நீ எந்த இடத்துக்கு போனாலும் வந்த இடத்த மறக்காதே!
பில்கேட்ஸ் அமெரிக்காவில் ஓர் உயர்தர ஓட்டலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்தவுடன் பில் தொகையுடன் ஐந்து டாலர்கள் அந்த சர்வருக்கு டிப்ஸ் தந்தார்.
சர்வரின் நெற்றி சுருங்கியது.
""பில் தொகையில் வித்தியாசமா?''
பில்கேட்ஸ் கேட்டார்.
""இல்லை சார்...
நேற்று இதே ஓட்டலில் உங்கள் பையன் உணவருந்திவிட்டுச் சென்றார்.
அவர் அந்த சர்வருக்கு 50 டாலர்கள் டிப்ஸ் தந்தார்.
நீங்கள் அவருடைய தந்தை.
பலகோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர்.
ஐந்து டாலர்கள்தான் தருகிறீர்கள்.
ஆச்சரியமாக இருந்தது''
பில்கேட்ஸ் சிரித்துக் கொண்டே சொன்னார்:
""அவனுடைய தந்தை ஒரு கோடீஸ்வரர்.
ஆனால் என்னைப் பெற்றவர் ஒரு மரத் தொழிலாளிதான்.
அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.
கடந்த காலம் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்''
Saturday, August 27, 2016
நீ எந்த இடத்துக்கு போனாலும் வந்த இடத்த மறக்காதே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment