Monday, May 20, 2019

#மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

 
#Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய #கோவில், #மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
#காிகாலனின் #கல்லணை. #சிதம்பரம் #நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் #சிவனையும் #நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் #நாடி #நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி 
தங்க ஒடுகள் #ஊசிகள் பதித்தான் இன்னும் இது 
போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.
#Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.
#Chemical Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.
#Aero Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.
#Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.
#Explosive Engineering தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.
#Metal Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.
#Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.
#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.
#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது
#Bachelor/ Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.
#Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.
#Chartered Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.
#Anomaly Scan/ Target Scan இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான்.
ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம் மந்திரம் போதும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது 
லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient ) படிப்பு
கிடையாது.
ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து அதில் பல அணுக்கள் போராடி அதில் ஒன்று தான்
கா்ப்பபைக்கு சென்று உயிா்
உண்டாகிறது என்று.
ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான் அற்புதமாக தன் ஞானத்தினால் லட்சமாக உருவெடுத்து ஆயிரம் ஆகி
நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா்
என்றாா்.
#ஓம்நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏

Sunday, May 19, 2019

சித்தர்கள்_கண்டறிந்த_நோய்கள் 4448.

சித்தர்கள்_கண்டறிந்த_நோய்கள் 4448.
Sundarji
Suryatrust
இவைகள் உடல் முழுவதும் தோன்று வதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும்.
இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால்_உண்டாகும்_நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால்_உண்டாகும்_நோய்க்குறிகள்: (குணங்கள்)
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள்_உருவாகக்_காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண்_நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
பொதுக்_காரணங்கள் :
வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.
சிறப்புக்_காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.
காசநோய் :
கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.
முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
கபால_நோயின்_வகை :
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை_நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.
அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை
3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
ஆண், பெண், அலியாவது_ஏன்?
"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)
ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)
அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.
கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?
"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)
சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்....நன்றி

Saturday, May 18, 2019

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.printer - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப் பிடிப்பு
36.Inkjet - மைவீச்சு
37.Laser - சீரொளி
- தமிழுணர்வு கொண்டோர் இதை நண்பர்களுக்குப்
பகிரலாம் -

Friday, May 17, 2019

*வாரியார் சொன்ன "சாமியாரும் குரங்கும்" என்ற அருமையான கதை

*வாரியார் சொன்ன "சாமியாரும் குரங்கும்" என்ற அருமையான கதை.!!!*
Suryatrust
Sundarji
ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார்..!!
அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய *"சாமியார்",* தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்..
குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது..
உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார்..!!
குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது..
திரும்பவும் தலையில் அடித்தார்..!!
அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது...
நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை..
சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே..??
அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்..!!
சாமியார் எதுவும் பேசவில்லை..
சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்...
சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது..
காதைப் பிடித்து இழுத்தது..
தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது...
சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது..
உடனே சாமியார் நண்பர்,
ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர்..!!!
உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார்..
அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது..
உடனே 
சாமியார் சொன்னார்...
இந்தக் குரங்கைப் போலத் தான்
மனித மனங்களும்...
நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது..!!
தேவாரம்,
திருவாசகம், தியானம், 
தவவிரதங்கள் என்னும் பிரம்புகளால் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்..!!
சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார்..!!!
உலகை படைத்த பரமனுக்கும்,
தேன் சொட்டும் திருவாசகத்திற்கு ஏது இணை..!!!
*சிவன் இன்றி ஓர் அனுவும் அசையாது..!!!*
*சிவனென்றிரு மனமே..!!!*
திருச்சிற்றம்பலம்...

