Monday, September 28, 2020

தீபம் ஏற்றும் போது இது வரை நீங்கள் செய்து வந்த "இந்த தவறை" செய்யாதீங்க..!

(இந்தப்பதிவில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போனாலும், தயவு செய்து நம்புவர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள்).:

தீபம் ஏற்றும் போது இது வரை நீங்கள் செய்து வந்த "இந்த தவறை" செய்யாதீங்க..!

நம் வீட்டில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும் எப்போது ஏற்றவேண்டும் எந்த திரியை பயன்படுத்த வேண்டும், எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நம் வீட்டில் எப்போது தீபம் ஏற்ற வேண்டும் எப்போது ஏற்றவேண்டும் எந்த திரியை பயன்படுத்த வேண்டும் எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

காலையில் உஷத் காலத்திலும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். எவர்சில்வர் விளக்கு ஆகாது. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம். தீபத்தை கிழக்கு திசையிலும் மேற்கு திசை நோக்கியும் வடக்கு திசை நோக்கியும் தீபம் ஏற்றவேண்டும். தெற்கு எமனுடைய திசை என்பதால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது.

ஒரு திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே தீபமேற்ற வேண்டும். புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை பில்லி சூனியம் பேய் பிசாசு அண்டாது.

பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றினால் மங்கலம் உண்டாகும். வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பட்டு நூல் திரி போட்டு விளக்கேற்றினால் எல்லாவித சுகங்களும் கிடைக்கும். ஆமணக்கு எண்ணெயில் தீபம் போட்டால் அனைத்து செல்வமும் கிடைக்கும். தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றினால் தேக ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும். நல்லெண்ணை தீபம் ஏற்றினால் எம பயம் அகலும்.

தாமரை நூல் திரி போட்டு விளக்கேற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். நெய்தீபம் ஏற்றினால் சகல சௌபாக்கியமும் உண்டாகும். நீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜை அறையில் வைப்பது நல்லது.பூஜை அறையில் விளக்கு வைத்தால் பாவம் தீரும். அகல் விளக்கு வைத்தால் சக்தி தரும். 

தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீபலட்சுமி என்று மூன்று முறையும், தீப துர்கா என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும். தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் ஒரு பூவின் காம்பு கொண்டு தான் அணைக்க வேண்டும்

Friday, September 25, 2020

கீழடி

#Tamilan
#தமிழன்
# மதுரை



#இலங்கைத்_தமிழர்கள்_தென்னிந்திய #தமிழர்களைவிட_வழிபாட்டு #பாரம்பரியத்தால்_முற்பட்டவர்களா?

தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற இடத்தில் பெருங்கற்கால தொல்லியல் மையம் ஒன்றில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன.
இது 2600 வருடங்கள் பழமையான தொல்லியல் மையம் என ஆய்வறிக்கை கூறுகிறது. இங்கு 7000 தொல்லியல் சின்னங்கள் கிடைத்ததாகவும், இவற்றில் வழிபாடு தொடர்பான சின்னங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் 3000 வருடங்கள் பழமையான பெருங்கற்கால தொல்லியல் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கிடைத்த சுடுமண் சின்னங்களில் லிங்க வடிவங்கள் மற்றும் இரும்பு வேல் சின்னங்களும், பெண் தெய்வ உருவங்களும் கிடைத்துள்ளன.

பொம்பரிப்பு, அனுராதபுரம், பூநகரி, ஆகிய இடங்களில் இரும்பு வேல் சின்னங்களும், நிக்காவெவ, உருத்திராபுரம், பின்வெவ ஆகிய இடங்களில் லிங்க வடிவங்கள், பெண் தெய்வ வடிவம் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் படங்களை கீழே இணைத்துள்ளேன்.

உசாத்துணை நூல்கள்.
( ஈழத்து இந்து சமய வரலாறு-பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்)
(ஸ்போலியா செலனிகா-பேராசிரியர் ஜீ.ஏ.பி.தெரனியகல)
(தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும் கலையும்-பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்)

அப்படியானால் லிங்க வழிபாடும், வேல் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் இலங்கையில் இருந்து தான் தென்னிந்தியாவுக்கு பரவியுள்ளதா?
இவ்வழிபாடுகளுக்கு தென்னிந்தியத் தமிழருக்கு இலங்கைத் தமிழர்கள் தான் முன்னோடிகளா?

விநாயகர் வழிபாடு பொ.ஆ.5ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் தான் தமிழகத்துக்கு அறிமுகமானதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் இலங்கையில் இதற்கு முன்பே பொ.ஆ 1ஆம் நூற்றாண்டிற்குரிய மிகுந்தலை கந்தக்க தூபியில் விநாயகர் சிற்பம் உள்ளமை இவ்வழிபாடு தமிழகத்தை விட இலங்கையில் காலத்தால் முற்பட்டது என்பதை உறுதி செய்கிறது.

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய தமிழர்களை விட காலத்தாலும், வழிபாட்டு பாரம்பரியத்தாலும் முற்பட்டவர்கள் எனும் எனது சந்தேகம் இதன் மூலம் வலுப்பெறுகிறது.

இலங்கைத் தமிழர்கள் சிவலிங்க வழிபாட்டையும், முருகவேல் வழிபாட்டையும், பெண் தெய்வ வழிபாட்டையும், இந்தியத் தமிழர்களுக்குக் கொடுத்திருப்பார்கள் எனவும், இவர்களுக்கு முன்பே விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டிருப்பர் எனவும்,
இதனால் தான் ஈழத்தமிழர்கள்
இன்று வரை தமிழர் வழிபாட்டையும், கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் தென்னிந்தியத் தமிழர்களை விட அதிகமாக பேணி பாதுகாத்து கடைப்பிடித்து வருகிறார்கள் எனவும் எண்ணத் தோன்றுகிறது.

#சுந்தா்ஜீ


Thursday, September 24, 2020

தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?

#Tamilan
#Sundarji
#Suryatrust



'தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா....

எல்லோரும் யோசிக்காமல் "ராஜா ராஜா சோழனு..." பதில் சொல்லிடுவாங்க. 

ஆனா, ராஜா ராஜா சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே!

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். 

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...
தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு *'தஞ்சை பெரிய கோயில்'* என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

 இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். 

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். 

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். 

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்... 

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.

 அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்... 

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது. 

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்...  என்றான் சிற்பி. 

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."
என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்... 

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல... 
இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

*"அன்பே சிவம்..."*
*என உணர்வதே தவம்...*