Monday, December 9, 2019

Palio Diet - பேலியோ டயட்



பேலியோ டயட் Palio Diet என்பது ஐரோப்பிய உணவு முறை மோசடி ...
சமீப காலமாக பேலியோ டயட் என்ற பெயரில் மோசடிப் பிரச்சாரம் நடந்து வருகிறது.
நம் நாட்டின் பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய விதைகள், மரபு சார்ந்த பாரம்பரிய விலங்கினங்கள், கோயில் பாரம்பரிய பிரசாத தயாரிப்புகள் ஆகியவற்றை இருட்டடிக்க உருவாக்கப்பட்ட திருட்டு உணவு லாப மோசடிதான் பேலியோ டயட்.
ஐரோப்பாவில் மாமிசம், டிரை நட்ஸ் ஆகியவைதான் குளிர் காலத்தில் கிடைக்கும். இவை தவிர பனி மழை பெய்யும் அந்த நாடுகளில் வேறு எதுவும் கிடைக்காது.
விலங்கினங்களை அடித்துக் கொன்று அதன் பச்சை மாமிசத்தை அப்படியே தீயில் வாட்டி Barbeque கபாப் முறையில் தின்பார்கள்.
இதனால் சமச்சீரான ஆறு சுவை சத்துகள் கிடைக்காமல் போகும். அதோடு பல பல புது வகைகள் உண்டாகும். காரணம் சுக்கு,மிளகு,மஞ்சள், கொத்தமல்லி பொடி,சீரகம் என்று எதுவும் அங்கு கிடைக்காது.
மிளகை சேர்க்கும் பழக்கமே, நம் நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் மிளகை வைத்துதான் பண்டைய கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது.
இதே போல குளிர் காலத்தில் உலர்ந்த பாதாம்,பிஸ்தா போன்ற பொருட்கள் மட்டும்தான் அங்கு கிடைத்தன.
ஐரோப்பிய வம்சா வழியின் இந்த காட்டுமிராண்டி உணவு முறையை பேலியோ டயட் முறை என்று பெயர் வைத்து வியாபாரம் செய்து வருகிறது மேசானிய பௌத்த யூத கும்பல்.
உண்மையான நம் இந்திய டயட் என்னவென்றால் நம் பாரம்பரிய கோயில்களில் காப்பாற்றி வைக்கப்பட்டு உள்ள நெய்வேத்திய உணவு முறைதான்.
இதில் தக்காளி, மிளகாய்,பூண்டு, வெங்காயம்,அன்னிய ஆங்கில காய்கள், கிழங்குகள்,நிலக்கடலை, நிலக்கடலை எண்ணை உள்ளிட்ட அன்னிய தாமச உணவு வகைகள் சேர்க்க கூடாது.
பலி பூஜை உள்ள கோயில்களில் கோழி,ஆடு,பன்றி ஆகியவற்றின் மாமிசங்களை நெய்,மிளகு,மஞ்சள் போன்ற மூலிகைகளை வைத்து பக்குவப் படுத்தி பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த பலி பிரசாதத்தை யாமளம் என்ற சாஸ்த ஆகமம் பரிந்துரைக்கிறது.
மதுரை நாயக்கர் காலத்தில்தான் மாவு பிரசாதங்களான இட்லி,தோசை போன்றவை கோயில் பிரசாங்களாக பெருமாள் கோயில்களில் புகுத்தப்பட்டது.
பூரி ஜெகந்நாதர் கோயிலில் 365 நாட்களுக்கும் தினமும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பாரம்பரிய அரிசி வகை பயன் படுத்தப் படுகிறது.
ஆயுர்வேத-சித்த உணவு முறையிலான நம் முறையை குழப்பதான் பொங்கலில் தென் அமெரிக்கா முந்திரி, புளியோதரையில் மணிலா நிலக்கடலை, மிளகுக்கு பதில் விலை குறைவான அந்நிய தேச அரேபிய மிளகாய் இணைக்கப்பட்டது.
மூலிகைகளான மஞ்சள், எள் எண்ணைக்குப் பதில் கடலை எண்ணெய் ரீபைன்டு ஆயில் என்று துவங்கிய ஆகம விரோதங்கள் ஜோமா வேர் லட்டு என்று மேசானிய பார்முலாவில் மலர்ந்து,சாய்பாபா கோயில்களில் ஜோமா வேர் கேசரி, மேரி பிஸ்கட் என்று போய் தற்போது நிற்கிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் பிரசாத முறைதான் நம் பாரம்பரிய உணவு முறையாக இருந்து வந்து உள்ளது. அதனால் இதுவே நம் மரபு சார்ந்த பேலியோ டயட் முறை.
இதைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்து ஒவ்வொரு தனிப்பட்ட கோயிலுக்கும், பகுதிக்கும், ஜாதிக்கும் உள்ள பாரம்பரியங்களை அவரவரே ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
நமது பகுதி பாரம்பரிய விதைகளையும்,விலங்கினங்களையும் ஆய்வு செய்தால்தான் இது சாத்தியமே ஆகும்.
நாம் சைவமாக இருக்கலாம்.
பலி பூஜைகளை நிறுத்தவும் கூடாது.
அதை வெறுத்து ஒதுக்கவும் கூடாது. ஏன் என்றால் மாமிசம் உண்பவர்களை குழப்பி வெளிநாட்டு பிற விலங்கினங்களை திணிக்கதான் பலி பூஜை தடை உள்பட எல்லா மேசானிய சூழ்ச்சிகளும் நடக்கிறது.வியாசரின் பிரம்ம சூத்திரத்திலேயே "அசுத்தம் விதி சேத்து சப்தாத்" என்று பலி பூஜைகள் அசுத்தம் அல்ல.
நம் அந்தணர்களாக உள்ள நம் பாரம்பரிய குல குருக்கள் தங்கள் மடத்தின் பலி பூஜை செய்யப்படும் தேவதைகளுக்கு அந்தந்த விலங்குகளை நேர்ந்து விட்டு இன்று வழங்குகின்றனர். ஆனால் அவர்கள் பலி கொடுக்கும் போது பார்க்கவோ,உண்ணவோ மாட்டார்கள் என்பதே இந்த பிரம்ம சூத்திர முறைக்கு சாட்சியாக உள்ளது.
நமக்கு நல்லெண்ணை,கேரளாவுக்கு தேங்காய் எண்ணை என்பதுதான் நம் மரபணுவில் உள்ள தட்ப வெப்ப நிலை சார்ந்தநம் பாரம்பரிய உணவு முறை.
ஐரோப்பிய பேலியோ டயட் என்ற பெயரில் ஐரோப்பிய காட்டுமிராண்டிகளின் பச்சை மாமிச முறையையும், குஞ்சு பொரிக்காத சூனிய கூ முட்டைகளையும்,வரண்ட அவர்கள் நாட்டு கொட்டைகளையும் தின்று இன்று பல்வேறு வகை நோயில் இளைஞர்கள் உட்பட செத்து செத்து வருபவர்கள் பலர் பலர்.
ஐரோப்பிய பேலியோ காட்டுமிராண்டி டயட்டை குருட்டுத் தனமாக நம்பினால் உங்கள் கதை கந்தல்தான்.
ஏன் என்றால் அவன் வாழும் தட்ப வெப்ப நிலை மரபணுவில் உள்ள உணவு முறை வேறு.
நாம் வாழும் நம் தட்ப வெப்ப நிலை மரபணுவின் முறை வேறு.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

No comments:

Post a Comment