Thursday, August 28, 2014

பொடுகு தொல்லை

கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும்.

இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ்…

1)மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால்,பொடுகு தொல்லை நீங்கும்.

2)வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

3) தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால்,பொடுகு நீங்கும்.

3)வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

4) வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

5) எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன்,தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

6)தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

7)நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

8)வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால்,பொடுகு தொல்லை நீங்கும்.

9)தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து,சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

10)முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

கூந்தல் மிருதுவாக இருக்க…

வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால்,கூந்தல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால்,கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வாழ்கை

ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவர்கள் பேசாத போது...

பாசம்
ஒரு காற்று மாதிரி,
இருப்பது நமக்கு தெரியாது
ஆனால்
அது இல்லாமல்
நம்மால்
இருக்க முடியாது

தோல்வியடையும் போது
துவண்டு விடாதே
தோல்வி ஒன்றும்
தொடர்கதை அல்ல;
தொடர்கதைக்கும் கூட
முற்றுப்புள்ளி உண்டு

எழுவதும் பின் விழுவதும்
அலைகளுக்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
எழுச்சி மட்டுமே
மனிதனுக்கு அழகு.

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

நாம் விதையாய் விழுவோம் மரமாய்
எழுவோம்!

வந்தேமாதரம்

தேசீய கீதங்கள்

1. பாரத நாடு
1. வந்தே மாதரம்

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
ராகம்-நாதநாமக்கிரியை

பல்லவி தாளம்-ஆதி
வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)
சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
     ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
      வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2.
ஈனப் பறையர்க ளேனும்-அவர்
      எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
      தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
      அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
      சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
      ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5.
எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
      யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
      முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
(வந்தே)

6.
புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
      போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
      தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
(வந்தே)

தேசீய கீதங்கள்

1. பாரத நாடு
2. வந்தே மாதரம்
ராகம்- ஹிந்துஸ்தானி பியாக்

பல்லவி தாளம்-ஆதி
வந்தே-மாதரம்-ஜய
வந்தே மாதரம் (வந்தே)
சரணங்கள்
1. ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

2.
ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

3.
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

4.
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம் (வந்தே)

Wednesday, August 27, 2014

அறிவு


வணக்கம்   1'நினைவாற்றல் - குறைய காரணமாகிறது

கால்குலேட்டர கையாலுவதே ஒரு திறமை, அத வச்சு சைன்/காஸ் தீட்டா இல்ல ஒரு பெரிய எண்ணோட மடங்கு/மூலம் இதெல்லம் அதிவேகமா போட பயன் படுத்த ஆரம்பிச்சோம்... இப்ப 5-யும், 9-யும் கூட்ட கால்குலேட்டர் எங்கன்னு தேடுராங்க. சரி இத விடுங்க சிலபேர் கணக்குன்னாலே கடுப்பாய்டுவீங்க. இந்த டெலிஃபோன் சமாச்சாரத்த பார்ப்போம்... என்னமோ டிஜிடல் டயரியாம்... பர்சனல் ஆர்கனைசராம்... அப்போல்லாம் 5 இல்ல 15 நம்பர பட படன்னு சொல்லுவோம்... இப்ப? அய்யோ நம் நம்பர் நமக்கே தெரியாது... என்ன ஒரு சாமர்த்தியம் நமக்கு... நம்பர் கேட்கும் நண்பரிடம் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாருங்க... " நீங்க ஒங்க நம்பர சொல்லுங்க... அப்படியே என் செல்லு ஏத்திகிட்டு... அப்படியே ஒங்களுக்கு ஒரு மிஸ்டு கால் விடுரேன்... நீங்க அத அப்படியே ஸ்டோர் பண்ணிக்கலாம்" (ஹும் அவரே இதுக்கு-தான உங்க நம்பர கேட்டாரு). நான் யாரையும் குத்தம் சொல்ல விரும்புல... அடிக்கடி பிளான் மாறுது இல்ல புரொவைடர மாத்துரோம்... இதையே அடுத்தவங்களும் செய்ய... இப்ப நிலமை? "யாரு சிம்முல யாரு"-ன்னு ஒரு நிகழ்ச்சியே நடத்துலாம் போல இருக்கு.

