Saturday, November 30, 2024

நம் தேசிய கொடியை ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பதன் காரணம் என்ன?

 

நம் தேசிய கொடியை ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பதன் காரணம் என்ன?

நம் தேசிய கொடி மேலே பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் உள்ள மலர்கள் கீழே விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்கு ஒரு சோக சம்பவம் அடங்கி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த கொடி மேலே பட்டொளி வீசி பறக்க அதாவது நமக்கு சுதந்திரம் கிடைக்க எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்திருக்கிறது. அதாவது தங்கள் கணவர்களை இழந்துதான் இந்த சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கிறது.

அதைத்தான் கொடியில் உள்ள மலர்கள் கீழே விழுந்து நமக்கு உணர்த்துகிறது.

இனி ஒவ்வொரு முறை கொடி ஏற்றத்தின்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால்…

இன்றும் நாம் எங்காவது செக்கிழுத்துக்கொண்டோ அல்லது அன்னியருக்கு சேவகம் பார்த்துக்கொண்டு அடிமை வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம்.

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


பெண்களை ஏன் கால்மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று சொல்கிறார்கள்?


 

பெண்களை ஏன் கால்மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று சொல்கிறார்கள்?

இதை பெண் அடிமைத்தனம் அல்லது ஆணாதிக்கம் என்று இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கிறார்கள். சொல்லிவிட்டு போகட்டும்.

ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.

பெண்கள்கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம் ஒழுங்கீனம் திமிர் என்று மேலோட்டமாக சொல்லிவைத்தாலும் அதன் உட்பொருள் அதுவல்ல.

பெண்கள் கால்மேல் கால்போட்டு அமரும்போது அவர்கள் அடிவையிறு அழுந்தும்போது கர்பபைக்கு அழுத்தம் ஏற்பட்டு நாளைடைவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதை தடுக்கவே அவ்வாறு சொன்னார்கள். இது அவர்களின் நன்மைக்கே..

புரியுதா எம் குலபெண்களே?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

Friday, November 29, 2024

பாம்பிற்கு முட்டை, பால் வைப்பதன் காரணம் என்ன? பக்தியா? மூடநம்பிக்கையா?

 

பாம்பிற்கு முட்டை, பால் வைப்பதன் காரணம் என்ன?                           பக்தியா? மூடநம்பிக்கையா?

உண்மையில் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பிறகு ஏன் புத்துக்குள் முட்டையையும் பாலையும் வைக்கிறார்கள்?

மக்கள் தொகை குறைவாக இருந்த முன் காலத்தில் மக்கள் வசிப்பிடத்தில் முக்கிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள்.

காரணம் அடர்ந்த காடுகள் மனித நடமாட்டம் குறைவு பாம்புகள் அதிகம். ஒரு உயிரினத்தை அவசிய உணவு தேவைக்காக தவிர கொல்லும் உரிமை கிடையாது.

அதனால் அதை கொல்லாமல் இனபெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தார்கள்.

பாம்புகள் இனபெருக்கம் செய்வது வித்தியாசமானது. பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவத்தை அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு இணை சேர பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தி ஆண் பாம்பை திசை திருப்பும் வேலையைத்தான் முட்டை மற்றும் பாலில் இருந்து வரும் வாசனை செய்தது. அதனால் பாம்பால் இன பெருக்கம் செய்ய இயலாது.

இதன் உண்மை காரணம் சொன்னால் யாரும் செய்யமாட்டார்கள். அதனால் தெய்வத்தின் பெயரைச்சொல்லி கடைபிடிக்கவைத்து மக்கள் வசிப்பிடங்களில் பாம்பை கட்டுப்படுத்தினார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

பழந்தமிழர் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


பக்திக்கும் மரியாதைக்கும் உரிய கோயிலில் ஏன் தாம்பத்திய இரகசிய சிலைகள் வைக்க வேண்டும்?


பக்திக்கும் மரியாதைக்கும் உரிய கோயிலில் ஏன் தாம்பத்திய இரகசிய சிலைகள் வைக்க வேண்டும்?

அவ்வளவு முட்டாளா நம் முன்னோர்கள்? இல்லை கேவலமானவர்களா?

நம் முன்னோர் தமிழர் அறிவு உலகத்தில் எவருக்கும் இல்லை. அதை புரியாதவன் தெரியாதவன் உளரிக்கொட்டுவதெ வன்மம்.