Thursday, May 16, 2019

ஒரு நாத்திகன் ஒரு துறவியிடம் சென்று, "நீங்கள் கடவுள் இருக்கின்றார் என்று

*இன்றைய ஆன்மீக சிந்தனை*
Sundarji
Suryatrust
*கடவுளை தேடு
ஒரு நாத்திகன் ஒரு துறவியிடம் சென்று, "நீங்கள் கடவுள் இருக்கின்றார் என்று உறுதியாக கூறுகின்றீகள் அல்லவா!! இருக்கும் அந்த இறைவனின் ஆற்றலையும், அவன் எப்படிப்பட்டவன், அவன் எப்படி உள்ளான் என்பதையும் எனக்கு விவரித்துக்கூறினால் நான் நம்புகின்றேன்." என்று கூறினான். உடனே அந்த ஞானி, அவனை கடற்கரைக்கு கூட்டிச்சென்றார். ஒரு சிறிய ஓட்டையான கொட்டாங்குச்சியை அவன் கையில் கொடுத்தார்.
"தம்பி நீ இப்போ என்ன செய்யனும்னா, இந்த கொட்டங்குச்சியால் இந்த கடல்நீரை அளந்து கொட்டி, இந்த கடலில் மொத்தம் எத்தனை கொட்டங்குச்சி கடல்நீர் உள்ளது என்று எனக்கு அளந்து சொல்" என்றாராம்.
ஹ ஹ !!!! அது எப்படி சாத்தியமாகும்?!!
கடல் ஆனந்தமானது அதை எதைக்கொண்டும் அளக்க முடியாது. பின் எப்படி அதுவும் ஒரு ஓட்டை கொட்டங்குச்சியால்??!!! 
அது எப்படி சாத்தியமற்றதோ அவ்வாறே நாம் நம் ஓட்டை சிற்றறிவைக்கொண்டு இறைத்தன்மையை தேடுவதும்!!!
பல புத்திசாலிகள் கடவுள் எங்கே? அவரை பார்க்காமல் அவரை நாங்கள் நம்ப மாட்டோம் என்று கூறுகின்றனர். தேடி கண்டுகொள்ளும் அளவிற்கு கடவுள் என்ன அவ்வளவு சாமானியமா?? 
எத்தனை யோஜனை விரிந்துள்ளது என்றே தெரியாத, எத்தனை ஆயிரம் லக்ஷம் கோடி ஹிரகங்கள் இருக்கின்றன என்றே கற்பனை செய்ய முடியாத பிரபஞ்சசக்தியை கண்டுபிடித்து காண முடியும்!!!.
திருவாசகத்தில் அருமையான ஒரு உவமை, " ஒரு வீட்டில் கூரையில் உள்ள ஓட்டை துவாரத்தில் இருந்து சிறிய சூரிய கீற்று வருகின்றது. அந்த வெளிச்சத்தில் இடைவெளியே இல்லாமல் பல தூசித் துகள்கள் தெரியும். அண்டவெளியில், ஒவ்வொரு தூசியும் ஒரு லக்ஷம் கோள்கள்!!" என்று கற்பனைக்கு எட்டாத உவமையை தரிகின்றார் மாணிக்கவாசகர். ஒரு தூசியே ஒருலக்ஷம் கிரகங்கள் என்றால், அதில் இடைவெளி இல்லாத அத்தனை துகள்கள், அதில் எத்தனை அனந்த லக்ஷம் கிரகங்கள்??? அப்பா!!!!........... தலை சுற்றுகிறது!!!
அனந்த பிரபஞ்சத்தை நம்மால் கற்பனை செய்ய முடியுமா?
அந்த பிரபஞ்ச சக்தியை நம்மால் அளக்க முடியுமா?
நிச்சயம் முடியவே முடியாது!!!
ஒரு பொருளை நினைக்க அதன் உருவத்தை மனதில் நிறுத்த வேண்டும். ஆனால் பிரபஞ்ச சக்தியான பிரம்மதிர்க்கோ உருவமும், பெயரும், குணமும் எதுவும் கிடையாது. கற்பனைகள் அற்று மனம் சும்மா இருப்பதே பிரம்மத்தை காண்பதாகும். கற்பனைகளை ஜெயிப்பதே பிரம்ம சாக்ஷாத்காரம், கைவல்யம், முக்தி, மோக்ஷம், பிறப்பற்ற நிலை,......................... என்றெல்லாம் கூறப்படுகின்றது.
நட்புடன்! !!!!!!

Wednesday, May 15, 2019

ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது.