2. சோம்பேரிதனம் - அதிகரிக்க காரணமாகிறது

என்ன கொடுமையா இருக்கு... எதுக்கெடுத்தாலும் கால்கடுக்க நிக்க வேண்டியிருக்கு... ஈ.பி பில்லுக்கு, டெலிஃபோன் பில்லுக்கு, பஸ்/ரயில்/விமானம் பயண முன்பதிவு செய்ய... அப்பாடா... வந்தாச்சு டெலி பேமெண்ட், டெலி புக்கிங்க், ஆன்-லைன் பேமெண்ட், ஆன்-லைன் புக்கிங்க... உங்களது அனைத்து தேவைகளும் உங்கள விரல் நுனியில்... சுழற்றுங்கள் அல்லது சொடுக்குங்கள்(கிளிக்குனுமாம்) நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே... ஓ இதான் அந்த "கவுச் பொட்டடோ"-வா.

அட அத இன்னாமோ சொல்ராங்கப்பா... ஆங்க் "ஐடெண்ட்டி தெஃப்ட்", அதாம்பா நம்ம விசயங்கள நமக்கு தெரியாம அடுத்தவன் ஆட்டைய போடுரது. இது சின்ன விசயதுலேருந்து பெரிய விசயம் வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம பேசாத பில்லுக்கு நமக்கு பில்லு வருது, நம்ம வாங்காத பொருளுக்கு பற்று அட்டை-க்கார வங்க்கியிலுருந்து பணம் கட்ட சொல்வது, இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகிறது... எங்க போயி முடிய போகுது?

"ஐடெண்ட்டி தெஃப்ட்" என்பது "ஐடியா தெஃப்ட்"-ஆக அல்லது "மனசு தெஃப்ட்"-ஆக... நீங்க செய்யல்லாம்னு மனசுல நினைக்கிறத உங்களுக்கு அருகில் உள்ள ஒருவர் அல்லது உங்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உடைய ஒருவர் அதை செய்துவிட்டு இருப்பார்.

"கால் கடுக்க" நின்ன காலம் போய் "மனசு நடுங்க" வேண்டிய காலமா ஆயிடுச்சி

,
மறைந்து கிடக்கும்
ரகசியங்களும்,அதிசயங்களும்
ஆய்வுக்கு அடங்காதவையாகும்.
மானிட
உடலமைப்பினை ஆய்வுசெய்யும்
போது அதன் அற்புத
அமைப்பானது,அரிய பெரிய
உண்மைகளையும் அளப்பெரிய
தத்துவங்களையும் புதிது புதிதாக
நமக்குக் காட்டி வருகின்றது.
நளினமான உடலின் மே​ன்மைத்
தன்மைகள், நமது எண்ணங்களில்
இனிமையாய் மீட்டுகின்றன.
Anatomy எனக் கூறப்படும் ஆங்கிலச்
சொல்லானது, Anatome என்ற கிரேக்கச்
சொல்லிலிருந்து உருவானதாகும்.
வாழும் உயிரினங்களின்
உடலமைப்பைத்
தெரிந்துகொள்ள,பிளந்து ஆய்வு செய்ய
முறை எனும் அர்த்தத்தில் இந்த சொல்
உருவாகியுள்ளது.
உடல் அமைப்பு
மனித உடல் பல செல்களால்
ஆக்கப்பெற்றது
செல்
உயிரினத்தின் வாழ்க்கைக்கு செல் தான்
அடிப்படை அமைப்பாகும். உயிர் வாழும்
விலங்கு