அந்த காலத்தில் மணமானவர்களுக்கு தாம்பத்தியத்தை பற்றி சொல்லிக்கொடுக்க எந்தவிதமான வழிமுறைகளும் கிடையாது.

பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க தயங்கினார்கள். சகோதர சகோதரிகள் நண்பர்களுக்கும் வாய்ப்பில்லா தெரியாத சூழ்நிலைதான் அன்று இருந்தது.

ஒரு சமூகம் கட்டமைப்புடன் தொடர்ந்து இருக்க குடும்ப அமைப்பு சிறப்புடன் இருந்தால் மட்டுமே நீண்ட காலம் தொடரும்.

குடும்ப கட்டமைப்பு சிறப்புடன் இருக்க அடிப்படை தேவை இந்த தாம்பத்தியம்.  

அதனால்தான் அதை அனைவரும் வந்து செல்லும் கோயில் மேல் கோபுரத்தில் சிலைகளாக வடித்து வைத்தார்கள்.

கணவன் மனைவிக்குள் தாம்பத்தியத்தில் எதுவும் தப்பில்லை என்பதை பெண்கள் உணர்ந்து அச்சப்பட தேவையில்லை என்பதை தெரிவிக்கவே அவ்வாறான சிலைகள் கோபுரத்தின் உச்சியில் செய்து வைத்தார்கள்.

ஒரு நீண்ட கட்டுரை, பதிவு, வீடியோ சொல்வதை ஒரே ஒரு சிலை சொல்லிவிடும். அதனால்தான் பலவித தாம்பத்திய இரகசிய சிலைகள் அவ்வாறு அமைத்தார்கள்.

நம் வீட்டில் திருமணம் முடிந்த உடன் கண்டிப்பாக தம்பதிகளை சில பல கோயில் சென்று வரனும் என்றும் மேலே கோபுரத்தை பார்த்து வரவும் என்று தாம்பத்திய இரகசியத்தை கற்றுக்கொள்வதற்கே அவ்வாறு மறைமுகமாக சொன்னார்கள்.

அதனால்தான் சிறுவர் சிறுமியரை கோயில் கோபுரம் மேலே அன்னாந்து பார்க்கச்சொல்லமாட்டார்கள். பார்த்தாலும் கண்டிப்பார்கள். அந்த வயதில் விளக்கம் சொல்லவும் முடியாது, சொன்னாலும் புரியாதில்லையா? 

அந்த காலத்தில் மருத்துவமனைகளும் கல்வி கற்கும் பாடசாலையும் கோயில் வளாகத்தில்தான் செயல்பட்டது என்பதை மறக்கவேண்டாம்.

அது வெறும் கோயில் மட்டுமல்ல.

மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கே அடிப்படையும் எல்லாமும் கோயில்தான்.

உலக பொதுமறை என்று சொல்லக்கூடிய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளில் கூட அதனால்தான் இன்பத்துபால் என்று தாம்பத்திய இரகசியம் பற்றி அதன் முக்கித்துவம் கருதியே அறிவுறுத்தப்பட்டது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

Thursday, November 28, 2024

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஏன் கோயில் சென்று வணங்க வேண்டும்?

 


எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஏன் கோயில் சென்று வணங்க வேண்டும்?

எங்கு காந்த அலை அடர்த்தி, பூமியின் வடதென்துருவ காந்த புலன் அதிகமாக இருக்கிறதோ அங்குதான் கோயில் கட்டப்பட்டிருக்கும்.

முக்கியமாக மூலஸ்தான கற்பகிரக சிலை இருக்கும் இடத்தில் காந்த புலன் அதிகமாக இருக்கும்.

சரியாக சொல்வதென்றால் மூலஸ்தான சிலை கற்பகிரகம் அமைத்த பிறகே கோயில் கட்டப்படும்.

சிலைக்கு கீழே தாமிர தகட்டில் வேத வரிகளை செதுக்கி புதைக்கப்படும். மேலிருந்து வரும் காந்த அலைகளை கிரகித்து பலமடங்கு பெருக்கி வெளியிடவே.

கர்பகிரகம் மூன்று பக்கமும் காற்று புகாவண்ணம் அடைக்கப்படும். காரணம் ஆற்றலை அதிகப்படுத்தவே.

