Saturday, June 13, 2020

அனுமன் பிறந்த கதை

#அனுமன் #பிறந்த #கதை

#Sundarji
🐒ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு #சேவை செய்ய #பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன.

🐒 #பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது.

 🐒தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார்.

🐒 தனக்கு அழகா
ன இரண்டு #குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள்.

🐒எனவே, ருத்ராம்சமான தன் #சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன்.

 🐒தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி #வாயு #பகவானுக்கு உத்தரவிட்டார்.

🐒புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் #பூலோகம் வந்தாள். 

🐒ஒரு #காட்டில் தவம் செய்து கொண்டிருந்த #ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள். 

🐒""ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ,'' என சாபமிட்டார்.

 🐒புஞ்ஜிகஸ்தலை
யின் முகம் வானர முகமாகி விட்டது. 

🐒அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள்.

🐒#அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, ""பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்,'' என்ற வரம் அளித்தார்.

🐒அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு 

🐒"அஞ்ஜனை' என்ற பெயர். "கேஸரி' என்றால் "சிங்கம்'. "அஞ்ஜனை' என்றால் "மை பூசிய பேரழகி'. ஒருநாள், 

🐒அப்சரஸாக உருமாறி ஒரு மலைச் சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.

🐒அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான்.

🐒 அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள்,

 🐒அணைப்பது யார் என தெரியாமல் ""ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது,'' என கதறினாள்.

🐒அப்போது வாயுபகவான் காட்சியளித்து""பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை.

🐒 மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய்.

🐒 நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. 

🐒நீ #உலகம் புகழும் ஒரு #புத்திரனைப் பெறுவாய்,'' என சொல்லி மறைந்தார்.

🐒அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள்.

🐒 வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு "மாருதி' என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.

🐒 அஞ்சலி மைந்தன் அ#
Arunagiri
னுமன் ராமனுக்கு மட்டும் சேவகம் செய்யவில்லை

🐒 கிருஷ்ணருக்கும் சேவகம் செய்தவரே

🐒 அவர் ஒரு சிரஞ்சீவி பக்தனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இவரை என்றென்றும் போற்றுவோமாக

No comments:

Post a Comment