Saturday, August 23, 2014

மருத்துவம்

1. மாம்பழம்:
முக்கனிகளில்
முதன்மையானது. இதில்
உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண்
ஒளி
தருகிறது. இரத்த அழுத்த நோய்
உள்ளவர்கள் சாப்பிடுவதினால்
ரத்த அழுத்தம்
சீராகும். குழந்தைகளும்
சாப்பிடலாம்.
2. வாழைப்பழம்:
தினசரி இரவு ஒரு
செவ்வாழைப்பழம்
சாப்பிட்டு வந்தால்
தொற்று நோய்
நம்மை அணுகாது.
3. முகம் வழுவழுப்பாக இருக்க:
கசகசாவை எருமை தயிரில்
அரைத்து தினந்தோறும்
இரவு படுக்க போகுமுன்
தடவி வந்தால் முகம் பளபளப்புடன்
சுருக்கங்கள்
நீங்கி பொலிவு தரும்.
4. இரத்த சோகையை போக்க:
பீர்க்கன்காய் வேர் கசாயம்
சாப்பிட்டு வர இரத்த
சோகை நீங்கும்.
5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட
பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன்
இருக்கும்.
உடல் பலவீனம், கை, கால் நடுக்கம்,
மயக்கம் முதலிய தொல்லைகள்
வராது.
6. குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம்
சாப்பிட கொடுங்கள்.
கொய்யாப்பழம்
சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும்
எலும்புகள் பலமும்
பெறுகின்றன. வயிற்றில்
புண் இருந்தால் குணப்படுத்தும்
ஆற்றல் உடையது
7. உடல் சக்தி பெற: இரவு உணவாக
வாழைப்பழம் 2, தேங்காய்
1முடி சாப்பிட்டு வர உடல்
சக்தி பெறும்.
8. வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் மஞ்சள்
சேர்த்து அரைத்து, வெட்டுக்
காயத்தின் மீது பூசிவர
விரைவில் ஆறிவிடும்.
9. சுகப்பிரவசமாக:
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ்,
குங்குமப்பூ, ஏலக்காய்
ஆகியவற்றை சேர்த்து
ஒரு மாதங்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வர
ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்
10. உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின்
இலையை பசும்பால்
விட்டு அரைத்து, தினசரி 1
அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்
அரிப்பு நீங்கும்.
11. காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி
தேங்காய் எண்ணெய் இல்
போட்டு காய்ச்சி, சிவந்தவுடன்
இறக்கி ஆறவைத்து சிசாவில்
பத்திரப்படுத்தவும். காலை,
மாலை இரண்டு சொட்டு
காதில் விட்டு வர காதில்
சீழ்வடிதல் நின்று விடும்.
12. நெஞ்சுவலி குணமாக:
அத்திப்பழம்
தொடர்ந்து சாப்பிட்டு வர
நெஞ்சுவலி வராது. அத்திப்பழம்
இருதயத்தை பலப்படுத்துகிறது.

13. சிலந்தி கடிக்கு மருந்து:
தும்பை இலை சாறு எல்லா
விஷகடிகளுக்கும் சிறந்த
மருந்து.
தும்பை இலை சாறு சாப்பிடவும்.
14. சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல்,
மாதுளம் பழத்தோல் சம
அளவு இடித்து தூள்
செய்து பசும்பாலில்
சாப்பிடி சீதபேதி குணமாகும்.
15. வயிற்று நோய் குணமாக:
சீரகத்தை வறுத்து பொடி செய்து
மோரில் சாப்பிடி வயிற்று நோய்
குணமாகும

Wednesday, August 13, 2014

திருநங்கைகள்

இந்து எங்களுக்கு
முண்றாம்  கடவுள் இவர்கள் தான்
சிவன்
பார்வதி இவர்களை
தனியாக  இருப்பார்கள்

