Thursday, December 29, 2016


Saturday, September 17, 2016

அடுத்த

அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழைகளிடம் மட்டுமே!
சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்!!!

கிடைக்கும் போது பெற

கிடைக்கும் போது பெற தவறினால் தேடும் போது கிடைக்காது #அன்பு

Wednesday, September 7, 2016

நாகரீகம் மாறுவதற்க்கு

நாகரீகம் மாறுவதற்க்கு முன்பு பள்ளிக்கோ கல்லூரிக்கோ இப்படி போன போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.இது #வரலாறு

Tuesday, September 6, 2016

தாங்கி பிடிக்க தாயும்

தாங்கி பிடிக்க தாயும்

தூக்கிவிட தந்தையும் இருந்தால் போதும்

குடும்பத்தில் எப்போதும் சந்தோஷமே....

நாம பாக்குற பொண்ணு

நாம பாக்குற பொண்ணு திரும்பி பாக்கும் போது வர சந்தோசத்த விட,
நாம 👀 சிரிச்ச குழந்தை நம்மல பார்த்து சிரிக்கும் போது வர சந்தோசம் அலாதியானது.

வயித்து பசின்னு

மனுஷனுக்கு வயித்து பசின்னு ஒண்ணு இல்லேன்னா பல பிரச்னைகள் இந்த உலகத்துல இல்ல.
😞😞😢😢

Saturday, September 3, 2016

கருவிகளை நம்பி வாழும் இன்றைய மனிதர்கள் கூட,

கருவிகளை நம்பி வாழும் இன்றைய மனிதர்கள் கூட, இன்றுமட்டும் அல்ல என்றுமே செய்யமுடியாத ஒரு அதிஅற்புத கலை!!- காஞ்சி வரதராஜர் ஆலயம்.

Friday, September 2, 2016

நாத்து கட்ட தல தூக்கி வரப்பு வழி போற மக்கா

நாத்து
கட்ட தல தூக்கி
வரப்பு
வழி போற மக்கா

செத்த பொரு
தோ வாரேன்
பிடி நீர
குடிச்சிபுட்டு..

வரப்பெல்லாம்
சிரு முள்ளு
பாத்து வையி
உன் காலு

உச்சி
வெயில்
கூடும் முன்னே
நாத்த நீயும்
கொண்டு சேரு

கெழவின்னும்
குமரின்னும்..
நாத்து நட காத்திருக்கா
ஒத்த மைலு
தூரம்தான்...
பாதத்த எட்டி வையி

நீ
சுமக்கும்
பாரம் கண்டு
பாத வரும்
பாம்பு கூட
பதறி வழிவிடும்..

உன்
வியர்வை
கீழ் விழுந்தே..
வாய்க்கா நீரும்
தித்திப்பாகும்....

எட்டு வையி
எட்டி வையி
உன நம்பி ஊர் இருக்கு..
உலகே..
#பசியில்_காத்திருக்கு.!

இந்த சின்ன பெண்ணின்

இந்த சின்ன பெண்ணின் அம்மா இறந்த பிறகு அவர் அம்மாவின் உடை அணிந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்.  எப்படி இருக்கு பிரிஎண்ட்ஸ்... பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க..

Thursday, September 1, 2016

இதே வெளிநாட்டுகாரன் பன்னியிருந்தா மீடியாவுல

இதே வெளிநாட்டுகாரன் பன்னியிருந்தா மீடியாவுல போட்டு கிளிச்சியிருப்பானுங்க..

நம்ம நாட்டுல பன்னுனதுனால யாருக்குமே தெரியாம போச்சி...

பாராட்ட நினைச்சா பகிருங்க

போய் வா.. அனாதைகள் #அனாதையாகவே_

வித்த
காட்டி நீ தந்த...
தட்டு  சோத்தில்
நான் வாழ..

பழம்
தின்னே..
நீ வாழ..

யார்
தணித்தார்
தனியே
நம் பசி..

ஆட சொல்லி
நான் கத்த..
நீ அடிச்ச பல்டிக்கு
தந்த காசு..

யார்
கண் பட்டதாே
மிருகவதை..
செய்தேனாம்..

நீ
காட்டுக்கும்
நான்
அனாதை இல்லத்துக்காம்

போய் வா..
அனாதைகள்
#அனாதையாகவே_சாக..!