ஆகம விதிப்படி கோயில் நிர்மானிக்கப்பட்டு கர்பகிரக கோபுரங்களின் மேல் தங்கத்தாலும் தாமிரத்தாலும் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள கலசங்க:லின் கூர் முனை ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி எனப்படும் பிரபஞ்சத்தின் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள சிலைக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த பிராண சக்தி சிலையில் கீழ் இருக்கும் தாமிர தகடு பொன் வெள்ளியில் செய்யபட்ட யந்திரங்கள் சக்கரங்கள் மூலம் கிரகித்து தான் அமையபெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பலமடங்கு பெருக்கி வெளிப்படுத்தும்.

இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14000 போவிஸ்) நம் உடம்பில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. அதனால்தான் பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கடவுள் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அப்படி கற்பகிரத்தின் வாசல் வழியாக வெளியேறும் பிராண சக்தி எதிரில் நின்று இறைவனை வணங்கிக்கொண்டு இருக்கும் நம் மீது படுகிறது.

தீப ஆராதனை காட்டப்படுவது நம் கண்கள் மற்ற காட்சிகளை தவிர்த்து மனதை குவிந்து ஒருநிலைப்படுத்தவே. 

தீபாராதனை காட்டும்போது மிக அதிகமாக சக்தி வெளிப்படும். அதை நம் உடல் மீது உடன் கிரகிக்கவே ஆண்களை மேலாடை இல்லாமலும்  பெண்களை அதிக தங்க வெள்ளி ஆபரணங்களுடன் கோயிலுக்கு வரச்சொல்கிறார்கள். (தங்கம் வெள்ளிக்கு பிராணசக்தியை கிரகித்து உள்வாங்கும் தன்மை உண்டு)

மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். கோயிலில் ஒலிக்கப்படும் மணியோசை அங்கு வருபவர்களின் நினைவுகளை அலைபாயவிடாமல் செய்யும். அதனால் மன அழுத்தம் குறையும்.

மணம் வீசும் மலர்கள் ஒரு விதமான நல்ல சுகந்த மணத்தை கொடுத்து உடலையும் மனதையும் உற்சாகபடுத்தும்.

கடவுளின் சிலைகளை அபிஷேகம் செய்த நீரில் சிவன் கோயிலில் வில்வ இலைகளையும், பெருமாள் கோயிலில் துளசி இலைகளையும் போட்டு தாமிர பாத்திரத்தில் வைத்து தீர்த்தமாக தருவார்கள்.

இதனால் வயிற்று வலி, குன்மம், சளி, இருமல், பல்சொத்தை, துர்நாற்றம், மற்றும் வைரஸ் கிருமி தொற்று நோய் ஏற்படா வண்ணம் பாதுகாக்கும்.

கர்பகிரகத்தின் வடக்கு அல்லது கிழக்கில் கடவுள் சிலைக்கு செய்யும் அபிஷேக நீர் செல்ல துவாரம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் வரும் நீரையும் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்களிலும் சிரசிலும் ஒற்ரிக்கொள்கிறோம். அதில் உள்ள பிராணசக்தி நம் உடலிலும் பரவ செய்யவே இந்த ஏற்பாடு.

இந்த பிராண சக்தி வெளிப்பட்டுகொண்டு இருப்பதால்தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது என்றும் சிலையை விட்டு விலகி இருக்கும்பதியும் அபிஷேகம் செய்யும் போது கைகளை சிலைகளுக்கு மேல் உயர்த்தகூடாது என்றும் ஒரு காலை கற்பகிரத்தின் வாயிலிலும் வெளியேயும் வைக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

பிராணசக்தி நம் உடம்பில் பட்டு உடல் சிலிர்ப்புடன் இருப்பதால்தான் உடனே கோயிலை விட்டு வெளியே வரகூடாது என்றும் சிறிது நேரம் அந்த வளாகத்திலேயே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு வரச்சொல்கிறார்கள்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஏன் கோயில் சென்று வணங்கச்சொன்னார்கள் என்று இப்போது புரிகிறதா?

நம் ஆரோக்கியத்துக்குதான் கோயிலே தவிர மூட நம்பிக்கைகளுக்கு இல்லை.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Wednesday, November 27, 2024

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்குடி?

 


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்குடி?

 

“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்                                   வையகம் போர்த்த வயங்கொலிநீர் கையகலக்                                        கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு                                         முற்றோன்றி மூத்தகுடி”.

புரப்பொருள் வெண்பாமாலை சூத்திர விளக்கப்பாடல் 35                        எழுதியவர் ஐயனாரிதனார்.