இவர்கள் இருவறையும்
ஒன்றாக பார்க்கிறோம்

Friday, August 8, 2014

அறிவுரைகள்

விவேகானந்தரின் வீர அறிவுரைகள் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர் மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான். பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான். காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான். உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது. நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள். சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும். மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர். செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது. நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு. மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல். மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம். இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது. மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும். மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும்,இந்துக்கள் சிறந்த இந்துக்களாகவும் வாழ வேண்டும் . ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே. கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம். தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும். பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது. உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும். இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும். நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது? உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும். செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும். முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை. பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான். நாம் இந்த உலகில் பிறந்தது நம்மை வலிமையுடையவர்களாக்கி கொள்ளவே , நான் வேண்டுவதெல்லாம் வலிமை , வலிமை , வலிமை ஒன்றே நான் ஒவ்வொருவரின் முன் வைக்கும் முதல் கேள்வி இது தான் , நீ வலிமை உடையவனாக இருக்கிறாயா? நீ வலிமையை உணர்கிறாயா ? என்பது தான் நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும். எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மரணம் மட்டும் தான் . தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது. எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள். பொதுவாக இளைஞர்கள் ஜோதிடத்தின் பக்கம் செல்வது இல்லை , வலிமை மிக்க இளைஞன் எழுந்து நின்று என் தலை விதியை நானே அமைத்து கொள்வேன் என்கிறான் விதி என்பது என்ன ? நீ முன்னர் என்ன செய்தாயோ அதுதான் உனது இன்றைய விதி ,நீ இன்று என்ன செய்கிறாயோ அது உன் நாளைய தலை விதி துன்பபடுபவர்களை பார்த்து அது எல்லாம் அவர்கள் தலை விதி , கர்ம வினை என்பதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன் அது அவர்கள் கர்மாவானால், அதை போக்குவதுதான் எனது கர்மா யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான். குருவுக்குப் பணிந்து நடந்தலும் , பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலும் வெற்றிக்கு வழிகளாகும். சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள் உங்களுக்கு இந்த உறக்கம் பொருந்தாது . போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே! இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ. பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல். நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி. சகோதரா! நீ அழுவதேன் சகோதரா? மரணமோ, நோயோ உன்கில்லை. துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ, மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ,நீ உன் முடிவில் உறுதியாக இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும். பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான். கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது. பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது. ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது. ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது. இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார். மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய். பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும். ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா? நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது. ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான். உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது. எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும். ஒரு காரியம் செய்யும் பொது உண்டாகும் பலனில் ஏற்படும் அக்கறையை விட அந்த காரியத்தை செய்யும் முறைக்கே அதிக அக்கறை கொடுக்க வேண்டும் . நான் கற்று கொண்ட பாடங்களிலே முக்கியமானதும் , பெரியதும் இதுவேயாகும் , இந்த ஒரு பாடத்திலிருந்து நான் பல பாடங்கள் கற்று கொண்டே வருகிறேன் . பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன. கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பது அல்ல , அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும். ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும். ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் செய்யும் சாதாரணக் காரியங்களை கவனித்தாலே அவனுடைய உண்மை தன்மை தெரியும் . நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய். இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும். தியானம் செய்யுங்கள் ,உன்னுடைய உண்மை தன்மையை நீ தெரிந்து கொள்ள விரும்பினால் நீ தியானம் செய் , மனம் அடங்க மறுக்கிறது , நாம் எங்கே போவது, எல்லோரும் குகைக்கு போய்விடலாமா? அதனால் என்ன பயன்? குகையில் பேய் இருக்குமோ? எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது குகையாகிவிடும், அந்த இடமே சொர்கமாக ஆகிவிடும் . இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது. இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய். மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான், பிறகு இயற்கையை வென்று விடுகிறான் , இயற்க்கை அவனுக்கு அடங்கி விடுகிறது . வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? பசு எப்போதாவது பொய் பேசி இருக்கிறதா , ஆனாலும் அது ஒரு பசுதான் ,மனிதன் பொய் பேசுகிறான் பிறகு அவனே தெய்வமாகவும் ஆகி விடுகிறான் மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும். நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம். பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை? நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி. நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீ ஒரு நூல் நிலையத்தையே படித்தவனை விட அறிவாளியாக இருப்பாய். பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான். எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம். ஆன்மிகத்தில் பேரின்பம் கிடைக்காமல் போனால் என்ன , அதற்காக புலன் இன்பதையா நாடி செல்வேன் ? அமுதம் கிடைக்காமல் போனால் சாக்கடை நீரையா அருந்துவேன் வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும். கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது. சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான். அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும். துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது. வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும். உனக்கு எத்தனை மொழிகள் தெரிந்தால் என்ன ? உன் மொழி இலக்கண சுத்தமாக இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? நீ யாராக இருந்தால் என்ன ? கேள்வி இதுதான் உன்னிடம் கொடுப்பதற்க்கு எதாவது இருகிறதா - அப்படியானால் அதை நீ மற்றவருக்கு கொடு தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய். இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கையோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள். எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய். மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும். இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன். எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன். பார்ப்போம்
நண்பர்களே