வாழ்த்துக்கள் ..

வாழ்த்துக்கள் ..

Emergency Exit

Emergency Exit new technology introduced in our Government bus 😂 😂 😂

ஸ்கூல் விட்டு வருகின்ற வழியில்

ஸ்கூல் விட்டு வருகின்ற வழியில் சோறு சமைக்க அம்மா பொறுக்கிவச்ச விறகை தலையிலும், ஸ்கூல் பேக்கை முதுகிலும் சுமந்து வரும் இந்த பாப்பாவுக்கு ஒரு லைக் போடுங்களேன்...

தாய்

அழகான காலை நேரத்திலை

அழகான காலை நேரத்திலை இந்த வரைபடம் சமர்ப்பணம் நண்பர்களே.....இந்த ஓவியரே பாரட்டுலமே......

Tuesday, August 30, 2016

நம் அறகட்டளையினரின் ஆர்வத்திறமை


இந்த நாட்டாமையை பிடிக்குமா.

இந்த நாட்டாமையை பிடிக்குமா.

எனக்கு யாரும் லைக் போட மாட்டார்கள்

எனக்கு யாரும் லைக் போட மாட்டார்கள் ஏன்ன நான் ஒரு ஏழை

தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம்

தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம்
இவரை வாழ்த்தலாம்.

Tamil Song with Bharanatiyam

தமிழ் உயிரெழுத்துக்கள் பாடல்.
உங்களுக்காக விழுப்புரம் மாவட்டம்.,

...நி.பள்ளி-கோனேரிக்குப்பம் மாணவர்கள்.

நடனம். பரதநாட்டியம்,
பாடல்.,இசை வாயிலாக

பாடல்:


-2
என்பது ஆயுத எழுத்து -2
உயிரெழுத்துக்கள் 12
மறவாதீர்கள்!

உயிரின்றி ஒரு வார்த்தையும்
பிறக்காதிங்கே 

Monday, August 29, 2016

வெள்ளை முட்டை, பிரவுன் முட்டை எது பெஸ்ட்?

வெள்ளை முட்டை, பிரவுன் முட்டை எது பெஸ்ட்?

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது நம் தாத்தா காலத்துக் குழப்பம்... இது ஒருபுறம் இருக்க சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளை ஒரு டிரேவிலும், பிரவுன் நிற முட்டைகளை இன்னொரு டிரேவிலும் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். காலங்காலமாய் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டு பழகிய நமக்கு, பிரவுன் முட்டைகள் கோழி முட்டைகள்தானா என்றோர் சந்தேகம் வரும். சிலர் "பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம். எனவே, அதில்தான் சத்துக்கள் அதிகம்" என்பார்கள். இதெல்லாம் உண்மைதானா? எப்படி சரியான முட்டையை வாங்குவது எது சரியான முட்டை என குழப்பம் வரும் இதுகுறித்து சென்னை, கோழி இன ஆராய்சி நிலையத்தின் பேராசிரியர் ஏ.வி.ஓம்பிராகாஷ் அவர்களிடம் இதுபற்றி கேட்டோம்.

இதெல்லாம் கோழியைப் பொருத்த விசயம் பாஸ்!

முட்டை, வெள்ளை நிறம், பிரவுன் நிறம் என்பன எல்லாம் கோழிகளைப் பொருத்த விசயங்கள். பொதுவாக, வெள்ளை லெக்கான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழியின வகைகள் பிரவுன் முட்டைகளையும் இடுகின்றன. (நாட்டுக்கோழிகள் சற்றே பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை, அதனால்தான் கலப்படக்காரர்கள் அளவில் சற்று பெரிய பிராய்லர் கோழி முட்டைகளை, டீத்தூள் டிகாக்ஷனில் முக்கி, நாட்டுக்கோழி முட்டைகள் என விற்கின்றனர்) மற்றபடி, பிரவுன் முட்டைகளோ வெள்ளை முட்டைகளோ இதன் ஊட்டச்சத்து மதிப்பில் எந்த வித்யாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

"அப்படியானால், பிரவுன் முட்டைகள் ஏன் விலை அதிகமாக உள்ளன?"

"பிரவுன் முட்டைகள் வெள்ளை முட்டைகளைவிடவும் அளவில் சற்று பெரியவை. எனவே, அதன் விலையும் அதிகமாக உள்ளது அவ்வளவே."

