Saturday, December 29, 2018

#அனைவரும்_படிக்கவேண்டும்_நண்பர்களே

#அனைவரும்_படிக்கவேண்டும்_நண்பர்களே
அவர் ஒரு #பெரிய_துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார்.
ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான #சீடர்கள்இருந்தார்கள்.
ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள்
அது அசைந்து கொடுக்கவில்லை.
"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம் 
வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் #துறவி.
ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.
காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார்.
அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.
அசிங்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் #முகம் சுளிப்பார்கள்.
""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்!
பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.
""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய்.
அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான்.
ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''
துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் #துறவி.
காலம் ஓடியது....
இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.
அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார்.
அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்...
திடுக்கிட்டார்...
இறைவனை வேண்டினார்...
"வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.
""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து #பன்றி வாழ்க்கை வாழ வேண்டும்.
அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் #பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்துவிடலாம்.
ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.
தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.
""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன்...
உடனே எதிரே வசிக்கும் ஒரு #பெண் பன்றியின் கருவில் நுழைவேன்...
குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்...
நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள்...
இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு...
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்து விடுகிறேன்.''
அன்று இரவே #துறவி_மாண்டார்....
பன்றியின் கருவினுள் புகுந்தார்....
துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த 
காலத்தில் #பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் #சீடன்...
பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத 
குறையாகக் கெஞ்சினார்...
""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா?
இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''
""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''
""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்?
இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன?
இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன்.
என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''
தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான்...
அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த உடனேயே தன்னைக் கொன்று போட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார்...
அதில் பற்று வந்துவிட்டது...
ஆம்...
இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் #உண்மை ஒளிந்திருக்கிறது...
இன்று பலரும் #மது, #புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையா கிறார்கள் தெரியுமா????
அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின் 
அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்...
இன்றைய இளைஞர் கூட்டம் மது, #புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது...
அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான்....
பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும்...
பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது...
விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும்...
#விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.
நண்பர்களே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெறும் வாய் வார்த்தைகளால் கடப்பவனுக்கு

வெறும் வாய் வார்த்தைகளால் கடப்பவனுக்கு
எங்கிருந்து தெரிய போகிறது
வலியால் வழியை கடப்பவனின் வே(சா)தனை....✍

நாத்து இவனுக்கு குழந்தை மாதிரி., பயிர் இவனுக்கு உயிர் மாதிரி.,

நாத்து இவனுக்கு குழந்தை மாதிரி., பயிர் இவனுக்கு உயிர் மாதிரி., அறுவடை இவனுக்கு சுகப்பிரசவம் மாதிரி,,🙏

Wednesday, December 26, 2018

வீட்டுக்கு 16 துளசிச் செடியை வளர்ப்போம் – ஏன்?

வீட்டுக்கு 16 துளசிச் செடியை வளர்ப்போம் – ஏன்?

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள் தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அத்துடன் அதிக ஆண்டுகளும் காத்திருக்க வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.

துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

இது மதம் சார்ந்த விஷயம் இல்லை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பி.பி.எம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பி.பி.எம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் (அல்லது) 720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது) 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

GOLDEN WORDS ONE SHOULD FOLLOW. KINDLY GO THROUGH IT

*பதினாறு வகையான அர்தங்கள்*
----------------------------------------
GOLDEN WORDS ONE SHOULD FOLLOW. KINDLY GO THROUGH IT.😊🎻🎻🎻

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]

3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.

10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

Tuesday, December 25, 2018

இனி பொருட்கள் வாங்கும் அனைத்து கடைகளிலும் ... துணிப் பை தான்...

இனி பொருட்கள் வாங்கும் அனைத்து கடைகளிலும் ... துணிப் பை தான்...
துணிப் பையில் ... தமிழில் ... சிந்திக்கும் வார்த்தைகளை பயன் படுத்துங்கள்... உதாரணம்... அறுசுவை உண் ... மரம் உனது உயிரின் அடிப்படை ... துணிப் பையில்... தமிழ் அறிஞர்களின் படத்தை பொறித்து அவர்களுக்கு பெருமை சேர்த்திடுங்கள்... கோ.நம்மாழ்வார்... நெல் ஜெயராமன்... டாக்டர் அப்துல் கலாம்... காமராசர் ... திருவள்ளுவர்...