Thursday, August 7, 2014

மகிழ்ச்சி

வணக்கம் நண்பர்களே மகிழ்ச்சியும், நிம்மதியுமே வாழ்க்கையின் லட்சியம். நாம் செய்யும் எல்லா செயல்களும் இதை நோக்கியே அமைந்திருக்கின்றன. இந்த இரு பண்புகளுக்கும் அமைதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் நீங்கள் அமைதியை இழந்தால் இவை இரண்டுமே உங்களைவிட்டு தூரத்துக்கு சென்று விடும். உங்கள் அனுபவத்தில் இது நிகழ்ந்திருக்கலாம். பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், குறை கூறுவதாகவும் உங்களுக்கு தோன்றி இருக்கலாம். அது உண்மையாகவோ அல்லது மாறாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் சிக்கலான காலக்கட்டத்தில் அமைதியுடன் இருந்து பொறுமையாக சமாளியுங்கள். அப்போது அமைதியின் சக்தியை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள். ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியுமா? பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. `கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு’ என்பது அந்தப் பழமொழி. இதில் வரும் கொக்குபோல காத்திருப்பது அமைதிக்கு எடுத்துக்காட்டு அல்ல. அறிவீனத்தின் வெளிப்பாடு. அமைதியை இழப்பதே கோபம். துன்பத்தின் ஆரம்பம். பலவீனமானவர்களுக்கே சீக்கிரம் கோபம் வரும் என்பது உண்மைதான். உங்கள் கருத்தை சாந்தமாகவே வெளியிடுங்கள். அப்படியும் மற்றவர், உங்களின் மீது கோபத்தை கொட்டுவதையே குறியாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் அங்கே நீங்கள் கண்டிப்பாக அமைதியாகத்தான் இருக்க வேண்டும். எங்கே சரியான புரிதல் இருக்கிறதோ, அங்கே கோபம் குறைந்துவிடும். அமைதி சூழ்ந்து கொள்ளும். அமைதி கலையும் இடத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அங்கே எதிரெதிர் கருத்துக்கள் தோன்றியதாலேயே ஆட்சேபணை உருவாகி கோபம் கொப்பளிக்கும். அமைதி கெடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலும் அதை வலியுறுத்த வேறு தருணத்தை எதிர்பார்த்து நீங்கள் அமைதி காப்பதே அறிவுடைமை. “அறிவற்றம் காக்கும் கருவி” என்பார் தமிழ்ப்புலவன் வள்ளுவர். உங்களுக்கு கோபமூட்டும் தருணங்களில் நீங்கள் சரியான புரிதலோடு அமைதி அடைவீர்களானால், அந்த அறிவுடைமையானது உங்களது நெருங்கிய சுற்றத்தாரான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிலைத்திருக்க வைக்கும் என்று இங்கு பொருள் கொள்ளலாம். எனவே எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் உங்களை குறை கூறும்போது மவுனமாக இருங்கள். அவர்கள் மீது எந்த விதமான பகைமை உணர்ச்சியும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதைவிட இது மிகவும் மோசமானது. இது ஒரு மானசீகப் புற்றுநோய் எனலாம். மறப்போம், மன்னிப்போம். இது வெறும் லட்சியவாத மொழி அல்ல. கோழைச் செயலுமல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்கும் ஒரு வழிதான். அந்த வீண் பழிச்சொற்கள் பொய்யானவை என்பதை நீங்களே அறிவீர்கள். பிறகு ஏன் அதையே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும்? குழப்பிக் கொண்டால் உங்களுக்குத் தூக்கம் கெடும். படபடப்பு அதிகரிக்கும். நிம்மதி பறிபோகும். மகிழ்ச்சி மறைந்துவிடும். அமைதி காக்க கற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். வாழ்வில் உங்களை தடுமாற வைக்கும் இத்தகைய சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அப்போது உங்களுக்கு விருப்பமான செயலில் மனதை லயிக்கச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதியும், திருப்தியும் கிடைக்கும். எந்த செல்வத்தை காட்டிலும் மன அமைதியே பெரிது. அதை நீங்கள் உணர்ந்தால் அமைதியை கெடுக்கும் கோபத்தை கைவிடுங்கள். இக்கட்டான நிலையில் சரியான புரிதலுடன் அமைதி காத்திடுங்கள். சாதகமான நேரத்தில் உங்களின் கருத்தை வெளியிடுங்கள். அமைதியின் சக்தியை உணருங்கள். உறுதி பலமடங்கு கூடும். எளிதில் வெற்றி காண்பீர்கள்.
அருணகிரி

பிரச்சனைகள்

பிரச்சனை என்றால் என்ன? அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா? நிச்சயமாக கிடையாது. மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது. ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை. ஒரு உதாரணம் இங்கு கொடுக்க விரும்புகிறேன். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டில் இருந்து வெளியேறும் அசுத்த தண்ணீரை உங்கள் வீட்டு வாசல் வழியாக விடுகின்றார் என்று வைத்து கொள்வோம். அசுத்த தண்ணீரை பார்த்தவுடன் என்னடா இது காலை அசுத்தமான தண்ணீரில் வைக்க வேண்டியுள்ளதே, இது என்ன பெரிய பிரச்சனையாக இருக்கும் போல் இருக்கிறதே என வரிந்து கொண்டு பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் சண்டைக்கு நின்றீர்கள் என்றால் அப்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. நீங்கள் ஒன்று சொல்ல, அவர் ஒன்று சொல்ல, அது கை கலப்பில் வந்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விடுகிறது. அதே நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்ளாமல் சம்பந்தப்பட்ட பக்கத்து வீட்டு காரரிடம் அசுத்த தண்ணீரால் விளையும் சுகாதார கேடுகளை பற்றி சொல்லி இனி தண்ணீரை உங்கள் வீட்டு வாசல் வழியாக வராமல் அதே சமயத்தில் வேறு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மாற்று வழியை ஏற்பாடு பண்ண சொல்லலாம். நல்ல விதமாக அவர் மேற்கொண்டு அசுத்த தண்ணீரை விடாமல் இருந்தால் சந்தோசம். அறிவுரை சொல்லியும் அவர் தொடர்ந்து தன் தவறை திருத்தி கொள்ளாமல் இருந்தால், சுகாதார துறை, காவல் துறை, சட்டம் போன்ற வழிகளில் அணுகி அந்த நிகழ்வுக்கு தீர்வு காணலாம். அதை விடுத்தது அந்த நிகழ்வை பிரச்சனையாக கருதினால் ஒரு பிரச்னை போய் மற்றோர் பிரச்னை உருவாகும். எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும். நம்ப வில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும். அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்று கொண்டால் அங்கு பிரச்னை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அமைதியாக ஏற்று கொள்ளும்போது உணர்சிகளுக்கு இடமில்லை. உணர்ச்சிகள்தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடுகிறது. இதில் கோபத்திற்கு முக்கிய பங்குண்டு. சாதாரண நிகழ்வையே இந்த கோபம் பெரிய பிரச்சனையாக்கி விடும். ஆனால் அன்பு என்பது எரிந்து கொண்டு இருக்கும் தீயை அணைக்கும் தண்ணீரை போன்று நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே மாற்ற செய்யும் சக்தி உண்டு. கணவன் மனைவியரிடையே நடக்கும் ஒரு சாதாரண பேச்சு வார்த்தை கூட சமயத்தில் பெரிய பிரச்சனையை உண்டாகி விடும். அவர்களுடைய வாழ்க்கையையே கேள்வி குறியாக்கி விடும். காரணம் பேச்சின் உண்மையான அர்த்தத்தை தவறாக எடுத்துக்கொண்டு அதை ஒரு பிரச்சனையாக்கி விடுவது தான். உணர்ச்சிவசபடும்போதுதான் ஒருவருடைய சிந்தனை சக்தி அடைபட்டு விடுகிறது. தப்பு தப்பாக சிந்தனை செய்ய வைக்கும். சாதாரண விஷயத்தை கூட ஒரு பிரச்சனையாக எடுத்துகொள்ள செய்து விடும். இன்று சிறைச்சாலையில் தண்டனைகளை அனுபவித்து கொண்டு இருக்கும் கைதிகள் தப்பு செய்வதற்கு முன்பு உணர்ச்சிவச பட்டு தவறை செய்து விட்டு அதன் பின்பு ஜெயில் கம்பிகளுக்கு உள்ளே ஐயோ தப்பு செய்து விட்டு என் குடும்பத்தை இழந்துவிட்டேன், என் சந்தோசத்தை இழந்து விட்டேன் என்று புலம்பி பிரயோசனம் இல்லை. எந்த ஒரு நிகழ்வையும் அறிவு பூர்வமாக அணுகும்போது அங்கு பிரச்னை என்பதற்கு இடம் இல்லை. இதற்க்கு தியானம் போன்ற அறிவு சார்ந்த பயிற்சிகள் உதவி புரியும். தியானம் என்பது ஒருவருடைய அறிவை ஒழுங்குபடுத்துவது என்றால் மிகை இல்லை. அறிவை ஒழுங்குபடுத்தும்போது எந்த ஒரு நிகழ்வையும் அறிவு பூர்வமாகத்தான் அணுக செய்யும். உணர்சிகளுக்கு அங்கு இடம் இல்லை. அன்பு மற்றும் அறிவுக்கு மட்டும்தான் தியானம் வழி வகுக்கும். தியானம் எந்த ஒரு விசயத்துக்கும் தீர்வு காண உதவும் தகவல்களை விருப்பு வெறுப்பு இன்றி அறிவு பூர்வமாக சேகரிக்க செய்யும். அது சம்பந்தமான புத்தகங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை நாட செய்யும். தியானம் என்பது தகவல்களை அறிவு பூர்வமாக பெற செய்து ஒரு நிகழ்வை நிகழ்வாக தான் இருக்க செய்யுமே ஒழிய அதை ஒரு பிரச்சனையாக நினைக்க செய்யாது என்பதில் சந்தேகம் இல்லை.  சரி 
பார்ப்போம்
அருணகிரி