பொருள்:

பூமி தோன்றியபின் நீர் விலகி நிலம் தெரிந்தபோது முதலில் தெரிந்தது மலைகள்தான். (குறிஞ்சி நிலம்)

அத்தகைய மலைகளில் தங்கள் ஆயுதங்களாக கற்களையே (கையகல கல்) பயன்படுத்தினர்.

அதன்பிறகு மலைமழை நீர் அடித்து வந்து பாறைகள் தூளாகி அது மணலாகி வண்டல்மண் நிலங்கள் (மருத நிலம்)  தோன்றும் முன்னரே உலோகத்தால் ஆன வாளோடு (இரும்பை கண்டுபிடித்து) விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக வலம் வந்தவர்கள்தான் மூத்தகுடி தமிழர்கள்.  

அதாவது விவசாயநிலம் உருவாகும் முன்னரே முல்லை நிலத்திலேயே உலோகத்தை கண்டுபிடித்து கருவிகள் ஆயுதம் (வாள்) செய்து பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து அறிவாளியாக வாழ்ந்துவந்த உலகின் முதல் சமூகம் (குடி) தமிழர்தான் என்று சொல்கிறார்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Monday, November 25, 2024

35. கோயில் வலம் வருதல் ஆன்மீகமா? வேண்டுதலா? மூடநம்பிக்கையா? ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்கு பிரஷர் செருப்பு வாங்கி நடப்பதைவிட…, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்குபிரஷர் பயிற்சி உபகரனங்களை வாங்கி பயிற்சி செய்வதைவிட…, டோக்கன் வாங்கி பிசியோ தெரபிஸ்டுகளை பார்க்க காத்திருப்பதைவிட…, எளிய காஸ்ட் எபெக்ட்டிவ் பிராஸஸ் அதாவது செலவில்லாத 100 சதவீத பலன் கொடுக்கும் அதிசயம் கோயிலைச்சுற்றி கருங்கல் தரையில் நடப்பது. .கோவிலை 48 சுற்று 108 சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு சுற்றிவிட்டு வந்து உடலும் மனமும் உற்சாகமாக சுறுசுறுப்பாக இருப்பதாக வியப்பார்கள். அந்த பலனை இ|றைவனுக்கு அட்ரிப்யூட் சமர்ப்பணம் செய்வார்கள். காரணம் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோயில்கல் இருக்கும் இடம் காந்த புலன் உள்ள இடம். அலைபாயும் மனதை சஞ்சலப்படும் மனதை சாந்தபடுத்தி ஒருநிலைப்படுத்தும் திறன் அந்த காந்தபுலனுக்கு உள்ளது. அடுத்து அந்த கருங்கல் கொத்திப்போட்டு சொறசொறப்பாக கரடு முரடாக இருக்கும். நம் உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் வந்து முடியும் இடம் நமது காலில்தான். அந்த பாதத்தில் அந்த கொத்திபோட்ட கருங்கல் அழுத்தி படும்போது அனைத்து நரம்புகளும் தூண்டப்பட்டு செயல்படாத நரம்புகளும் நன்கு செயல்படத்தொடங்கும். கோயிலில் அங்கபிரதட்சணம் செய்வதும் இதே காரணத்துக்குதான். உடலில் ஏற்பட்ட ஏற்படும் சுலுக்கு பிடிப்பு ரத்தகட்டு வீக்கம் உடல்வலி நரம்பு பிடிப்பு வாயு தொல்லை போன்ற உபாதைகள் அங்கபிரதட்சணம் செய்பவர்களுக்கு வராது இருந்தால் நீங்கிவிடும். மனதை ஒருநிலைப்படுத்தவும் நம் எண்ணங்களை மனதை குவித்து நமது குறிக்கோளை அதாவது நோய், வெற்றி, இலட்சியம் பிரச்சனை போன்றவற்றை வேண்டுதலாக நினைத்து செய்யும் போது பிரபஞ்ச ஆகர்ஷண சக்தி செயல்பட்டு நிறைவேற்றி வைக்கும். மலைகளில் கோயில் அமைத்தற்கும் (மூட்டுவலி நீங்க) பிரகாரத்தை கருங்கல் கொண்டு கொத்தி போட்டு அமைத்தற்கும் காரணம் நம் ஆரோக்கியத்திற்கே என்பதை அறிக. வாரம் ஒரு முறை மலையில் அமைந்த கோயிலுக்கு நடந்து சென்று வாருங்கள். உடலும் மனமும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நம் ஆரோக்கியத்துக்குதான் கோயிலே தவிர மூட நம்பிக்கைகளுக்கு இல்லை. தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே… புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள். புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள். தமிழன் திமிரானவன் சுந்தர்ஜி

 


 

கோயில் வலம் வருதல் ஆன்மீகமா? வேண்டுதலா? மூடநம்பிக்கையா?