"முட்டை ஓடுகளில் வித்யாசங்கள் உள்ளனவா?"

"நிறத்தைத் தவிர வெள்ளை முட்டையின் ஓட்டுக்கும், பிரவுன் முட்டையின் ஓட்டுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சிலர், பிரவுன் முட்டையின் ஓடுகள் தடிமனானவை என்பார்கள். இதுவும் தவறு. அளவில் சற்றுப் பெரியவையே தவிர, தடிமனில் வித்யாசம் கிடையாது."

"மஞ்சள் கருவில் வேறுபாடு இருக்குமா?"

"இருக்காது. சிலர் பிரவுன் முட்டைகளின் மஞ்சள்கரு, வெள்ளை முட்டைகளைவிடவும் மஞ்சளாக இருக்கும் என்பார்கள். இது தவறு. பொதுவாக, கோழி சாப்பிடும் உணவுக்கும் அதன் மஞ்சள்கருவுக்கும் மட்டுமே தொடர்பு உண்டு. அதாவது, மக்காச்சோளம், சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா, போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து அளிக்கும்போது கருவின் மஞ்சள்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி, கோழி முட்டையின் ஓட்டின் நிறத்துக்கும் மஞ்சள்கருவின் நிறத்துக்கும் தொடர்பு இல்லை."

அலுப்பும்.. கலைப்பும்... ஒன்று சேர...

அலுப்பும்..
கலைப்பும்...
ஒன்று சேர...
ஆயாசமாய்..வீடு வர...

உன்
அன்னை
சொன்னால்..
நீ
பூப்பெய்ததை..

முற்றம் வந்து
உனை தூக்கி சுற்றி..
முத்தமிட ஆவலாய்...
வருகின்றேன்..

கீற்றோரம்
நீ வெட்கி நிற்க்க..
சடுதியில்..
பூக்குது..
#நானறியா_வெட்கம்_மகளே.!

How Is It?


Sunday, August 28, 2016

டேய்வாடாகருப்பா?

டேய்வாடாகருப்பா?

முயற்சியும், பயிற்சியும்

முயற்சியும், பயிற்சியும் இணைந்தல்
வெற்றி நிச்சயம்.

அற்புதம்

அற்புதம்! இயற்கையின் அழகில் எல்லையில்லா
இன்பம்.....

பணம்

பசித்தல் பணத்தை சாப்பிட்ட முடியாது.

இதை யோசித்தல் விவசாயத்தை காப்பாற்றலாம்.

Saturday, August 27, 2016

அறியமையில் நான் இல்லை

இந்த கிரிக்கெட் வீரரை பிடிக்குமா.

🎈 Happy Birthday!      🔥      🔥      🔥      📍      📍      📍      📍      📍      📍 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🍓🎂🍓🎂🍓🎂🍓 🍓🎂🍓🎂🍓🎂🍓🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

இந்த விவசாயியின் தன்னம்பிக்கைக்கு

எத்தனை லைக்  தரலாம்.

நீ எந்த இடத்துக்கு போனாலும் வந்த இடத்த மறக்காதே

நீ எந்த இடத்துக்கு போனாலும் வந்த இடத்த மறக்காதே!
பில்கேட்ஸ் அமெரிக்காவில் ஓர் உயர்தர ஓட்டலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்தவுடன் பில் தொகையுடன் ஐந்து டாலர்கள் அந்த சர்வருக்கு டிப்ஸ் தந்தார்.
சர்வரின் நெற்றி சுருங்கியது.
""பில் தொகையில் வித்தியாசமா?''
பில்கேட்ஸ் கேட்டார்.
""இல்லை சார்...
நேற்று இதே ஓட்டலில் உங்கள் பையன் உணவருந்திவிட்டுச் சென்றார்.
அவர் அந்த சர்வருக்கு 50 டாலர்கள் டிப்ஸ் தந்தார்.
நீங்கள் அவருடைய தந்தை.
பலகோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர்.
ஐந்து டாலர்கள்தான் தருகிறீர்கள்.
ஆச்சரியமாக இருந்தது''
பில்கேட்ஸ் சிரித்துக் கொண்டே சொன்னார்:
""அவனுடைய தந்தை ஒரு கோடீஸ்வரர்.
ஆனால் என்னைப் பெற்றவர் ஒரு மரத் தொழிலாளிதான்.
அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.
கடந்த காலம் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்''

#படிக்காதபாமரன்முட்டாளும்அல்ல.....

