Saturday, August 20, 2016

அன்பு

நடு இரவு ஆகிவிட்டது
நான் தான் கடைசி ஆள்
ஹோட்டலில் வேறு யாருமில்லை
டேபிள் துடைத்து கொண்டிருந்த பையன்
வேண்டா வெறுப்பாக வந்தான்
என்ன இருக்கு என்றேன்
தோசைய தவிர ஒன்னுமில்லை
சரி கொண்டா
மாஸ்டர் ஒரு தோசை
மீண்டும் துடைக்க சென்று விட்டான்
உடல் அசதி, சோம்பல் முறித்தேன்
சின்ன பையன் இந்த இரவில் துடைக்கிறான்
நமக்கு சோம்பல் என எண்ணி கொண்டேன்
அவனை பார்க்க பாவமாக இருந்தது
சாப்பிட்டியா ஒரு வகையாக என்னை பார்த்துவிட்டு
இல்லை என தலையாட்டினான்.
இங்கே வா
வெறுப்புடன் வந்தான் என்ன
முந்திரி தோசை இருக்கா
இத முதல்லே சொல்ல வேண்டியதுதானே
மாஸ்டர் .....
என்று இழுத்தவனிடம்
ரெண்டு சொல்லு என்றேன்
முறைத்து கொண்டே ரெண்டு சொன்னான்
ஐந்து நிமிடம் அவனையே பார்த்திருந்தேன்
தோசை வந்தது.
ஒன்றை நான் எடுத்து கொண்டு
சாப்பிடு என்றேன் அவன் கல்லாவில் உள்ள
ஆளை பார்த்தன்.
இது என் கண்ணனுக்கு என்றேன்
அவர் தலையசைத்தார்
கையைகழுவி வேகவேகமாக சாப்பிட்டான்
முகத்தில் ஒரு அபரிமிதமான சந்தோசம் அவனுள்.
வேற என்ன சார் (!) வேணும்.
ஒரு முத்தம் கொடுக்கனும்டா உனக்கு
சிரித்தான். அழுக்கு கன்னத்தில் முத்தமிட்டேன்
வரடா .....
தலையசைத்தான்.
காசை கொடுத்து வெளியே வந்தபோது
மனசு சிலாகித்தது.
தின கூலி எனக்கு இதாவது செய்ய முடிந்ததே

No comments:

Post a Comment