 

ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்கு பிரஷர் செருப்பு வாங்கி நடப்பதைவிட…,

சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்குபிரஷர் பயிற்சி உபகரனங்களை வாங்கி பயிற்சி செய்வதைவிட…,

டோக்கன் வாங்கி பிசியோ தெரபிஸ்டுகளை பார்க்க காத்திருப்பதைவிட…,

எளிய காஸ்ட் எபெக்ட்டிவ் பிராஸஸ் அதாவது செலவில்லாத 100 சதவீத பலன் கொடுக்கும் அதிசயம் கோயிலைச்சுற்றி கருங்கல் தரையில் நடப்பது.

.கோவிலை 48 சுற்று 108 சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு சுற்றிவிட்டு வந்து உடலும் மனமும் உற்சாகமாக சுறுசுறுப்பாக இருப்பதாக வியப்பார்கள்.

அந்த பலனை இ|றைவனுக்கு அட்ரிப்யூட் சமர்ப்பணம் செய்வார்கள்.

காரணம் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோயில்கல் இருக்கும் இடம் காந்த புலன் உள்ள இடம்.

அலைபாயும் மனதை சஞ்சலப்படும் மனதை சாந்தபடுத்தி ஒருநிலைப்படுத்தும் திறன் அந்த காந்தபுலனுக்கு உள்ளது.

அடுத்து அந்த கருங்கல் கொத்திப்போட்டு சொறசொறப்பாக கரடு முரடாக இருக்கும். நம் உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் வந்து முடியும் இடம் நமது காலில்தான்.

அந்த பாதத்தில் அந்த கொத்திபோட்ட கருங்கல் அழுத்தி படும்போது அனைத்து நரம்புகளும் தூண்டப்பட்டு செயல்படாத நரம்புகளும் நன்கு செயல்படத்தொடங்கும்.

கோயிலில் அங்கபிரதட்சணம் செய்வதும் இதே காரணத்துக்குதான். உடலில் ஏற்பட்ட ஏற்படும் சுலுக்கு பிடிப்பு ரத்தகட்டு வீக்கம் உடல்வலி நரம்பு பிடிப்பு வாயு தொல்லை போன்ற உபாதைகள் அங்கபிரதட்சணம் செய்பவர்களுக்கு வராது இருந்தால் நீங்கிவிடும்.  

மனதை ஒருநிலைப்படுத்தவும் நம் எண்ணங்களை மனதை குவித்து நமது குறிக்கோளை அதாவது நோய், வெற்றி, இலட்சியம் பிரச்சனை போன்றவற்றை வேண்டுதலாக நினைத்து செய்யும் போது பிரபஞ்ச ஆகர்ஷண சக்தி செயல்பட்டு நிறைவேற்றி வைக்கும்.

மலைகளில் கோயில் அமைத்தற்கும் (மூட்டுவலி நீங்க) பிரகாரத்தை கருங்கல் கொண்டு கொத்தி போட்டு அமைத்தற்கும் காரணம் நம் ஆரோக்கியத்திற்கே என்பதை அறிக.

வாரம் ஒரு முறை மலையில் அமைந்த கோயிலுக்கு நடந்து சென்று வாருங்கள். உடலும் மனமும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நம் ஆரோக்கியத்துக்குதான் கோயிலே தவிர மூட நம்பிக்கைகளுக்கு இல்லை.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Sunday, November 24, 2024

திருவளர்ச்செல்வன் - திருநிறைச்செல்வி…. என்று கல்யாண பத்திரிக்கையில் போடுவதன் அர்த்தம் என்ன? ஏன் ?


 

திருவளர்ச்செல்வன் - திருநிறைச்செல்வி…. என்று                                    கல்யாண பத்திரிக்கையில் போடுவதன் அர்த்தம் என்ன? ஏன் ?

திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால்

#திருவளர்ச்செல்வன்/#செல்வி என்றால்…

அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.

                                                       

#திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய/ கடைசி மகன்/மகளின் திருமணமாகும்.

 

திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.

 

எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.

திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன,

இத்திருமணமே இறுதியானதாகும்,

 

இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.

 

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

பழந்தமிழர் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

Saturday, November 23, 2024

திருமணத்தின் பின் கணவன் உண்ட எச்சில் இலையில் மனைவி ஏன் சாப்பிட வேணும்!??

 


திருமணத்தின் பின் கணவன் உண்ட எச்சில் இலையில் மனைவி ஏன் சாப்பிட வேணும்!??

🙆‍️🧜‍️மூடநம்பிக்கையா??

 

🙍‍️🧛‍️ஆணாதிக்கமா??

 

🧕🙅‍️பெண் அடிமைத்தனமா??

 

திருமணமான பெண் வீட்டில் உள்ள பெரியோர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ தட்டிலோ உணவு உண்ணச்சொல்லுவதை கேள்விபட்டிருக்கிறோம்

 

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான்.

 

 அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காது. பிடிக்காமல் இருக்கும் உணவை அப்படியே மிச்சம் வைத்து விடுவான்

 

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவிமார்கள்….

கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு…

மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல்தவிர்த்துவிடலாம்,

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம்,

அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.      

 

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது….

அவள் பாலூட்டும்🤱குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு...

 

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு.

 

மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும்🤰 குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும்,

பிறந்தபின் 🤱முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசியம் என மேல்நாட்டு அறிவியலாளர்கள்😮😮 கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

புதிய கணவன் மனைவி வாயில் முத்தம் கொடுத்துக்கொள்வதற்கும் இதுதான் இரண்டாவது காரணம். (அப்ப அந்த முதல் காரணம்? அது தாம்பத்திய இரகசியம்)

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது குத்துவிளக்கு ஏற்றச்சொல்வது ஏன்?

 


ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது குத்துவிளக்கு ஏற்றச்சொல்வது ஏன்?

ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்கள் இந்த குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்பதாக அர்த்தம்.

குத்து விளக்கிற்கும் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே யோசிக்கிறீர்கள்.

குத்துவிளக்கின் தாமரை போன்ற பீடம் – பிரம்மாவையும்..

குத்துவிளக்கின் நடு தண்டு – விஷ்ணுவையும்…

நெய் எரியும் அகல் – பார்வதியையும் (முப்பெரும் தேவியரையும்)…

எரியும் நூல் திரி – தியாகத்தையும்…

தீப சுடர் – சிவனையும் குறிக்கிறது…

குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து குணங்களை குறிப்பதாகும்.

அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வந்த உடன்..

முதல் வேலையாக அப்பெண்ணை குத்து விளக்கு ஏற்றச்சொல்லி அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபசுடர் மூலமாக வீடு முழுக்க ஒளி பரவச்செய்கின்றனர்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


Friday, November 22, 2024

கலைஞர் வேற..?!!!! கருணாநிதி வேற…?!!!!!

 

கலைஞர் வேற..?!!!!  கருணாநிதி வேற…?!!!!!

 என்னய்யா  இவன  பிடிச்சிட்டு  வந்திருக்க ‌?

சார்இவன் டாஸ்மாக் வேண்டாம்னு போராட போயிருக்கான்.

அது அரசாங்க சொத்துல்ல அத நாமதான பாதுகாக்கணும்,                                                     

கடமைய செய்ய நான் போனேன் சார்

அங்க இவன் என்ன பண்ணான் தெரியுமா சார்?

 

என்ன  பண்ணான்?

 

அங்க கலைஞர் வாழ்கன்னு கைதட்டுறான்கும்பிட்டுக்குறான் சார்

பின்ன அவனே கருணாநிதி ஒழிகன்னு கல்லை எடுக்குறான்,

அப்புறமா கல்லை கீழபோட்டுட்டு கலைஞர் வாழ்கன்னு சொல்றான்,

 அப்புறமா கருணாநிதி ஒழிகன்னு கத்துறான் சார்,

 

நீங்களே  கேளுங்க  சார்

 

என்னய்யா  இது  உண்மையா?

 

சார்நான் கலைஞர் அய்யா அபிமானி

அவருக்கு எதிரி இல்ல , ஆனா கருணாநிதி சரியில்ல சார் ,

இத சொன்னத்தான் சார் பிரச்சினையாடுச்சி..

