#வேளாங்கண்ணி என்ற விவசாயின் அனுபவம்
ஒரு ஏக்கர் பந்தல் விவசாயம் செய்துள்ளேன் அதில் பாவை புடலை அவரை பீர்க்கை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யலாம் பந்தல் போட ஒரு லட்சம் செலவாகும்
பொதுவாக பந்தலுக்கு குச்சிகொண்டு கூசம் போடுவதைக்காட்டிலும் கல் கூசத்திற்கு செலவு கூட வரும் ஆனால் காற்று அடித்தால் கல்கூசம் போட்ட பந்தல் சாயாமல் இருக்கும்.
செலவு கொஞ்சம் கூடுதலா இருந்தா பரவாயில்லை என்று கல்கூசம் ஒரு ஏக்கருக்கு 70 போட்டேன் குச்சி என்றால் 10க்கு 10 அளவுள 400 குச்சி போடனும் கம்பி 15 அந்தர் தேவைப்படும் கிலோன்னு பாத்தம்னா 750 கிலோ கம்பிவரும் ஒருகிலோ கம்பி 65 ரூபாய்.
ஆட்கள்செலவு ஒரு ஆட்களுக்கு பந்தபோட கூலி 500 ரூபாய், ஒரு ஏக்கருக்கும் பந்தபோட 15 ஆள் தேவைப்படும்.
குறைந்த செலவுன்னு பாத்தம்னா கூட ஒரு லட்சம் ஆகும்.
இவ்வளவு செலவு செய்து பந்த போட்டா நல்ல லாபம் கிடைக்குமா? லாபம் கிடைக்கும் ஒரு போகத்திலே பந்தப்போட்ட செலவு பணத்தை எடுத்தரலாம். வேலைக்கு கூலி ஆள் குறைவாக செல்லும் அதனால நாமே அந்த வேலையைச் செய்யலாம்.
இப்ப புடலை , பீர்க்கை போட்டுள்ளேன் அதுல பாத்தா பறக்கிறபூச்சி அதிகமா வந்துச்சு அதுக்கு கிட்டம்பட்டி விவசாய அலுவலகத்தில் நிறப்பொறி வாங்கி வைத்தேன் பூச்சி எல்லாம் வந்து அதுல ஒட்டிக்கிச்சு.
தினமும் அதிகாலை 7மணிக்கு வயலை சுற்றி பார்ப்பேன் அப்ப வயலில் பழ ஈ வந்து பீர்க்கங்காயை கடிச்சிப்புடுது அதன்பிறகு பார்த்த அந்த காயி அப்படியே ஓடாம நின்னு நுனியில சூம்பி போயிடும்.
அதுக்கு என்னா செய்யலாம்னு விவசாய அலுவலகத்தில போயி கேட்டேன் அங்க இந்த இனக்கவர்ச்சிபொறியை தந்தாங்க வாங்கி வந்து கட்டியதில் நிறைய பூச்சி விழுந்துச்சு இதுனால மருந்து அடிக்கிற செலவு மிச்சம் நோயின் தாக்குதலும் வருவதில்லை நல்ல முறையில
கட்டுப்படுத்துது என்றார்.
தொடர்புக்கு
வேளாங்கண்ணி – 76391 63920
Thursday, August 18, 2016
விவசாயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment