொள்ளாது ஏன்?

சித்தாவில் #வாதசுரகுடிநீர் உட்பட 14 மருந்துகளும், ஆயுர்வேதத்தில் #திரிகடுகசூரணம் உட்பட 19 மருந்துகளும், யுனானியில் 9 வகை மருந்தும், ஓமியோபதியில் 1ம் ஆக 43 மருத்துவ வகைகளை வைத்துக்கொண்டு இன்னும் மருந்தில்லை மருந்தில்லை என்று மக்களை அச்சமூட்டுவது ஏன்?

நீங்கள் இருவரும் தமிழர்கள். உங்களை இந்த இக்கட்டான சூழலில் மனதார நம்பிக்கை கொண்டுள்ளனர் மக்கள். அவர்களின் அச்சத்தை துடைத்தெரிய வேண்டாமா? இதில் உண்மை என்ன? ஆயுஷ் அமைச்சரவையில் முடிவெடுத்து அனுப்பிய சுற்றறிக்கையும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் என் கவனத்திற்கு வந்தது. பார்த்ததிலிருந்து மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இந்த சுற்றறிக்கை உங்கள் கவனத்திற்கு வராமலிருக்கும் அளவிற்கு சதிகள் இருக்க வாய்ப்பு குறைவே. இருந்தாலும் குழப்பத்தோடு உடனடி தீர்வினை தமிழக அரசு எடுக்க வலியுறுத்தி இந்த பதிவினை பதிவு செய்கிறேன். மக்கள் உடனே பகிர்ந்து கவன ஈர்ப்பு வேலையை செய்யுங்கள்.                                                                                        மரபுவழி தமிழ் மருத்துவர்

Saturday, March 21, 2020