Thursday, August 18, 2016

இயற்கை ஆர்வாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் -

இயற்கை ஆர்வாளர்களுக்கு
ஒரு வேண்டுகோள் -

தற்பொழுது பனைவிதைகள் விழும் காலம்.அதை சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எறிந்து விட்டால் அது மழைபெய்யும் போது தானாகவே தழையும்.

எந்தவித பராமரிப்பும் தேவையில்லை. ஆடு,மாடுகள் கடித்தாலும் அதன்வளர்ச்சி பாதிக்காது.

இதன் வேர்கள் சுமார் 50 அடி ஆழம் வரை பூமிக்குள் செல்லும். இதனால் எவ்வளவு வரட்சியையும் தாங்கும்.

மழைக்காலங்களில் அதன் வேர்கள் மழைநீரை 50 அடி ஆழத்திற்கு பூமிக்குள் கொண்டு சேர்க்கும் குழாய்களாக செயல்படும்.

இதனால் நிலத்தடிநீர்மட்டம் கனிசமாக உயரும்.மண்அரிப்பை அரவே தடுக்கும். மலைப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு செய்பவர்கள் பைகளில் எடுத்துச்சென்று வீசிவிட்டால் கூட அது தழையும்.

இதை இறைவழிபாட்டின் ஒரு முறையாக கூட செய்யலாம்.பனைமரங்களின் நன்மைகள் ஏராளம்.

No comments:

Post a Comment