Monday, December 24, 2018

கார்கில் நாயகன் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று

*வாழ்நாள் முழக்கம் எல்லாம் தேசம் எனும் ஓசை,*

*பாரதத்தின் எழுச்சிதான் அவரது சிந்தை நிறைந்த ஆசை,*

*கார்கில் போரில் வென்ற பொழுது தேசமே முறுக்கியது மீசை,*

*மத்திய அரசு வெளியிட்டுள்ளது 100 ருபாய் நாணயத்தின் காசை!!!.*

கார்கில் நாயகன் வாஜ்பாய் பிறந்தநாள் இன்று!

படிப்பதை பறவைகள் வேடிக்கை பார்க்கும்

படிப்பதை பறவைகள் வேடிக்கை பார்க்கும் !
காற்று பக்கங்கள் புரட்டும் !
முதிர்ந்த இலைகள் புத்தகத்தை முத்தமிடும் !
மறந்திடுவேனோ மரத்தடி நிழலில் அமர்ந்து மனப்பாடம் செய்ததை 😍..!

இன்று யாசகம் கேட்பவர்கள் நம்மிடம் "என்றோ" ஒரு நாளில் நம்மைப்போல் வாழ்ந்தவர்கள்

இன்று யாசகம் கேட்பவர்கள் நம்மிடம் "என்றோ" ஒரு நாளில் நம்மைப்போல் வாழ்ந்தவர்கள் தான்..

ஏதோ சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு இன்று வாழ்ந்து கெட்டவர்கள் தான்

தற்போதும்கூட யாசகம் கேட்பவர்கள்

மழையில் நனைந்த மலரின் அழகில்

மழையில் நனைந்த
மலரின் அழகில்
அழகியியலானது
விடியல்.

Saturday, December 22, 2018

சாப்பிடும்முன் பெரியவர்களை கேட்டு ஆலோசனை பெற்று சாப்பிடவும்

மூலிகைகளின் பயன்கள் எளிய வடிவில்
-முகநூல் பதிவாளர்
அனைத்து இடங்களிலும் அறிவிப்பு பலகைகளில் ஒட்டி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் எளிய நமது மண்ணுக்கு மிகவும் அவசியமான பொதுஅறிவு ஆகும்.
சாப்பிடும்முன் பெரியவர்களை கேட்டு ஆலோசனை பெற்று சாப்பிடவும்.
தானியங்கு மாற்று உரை இல்லை.

பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?

உளுந்தங்களி:
பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?
இந்த காலத்தில் டீன் ஏஜ் பெண்குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் கோளாறுகள், கர்ப்பப்பை வீக்கம், வெள்ளைப் படுதல் போன்றவை தென்படுகின்றன.
இவற்றிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் நல்ல உணவுகளை சாப்பிடாமல், துரித உணவுகளையும், கார்பனேட்டட் பானங்களை குடிப்பதாலும், அவை கர்ப்பப்பையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த காலத்தில் இன்று போல் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட இத்தனை வியாதிகள் வந்ததில்லை. உணவுகளும் பத்தியமும்தான் இதற்கு காரணம்.
ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் , உளுந்தங்களியும், முட்டை, நல்லெண்ணையும் தருவது இன்றும் கிராமத்தில் பின்பற்றி வருகிறார்கள்.உளுந்தங்களியில் சேர்க்கப்படும் உளுந்து கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.
அதில் இருக்கும் கால்சியம் இடுப்பு எலும்புகளை பலமாக்குவதால் பிற்காலத்தில் குழந்தை பிறக்கும்போதுபிரச்சனை வராது. அதோடு, வெல்லம் அல்லது கருப்பட்டி ரத்த உற்பத்தியை அதிகரிப்பதால் தேகம் அரோக்கியமாகவும் என்றும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.
இந்த உளுந்தங்களியை பெண் குழந்தைகள் மட்டுமல்ல, பலகீனமாக இருக்கிறவர்களும் சாப்பிடலாம். அதனை தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.
தேவையானவை
உளுந்து – அரை கப்
பனை வெல்லம் – 2 கப்
(ஆ) கருப்பட்டி-
நல்லெண்ணெய், சுக்கு, ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் உளுந்தை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் அரிசியை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இது தான் களி மாவு. வெல்லத்தை(கருப்பட்டி) பொடித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதி வரும் போது அரைத்த அரிசி, உளுந்து மாவை சிறிது சிறிதாக தூவிக் கொண்டே, கை விடமால் கிளறவும்.
நடு நடுவே நல்லெண்ணெய் விட்டு கட்டி தட்டாது கிளறவேண்டும்.
மாவு சிறிது வெந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, எண்ணெய் சேர்த்து கிளறிவும். பிறகு களி உருண்டு வரும் பதத்தில் இறக்கி ஆறிய பின் உருண்டை பிடித்த்க் கொள்ளுங்கள்.
தினமும் இந்த உருண்டை ஒன்று உண்டு வர வேண்டும்.

மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன.

மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போதும் கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும்.

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய் 
மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு 
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Friday, December 21, 2018

எப்பொழுது உங்களுடைய பலவீனத்தை உணர்வீர்களே. அப்போது உங்கள் பலத்தையும் உணர்வீர்கள்

எப்பொழுது உங்களுடைய
பலவீனத்தை உணர்வீர்களே.

அப்போது உங்கள்
பலத்தையும் உணர்வீர்கள் !!!...

ஆசையை அளவு எடு... அன்பை அதிகம்

ஆசையை அளவு எடு...
அன்பை அதிகம் கொடு...💖
வீம்பை விற்று விடு...🏆
வினையத்தைப் புதைத்து விடு...
விவேகத்தின் விளைச்சலைப் பெருக்கு...
நம்பிக்கையில் நகலைத்
தேடாதே...☯
துன்பத்தால் துவண்டு
ஓடாதே.

தாயின் மடியில் உறங்குவது பாசத்தில் ஓர் வரம் எனில்

தாயின் மடியில் உறங்குவது பாசத்தில் ஓர் வரம் எனில்..!!

தாரத்தின் மடியில் உறங்குவது பாரத்தை குறைத்து,நேசத்தை நிறைக்கும் இன்னொரு வரம்..!!!

வரத்தின் வரம் ❤️❤️

வினோதமாய் அவனைப்பார்த்து விட்டு பைத்தியமென்றும் தமக்குள் பேசிச்சென்றன

யாரும் அவனிடம் பேசாது இருக்க..

அவனே அவனிடம் பேசிக்கொண்டு தெரிகிறான்..

வினோதமாய் அவனைப்பார்த்து விட்டு பைத்தியமென்றும் தமக்குள் பேசிச்சென்றன..

#நிஜபைத்தியங்கள்

Thursday, December 20, 2018

முன்னேறிப் போ உன் காலடியில் வெற்றி மண்டியிடும்வரை.!

ஒவ்வொரு முறையும்
நீ புறக்கணிக்கப்படும் போதும் வளர்ந்துக்கொண்டிருக்கிறாய்.!

உன்னை எதிர்க்க துணிவில்லாத எதிராளி மறைந்துக்கொள்ளும்
உறைவிடம் அது.!

முன்னேறிப் போ
உன் காலடியில்
வெற்றி மண்டியிடும்வரை.!

எதுவும் இல்லாதவர்க்கு முயற்சி மட்டுமே மூலதனம் !!!...

எதுவும்
இல்லாதவர்க்கு
முயற்சி மட்டுமே
மூலதனம் !!!...

ஒரு கூறு கோணபுளியங்கா, ஒரு டப்பா எழந்தப்பழம் இல்லனா ஒரு டப்பா கல்லக்காய்

ஒரு கூறு கோணபுளியங்கா, ஒரு டப்பா எழந்தப்பழம் இல்லனா ஒரு டப்பா கல்லக்காய் ரெண்டு ரூபா இருந்தா போதும்😍

வயிறும் நிறஞ்சிரும் மனசும் நிறஞ்சிரும்🤞

#பழைய_நினைவுகள்

எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால் தோல்விகளும் பயந்து ஓடும்

எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால் தோல்விகளும் பயந்து ஓடும்
உங்கள் மனதைரியத்தை பார்த்து

Wednesday, December 19, 2018

நமக்கு இருக்கும் தினசரி பிரச்சனைகளில் ஒன்று ஹெட்போன் சிக்கலை

நமக்கு இருக்கும் தினசரி
பிரச்சனைகளில் ஒன்று
ஹெட்போன் சிக்கலை
விடுவிப்பது என்பது
எத்தனை பேருக்கு தெரியும்.😥

ஒரு கிளை வெட்டப்பட்டாலும் பல கிளைகள் முளைத்தே தீரும் மரத்தின்

ஒரு கிளை வெட்டப்பட்டாலும்
பல கிளைகள்
முளைத்தே தீரும் மரத்தின்
இருப்பை நிலைநிறுத்த !!!...

ஒவ்வொரு தோல்விக்கு
பிறகும் பல முயற்சிகள்
முளைக்கிறது மனிதத்தின்
இருப்பை உலகத்திற்கு உணர்த்த !!!...

Sunday, December 16, 2018

ஒரு முறை உன்னை நோக்கிய என் விழிகளின் தரிசணத்திற்கு பலமுறை வலிகளை

ஒரு முறை
உன்னை
நோக்கிய
என்
விழிகளின்
தரிசணத்திற்கு
பலமுறை
வலிகளை
வரமாய்
பெருகிறது
என் இதயம்😍

ஆச்சார்யாமான இந்த உலகில் நீயே வந்தாய்...

ஆச்சார்யாமான இந்த உலகில் நீயே வந்தாய்...

ஆச்சார்யாமாய் உள்ளது  என்னுல் எப்படி வந்தாய் என்று..........

Saturday, December 15, 2018

அன்பு காட்ட ஆளிருந்தாலும் ஆறுதலாய் சாயத் தோளிருந்தாலும்

அன்பு காட்ட ஆளிருந்தாலும்
ஆறுதலாய் சாயத் தோளிருந்தாலும்
கண்ணீர் துடைக்கும் கைகள் இருந்தாலும்
கடுகளவும் வெட்கமின்றிக்
கருணையே இல்லாமல்
கண்ணெதிரே சாத்தப்பட்ட
கதவின் முன்னால் தான்
கலங்கும் விழிகளோடு
காலம் மறந்து
காத்துக் கிடக்கும்
மனம் - ஒரு குரங்கு...!

Thursday, December 13, 2018

முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே

முடி சார்ந்த மன்னரும் முடிவில்
பிடி சாம்பல் என்பதை
மறவாதிரு மனமே 🙏
எவனொருவன் பஸ்மத்தை தரிக்கின்றானோ  அவன் தன் முடிவை எதிர்நோக்கி, இகலோக இன்பங்களை துறந்து இது மெய் அல்ல என்பதை உணர்பவனே.

கட்டிகடங்காத காளையும் கட்டி அனைத்தால் அடங்கிவிடும் #அன்பு


கட்டிகடங்காத காளையும் கட்டி அனைத்தால் அடங்கிவிடும் 😍..!
#அன்பு💗

வீட்டுக்கு வெளிச்சம் என்றால் உருகுவதும் உல்லாசமே , மெழுகுவர்த்தியாய் அப்பா

வீட்டுக்கு வெளிச்சம் என்றால் உருகுவதும் உல்லாசமே ,
மெழுகுவர்த்தியாய் அப்பா👨‍👦‍👦..!

தன்னை நம்புவதை விட மண்ணை நம்புபவன் விவசாயி !!!....

தன்னை
நம்புவதை விட
மண்ணை நம்புபவன்
விவசாயி !!!....

நம் கஷ்டத்தை தெரிந்தும் தெரியாதது போல் நெடு நேரம் காக்க வைத்து உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்வியோடு எனக்கு முன்னாடியே தெரியாம போச்சேனு சொல்லும் நட்பும் நம் துரோகியே

நம் கஷ்டத்தை தெரிந்தும்
தெரியாதது போல்
நெடு நேரம் காக்க வைத்து
உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்வியோடு எனக்கு முன்னாடியே தெரியாம போச்சேனு சொல்லும்
நட்பும் நம் துரோகியே..,