Monday, January 4, 2021

நாம் எல்லோரும் "சாதாரண மனிதர்கள்


#முத்தானவரிகள்பத்து. 🎊 🔯 🎊 
1} #அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம் எல்லோரும் "#சாதாரண மனிதர்கள் 
2} பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் #அனைவரும் "#அகந்தையாளர்கள் 
3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.. 
நாம் "#அற்புதமானவர்கள் 
4} நேசிப்போரின் பார்வையில்.. 
நாம் "தனிச் சிறப்பானவர்கள் 
5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் #கெட்டவர்கள் 
7}  #சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
ஒழிக்கப்பட வேண்டியவர்கள் 
8}  சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் #ஏமாளிகள் 
9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் குழப்பவாதிகள் 
10} கோழைகளின் பார்வையில் நாம் அவசரக்குடுக்கைகள் 
நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
ஒரு தனியான பார்வை உண்டு.
🕊 ஆதலால் - பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள் 
🥁 மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும். 
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
🥁 மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...
🥁 இந்த மனிதர்களிடம் எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!
எப்போதும் நேர்மையும் தைரியமும்  உங்கள் சொத்தாக இருக்கட்டும் 
வாழ்வோம்.. பிறரையும் வாழ வைப்போம். 
 நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
எனவே நீ . . .நீயாக இரு !
கங்கை நீர் புனிதம் தான் .அதனால் 
கிணற்று நீர் வீண் என்று அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு கங்கையாயிருந்தால் என்ன ? கிணறாகயிருந்தால் என்ன ?
நீ . . .நீயாக இரு !
காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான்!
நீ . . .நீயாக இரு !
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . . ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் ! நீ . . .நீயாக இரு !
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் ! நீ . . .நீயாக இரு !
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் ! நீ . . .நீயாக இரு !
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
எனவே நீ . . .நீயாக இரு !
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாவம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
நீ . . .#நீயாக இரு !
உலகம் ஒரு நாள், உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள் உன்னை உதாரணமாகக் #கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு #நாள், #உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
#உலகம் ஒரு நாள்,உன் #வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவனுக்காக மாறி 
உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு ! 
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
#சுந்தர்ஜி

No comments:

Post a Comment