**திருவாலங்காடு*
#Suryatrust 
#Sundarji

ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது. அந்த ஆலயம், திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
*திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில்*
மகப்பேறு என்பது ஒரு சிலருக்கு பெரும் கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது.
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லை என்றால் அந்த வாழ்க்கை முழுமை பெறாது.
திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும் அபிராமி பட்டர் கூட, “கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும் வேண்டும்” என்கிறார்.
எது தவறினாலும் சந்தானம் என்னும் குழந்தை பாக்கியம் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது குழந்தைச் செல்வம்.
சிலருக்கு உடனடியாக புத்திரப் பேறு கிடைத்து விடும்.
ஆனால் ஒரு சிலருக்கு அது அமைய வெகு காலம் ஆகிவிடும்.
அதிலும் தற்போது இருக்கும் உணவு பழக்கங்கள், மன அழுத்தம், இறுக்கமான உடைகளை அணிவது, மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்துவது, இரவு நேர வேலை, வேலைப்பளுவினாலும், கர்ம வினைகளாலும், சாபங்கள், தோஷங்களினாலும் புத்திரப்பாக்கியம் கிடைக்க தாமதம் ஆகும்.
இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதுதான்.
ஆனால் ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது.
அந்த ஆலயம், திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்டத் திருக்கோவில் இதுவாகும். மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவாலங்காடு அமைந்துள்ளது.
இங்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் புத்திர காமேஸ்வர தீர்த்தம் ஆகும்.
இந்த தீர்த்தத்தில் நீராடி இத்தல ஈசனையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்து அதிதி தேவர்களையும், இந்திரன் தன் மகன் ஜெயந்தனைப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.
பரதன் எனும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தைப்பாக்கியம் இல்லாமல் வருந்தினான்.
இதனால் அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை சமேத சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டு தவம் மேற்கொண்டான்.
தவத்திற்கு இரங்கிய ஈசன் அசரீரியாக, “பரதா! அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிேஷகம், அர்ச்சனை செய்து பசுநெய்யைக் கருவறைத் தீபத்தில் சேர்த்து வழிபட்டு வா.
நிச்சயம் புத்திரப் பாக்கியம் கிடைக்கும். பங்குனி மாத அமாவாசை தினத்தில் இங்கு வந்து நீராடி எம்மை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார்.
பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காகக் காத்திருந்து திருவாலங்காடு வந்து, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.
இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன்கள் உள்ளனர். இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை, சிறிது சேதமானதால் புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர்.
புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக “உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால் அவர்களை வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?” எனக் கேட்க, பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.
இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்றவாறு அருள்பாலிக்கிறாள்.
அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறைத் தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.
இத்தலத்தின் பழைய அம்மனும் உயிரோட்டமானவள். எனவே மூலவர் வண்டார்குழலி அம்மனுக்கு செய்யும் அனைத்து உபசாரங்களையும் அந்த அம்பாளுக்கும் செய்து வரவேண்டும் என்கிறார்கள்.
பழைய வண்டார்குழலி அம்மன் அருகில் தனிச் சன்னிதியில் சரஸ்வதி அம்மன் உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம், பஞ்சமி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர்.
இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி- தெய்வானை சமேத முருகர் சன்னிதிகளும் உள்ளன.
இத்தல மூலவர் வடாரண்யேஸ்வரர் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பது, இத்தலம் மிகச்சிறந்த பரிகாரத் திருத்தலம் என்று கட்டியம் கூறி நம்மை அழைக்கிறது.
இத்தல வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் வழிபாட்டின் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள பைரவருக்கு அமாவாசை, அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு, வெள்ளியில் சிறிய நாய் காசு செய்து அதனைக் கருப்பு கயிற்றில் கட்டி தாயத்து செய்கிறார்கள்.
அதனை புத்திரகாமேஸ்வரர், பைரவர் காலடியில் சமர்ப்பித்து பின்பு அதனை எடுத்து குழந்தைகளுக்கு அணிவித்து விட்டால் குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷங்கள் அண்டாது என்கிறார்கள்.
புத்திரபாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச்சிறப்பான நாள், பங்குனி மாத அமாவாசைதான்.
அன்றைய தினம் இங்கு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம்.
பங்குனி மாத அமாவாசை அன்று இங்குள்ள புத்திரகாமேஸ்வரர் சன்னிதியில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது.
புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் ஈசனுக்கு தீர்த்தவாரியும் நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோர் இந்த இறைவனை வழிபட்ட பிறகு, அருகில் உள்ள திருவாவடுதுறை ஒப்பிலாமுலைநாயகி உடனுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ‘புத்திர தியாகேசர்' சன்னிதியில் வழிபட்டு பிரார்த்தனையை நிறைவு செய்யவேண்டும். அதன் மூலம் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.