 

புரியுற மாதிரி சொல்லுய்யா...

 

சார்கலைஞர் வேற கருணாநிதி வேறசார்

 

நிறைய கள்ளச்சாரயம் இருந்தது அரசுக்கும் பணமில்லை அதனால மதுகடை திறந்தா மக்களும் குடிப்பாங்க அரசுக்கும் பணம் வரும்னு நினைச்சது கலைஞர் அய்யா சார் ,

 

ஆனால் குடிபெருகி அது எல்லையில்லாம போய் இன்னைக்கு மாகாணமே நாசமா போக கருணாநிதி காரணம் சார்

 

கலைஞர் நல்லவரு சார்

மாநில உரிமைக்கு பாடுபட்டாருகோட்டையில கொடி எல்லாம் ஏத்தின தேசாபிமானிசார் அவரு,

இந்தியாதான் முக்கியம்னு 15 வருஷம் சென்ட்ரல்ல இருந்தார் சார், 2009 இலங்கை பிரச்சினையில தலையிடாம இருந்த தேசாபிமானி சார்,

இந்திய கூட அவர் புள்ளைங்க ஸ்கூல்ல படிச்சி கொடுத்தப்போ அமைதியா இருந்தாரு சார் ,

ரொம்ப நல்லவரு சார.. எனக்கு பிடிக்கும் சார்

 

ஆனா இந்த கருணாநிதி இருந்தார்ல சார்

அவரு சரியில்ல சார்சதா இந்தி எதிர்ப்பு பிரிவினைவாதிகளுக்கு சப்போர்ட்இந்து துவேஷம்னு நிறைய குழப்பம் சார்

 

அத வுடுசார்,

எங்க கட்சி ரீதியா எங்க கட்சி சங்கரமடம் இல்லைன்னு கலைஞர் சொல்வார் சார்,

ஆனா கருணாநிதி அவர் குடும்பத்தமட்டும் கட்சியில வைப்பாருசார்

 

அதான் சார் சொல்றேன் கலைஞர் வேறகருணாநிதி வேற சார்.

 

கலைஞர் வாழ்கஅவருக்கு நான் எதிரி இல்லைஆனா கருணாநிதி ஒழிக அவர் சரியில்ல சார்,

 இதைத்தான் நான் போராட்டத்துல சொன்னேன் இவர் பிடிச்சிட்டாரு சார்

 

என்னய்யா நீ அந்த கட்சிக்காரனா இல்லியா?

 

நான் அந்த கட்சிக்கு  90 வருஷ தொண்டன் சார்,

நான் பிறக்காம போன காலத்துக்கும் சேர்த்து வரலாற படிச்சதுல

இப்ப 90 வயது திராவிட தொண்டன் நான் ஒருத்தனேதான் சார்மோஸ்ட் சீனியர்

 

அங்க பெரியார்னு ஒருத்தர் இருந்தார் சார் அவர் நல்லவரு

சாதி ஒழிப்பாருவைக்கம் வர நடப்பாருகாங்கிரஸ ஒழிச்சி கட்ட துடிச்சாரு

ஆனா .வே ராமசாமிதான்சார் சரியில்ல

அவரு கீழவெண்மணி முதுகுளத்தூர்னா வாயே திறக்கமாட்டாரு,

காமராஜரும் காங்கிரஸும் வேணும்னு சொன்னாருவைக்கம் வரைக்கும் நடந்தவரு வடக்கன்குளம் மாதிரி கிறிஸ்தவசாதி பிரச்சினைக்கு போகவே மாட்டாரு

 

.வேரா வேற  பெரியார் வேற‌ சார்…

 

அப்படி அண்ணாதுரைன்னு ஒருத்தர் இருந்தார் சார்,

 திராவிட நாடு கேட்டாரு இந்துமதமே இல்லைன்னாரு கம்பரசம் எழுதினாரு பெரிய பெரிய பிரச்சினையெல்லாம் பண்ணாரு சார்

 

ஆனா அறிஞர்அண்ணா அப்படின்னு ஒருத்தர் சார்,

திராவிடநாடு வேண்டாம் தமிழ்நாடு மாகாணம் போதும் , கம்பரசம் புஸ்தமெல்லாம் வெளியிடமாட்டோம்ஒரே குலம் ஒரே கடவுள் உண்டுன்னு திருமூலரெல்லாம் பேசினார் சார்

 

அறிஞர் அண்ணா வேற  அண்ணாதுரை வேற சார்…

 

சார் அதான்சார் நான் விளக்கி சொன்னேன்,

இந்த கலைஞர் வேற கருணாநிதி வேற,

திராவிடம் வேற தமிழியம் வேற,

அறிஞர் அண்ணா வேற அண்ணாதுரை வேற,

பெரியார் வேற ஈரோட்டு ராம்சாமி வேற சார்

 

என்ன தைரியம் இருந்தா இப்படி குழப்புவ

உன்ன எங்க அனுப்புறேன் பாரு,

அங்க தான் உனக்கு சரியாகும்..