#படிக்காதபாமரன்முட்டாளும்அல்ல.....
#படித்தவர்கள்அனைவரும்அறிவாளிகளும்அல்ல..........................
நான் காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்கு எனக்கு முன் ஒரு பெரியவர் ஏதோ வாங்கி கொண்டிருந்தார்....
வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது).. சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை... கையில் ஒரு கருப்பு குடை... காலில் இப்பவோ அப்பவோ என உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் செருப்பு....
சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....
கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...
பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...
கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறீங்க?..... உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் ஒன்றும் கொறஞ்சிடமாட்டேன்...
பெரியவர்: நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்...
இந்த கருமத்தால(பாலிதீன்) வீடு குப்பையாச்சி...
ஊரு குப்பையாச்சி... நாடு குப்பையாச்சி...
இந்த உலகமே குப்பையாச்சி...
மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது...
எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது...
இலவசமா கிடைக்குது.. பாவிக்க(பயன்படுத்த) சுலபமா இருக்கு...
அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும்....
அந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் உபயோகப்படுத்திட்டு இனி முடியாதுங்கும் போது தூக்கி குப்பைல போடு....
இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்...
பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்ப்டுத்துவதில் என்ன வெட்கம் ?...(முனுமுனுத்து கொண்டே சென்றார்...)
சுண்டுவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி....
படித்தவர்கள்..... பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள்....
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள்... அனைத்து மொழி செய்திதாளையும் தினந்தோறும் தவராமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்....
இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க.....
எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....
பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே... சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது....
5 நிமிடத்திற்கு முன் சாதாரண பாமரனாக தெரிந்த அவர்...
5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்..
அன்றிலிருந்து அவரைப் பார்த்து நானும் அதனை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன்.....
#நீங்கள்__??????????????????????????????????

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…….

வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள்.

அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.

அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை.

புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும்.
அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.

பேசிக்கொண்டே நடப்பது,
பேச்சின் மூலம் அன்பை,
நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.

இது ஒரு அருமையான அனுபவமும் கூட.
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும்.
இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும்.
இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

அதே போல ஒரு ஆணை நேசிக்க தொடங்கி விட்டால் அவனின் புறத்தோற்றம் பற்றி கவலை படுவதும் இல்லை என்பது நிதர்சன உண்மை.

இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.

உன் அழகு உருவத்தில் இல்லை,
மனதில்தான் இருக்கிறது,
உனது பேச்சுதான் உனக்கு அழகு,
உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.

அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்

Friday, August 26, 2016

பாசம் கூட!

பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட! ஒரு சில மனிதர்களிடம் இருப்பதில்லை!

செல் போன்

இந்த செல் போன் யார்ரெல்லாம் பார்த்துருக்கேங்க அவங்க #லைக் பண்ணுங்க!!

Thursday, August 25, 2016

படிப்பு

ஹோம் வொர்க் செய்யாம போயி
மிஸ்க்கு பயந்து நோட்டுக்கு கிழ்
நோட்டை வைத்தவர்கள் யார் யார்
சொல்லுங்க ....

நேதாஜி

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!
(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு)..

நல்லவை ...... கெட்டவை

ருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.
“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.
ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.
“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.” என்று கூறினார் குரு.
மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.
மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.
“தெரியவில்லை."
"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார்.
அதிலிருந்து தேன் வெளியேவந்தது.
மற்றொரு ஜாடியை கவிழ்த்தார்.
அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.
“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை உங்களுக்கு தெரியாது. வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது
"இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும்வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும்போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது."
"நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார்.
“மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒன்றை நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?”
அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!
தேன் ஜாடியை மட்டும் நீங்கள்வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?
”கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவிசாய்ப்பதில்லை.
இறைவன் நம்மை சோதிப்பதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல.
அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம்அறிந்து கொண்டால்தான்நம்மை திருத்திக்கொள்ளமுடியும்
இல்லையெனில்நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்குவாய்ப்பேகிடைக்காமல்போய்விடும்.