#Tamilan
#தமிழன்
# மதுரை
தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற இடத்தில் பெருங்கற்கால தொல்லியல் மையம் ஒன்றில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன.
இது 2600 வருடங்கள் பழமையான தொல்லியல் மையம் என ஆய்வறிக்கை கூறுகிறது. இங்கு 7000 தொல்லியல் சின்னங்கள் கிடைத்ததாகவும், இவற்றில் வழிபாடு தொடர்பான சின்னங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் 3000 வருடங்கள் பழமையான பெருங்கற்கால தொல்லியல் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கிடைத்த சுடுமண் சின்னங்களில் லிங்க வடிவங்கள் மற்றும் இரும்பு வேல் சின்னங்களும், பெண் தெய்வ உருவங்களும் கிடைத்துள்ளன.
பொம்பரிப்பு, அனுராதபுரம், பூநகரி, ஆகிய இடங்களில் இரும்பு வேல் சின்னங்களும், நிக்காவெவ, உருத்திராபுரம், பின்வெவ ஆகிய இடங்களில் லிங்க வடிவங்கள், பெண் தெய்வ வடிவம் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் படங்களை கீழே இணைத்துள்ளேன்.
உசாத்துணை நூல்கள்.
( ஈழத்து இந்து சமய வரலாறு-பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்)
(ஸ்போலியா செலனிகா-பேராசிரியர் ஜீ.ஏ.பி.தெரனியகல)
(தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும் கலையும்-பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்)
அப்படியானால் லிங்க வழிபாடும், வேல் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் இலங்கையில் இருந்து தான் தென்னிந்தியாவுக்கு பரவியுள்ளதா?
விநாயகர் வழிபாடு பொ.ஆ.5ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் தான் தமிழகத்துக்கு அறிமுகமானதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் இலங்கையில் இதற்கு முன்பே பொ.ஆ 1ஆம் நூற்றாண்டிற்குரிய மிகுந்தலை கந்தக்க தூபியில் விநாயகர் சிற்பம் உள்ளமை இவ்வழிபாடு தமிழகத்தை விட இலங்கையில் காலத்தால் முற்பட்டது என்பதை உறுதி செய்கிறது.
இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய தமிழர்களை விட காலத்தாலும், வழிபாட்டு பாரம்பரியத்தாலும் முற்பட்டவர்கள் எனும் எனது சந்தேகம் இதன் மூலம் வலுப்பெறுகிறது.
இலங்கைத் தமிழர்கள் சிவலிங்க வழிபாட்டையும், முருகவேல் வழிபாட்டையும், பெண் தெய்வ வழிபாட்டையும், இந்தியத் தமிழர்களுக்குக் கொடுத்திருப்பார்கள் எனவும், இவர்களுக்கு முன்பே விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டிருப்பர் எனவும்,
இதனால் தான் ஈழத்தமிழர்கள்
இன்று வரை தமிழர் வழிபாட்டையும், கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் தென்னிந்தியத் தமிழர்களை விட அதிகமாக பேணி பாதுகாத்து கடைப்பிடித்து வருகிறார்கள் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
#சுந்தா்ஜீ
No comments:
Post a Comment