 

அப்படியா சார்,

அஙக இந்த சனாதனதர்மம்  வேற இந்துமதம் வேற,

சனாதானத்தை எதிர்க்கிறோம் இந்துமதத்தை ஆதரிக்கிறோம்,

இந்து வேற தமிழன் வேற,

காசி விஸ்வநாதன் வேற கபாலிஸ்வரரும் தஞ்சாவூர் சிவனெல்லாம் வேற

 

உஜ்ஜைனி காளி வேற தில்லை காளி வேற,

கோலாப்பூர் மஹாலட்சுமி வேற நம்ம தமிழ்காலண்டர் லட்சுமி வேற

இப்படில்லாம் பெரிய பெரிய ஆராய்ச்சி பண்றவங்க இருப்பாங்களா சார்

 

அங்க விபூதி வேற இங்க திருநீறு வேற,

அங்க திலகம் வேற இங்கு குங்குமம் வேற,

அங்க உள்ள கிருஷ்ணன் சமஸ்கிருத கிருஷ்ணன் இங்க இவன் கண்னன்

அப்படியெல்லாம் சிந்திச்சி எழுதுற அறிவாளிகள் இருப்பாங்களா சார்

 

மதுரா கிருஷ்ணன் வேற திருவரங்கநாதன் வேற

அப்படில்லாம் சொல்றவங்க இருப்பாங்களா சார்,

 

புத்தனே 4 வேதமும் எழுதினான்புத்தனே இந்துமதத்தை தோற்றுவித்தான் வியாசர் அவன்கிட்ட் இருந்து வேதத்தை பிடுங்கிட்டு அவன மொட்டை அடிச்சி விரட்டுனாருன்னு சொல்ற பெரிய ஆய்வாளரெல்லாம் இருப்பாங்களா சார்..

 

சார்...ப்ளீஸ் சார்

 

அப்படியே இந்தி படிக்கலாம் ஆனா திணிப்பு கூடாது,

பார்ப்பான் எங்களுக்கு வக்கீலா வேணும் , ஆலோசகரா வேணும்டாக்டரா ஆடிட்டரா வேணும் ஆனா கோவில் பூசாரியாமட்டும் வேண்டாம்

 

பார்ப்பான் வேறபிராமணன் வேற,

பார்பானியம் வேற ஆரியம் வேறன்னு சொல்றவங்கெல்லாம் இருப்பாங்களா சார்

 

வடக்க தீவாளி வேறஇங்க தீபாவளி வேற.

அங்க கோகுலாஷ்டமி வேற இங்க கிருஷ்ண ஜெயந்தி வேற.

அயோத்தி குழந்தை ராமன் வேற ராமேஸ்வர சீதாராமன் வேற,

வால்மீகி எழுதுன அயோத்தி ராமன் வேற கம்பன் எழுதுன கோதண்ட ராமன் வேற,

அப்படில்லாம் சொல்ற பெரிய வித்வான்களெல்லாம் இருப்பாங்களா சார்

 

பெரிய அறிவாளிங்க சார் அவங்க,

அவ்வளவும் அறிவு சார் பொங்கி பொங்கி வழியுதுசார்,

அப்படிபட்டவங்க அங்க  இருந்தா  எனக்கு படா தமாஷா இருக்கும் சார்,

நானும் அறிவ வளர்த்து மாநில உரிமைக்கு                                       

பகுத்தறிவோட பாடுபடுவேன்ன் சார,                                                                                                            

ப்ளீஸ் சார்..."                                                                                                                                                                                                       

திருட்டு  திராவிட விடியல் நம்பர் ஒன் நாதாரி 200 ரோவா ஊப்பீஸ். வாக்குமூலம்.

--------------------------------------

விழிப்புணர்வுக்காக....                                   

முரட்டு சங்கி                                                 

சுந்தர்ஜி