Monday, August 31, 2015

விவேகானந்தர் சிந்தனைகள்

1.நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”
2.உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
3.கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
4.உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
5.அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
6.தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
7.கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
8.மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
9.கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.
10.சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
11.ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
12.உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
13சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
14.ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
15கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.

யோகா

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.
ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.
இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.
இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
மகராசனம் (மகரம்–முதலை),
சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி),
சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ),
மச்சாசனம் ( மச்சம் – மீன் ),
கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),
புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )
இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :
பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )
பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,
நாவாசனம் ( நாவா – படகு ),
தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )
இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.
இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.
பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.
இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.
தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.
இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.
பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.
இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.
1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.
1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.
இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும்பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.
யோகா செயல்படும் விதம் :
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.
நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.
மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.
இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.
யோகா பற்றிய குறிப்புகள் :
• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.
• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.
• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.
யோகாவின் இன்றைய அவசியங்கள் :
இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.
இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும். எல்லோரும் இன்புற்று வாழலாம்.

Saturday, August 29, 2015

கடவுள் எப்படி வருவார்?

'கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான்.
அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால்
அதை அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில்
பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப்
பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,'' என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில்
ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான். அப்போது அவன் தோளில் ஒரு அழகிய
வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான்.
கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில்
இருக்கிறார். எனவே அந்த அருட்கொடையை தவற
விட்டு விடாதீர்கள். ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர் பார்க்கும் வடிவில் வருவார் என்று எதிர்
பார்க்காதீர்கள்....""


மாத்தி யோசிப்போம்

அந்தணர் ஒருவர் முக்கியமான
காரியத்திற்காக
குளித்துவிட்டு ஈர உடையுடன்
வீட்டை விட்டு தெருவில்
இறங்கினார் .
அவருக்காகவே காத்திருந்தது
போல
ஒரு பூனை குறுக்கே ஓடியது .'' சனியன்
பிடித்த பூனை'' என்று ஆங்காரமான
குரலில் கத்தினார் அந்தணர்.ஓடிய
பூனை நின்றது .
கோபத்துடன் திரும்பிப்
பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க , ''
மனிதனே , எதற்காக என்னைத்
திட்டினாய் ?'' என்று கடுமையான
குரலில் கேட்டது .வியப்படைந்த
அந்தணர், '' முக்கியமான காரியமாக
நான் புறப்பட்டேன் .
அந்த சமயத்தில்
கறுப்புப் பூனையாகிய
நீ
அபசகுனம் போல
குறுக்கே வரலாமா ?''என்றார்
சற்று சமாதானமான
குரலில். பூனை அவரைப் பார்த்துக்
கேட்டது , '' எல்லாம இறைவன்
சித்தப்படிதான் நடக்கும் என்று நீ
ஓதிய வேதங்கள் கூறவில்லையா?
அப்படியிருக்க சகுனத்தின் பேரில்
பழி போடுவது நியாயமா ? இந்த
சகுனம் பற்றி உனக்குக்
கற்பித்தது யார்? உன்
தாயா ,தந்தையா , குருவா , அல்லது நீ
ஓதிய வேதங்களா ?'' அனல் போல்
பொழிந்த பூனையின்
வாதங்களுக்கு பதில் சொல்ல
முடியாமல் திணறினார் அந்தணர்.
பூனை தொடர்ந்தது, '' மூன்று நாட்களாக
ஒரு எலியைக் குறி வைத்து நான்
பாயும் போதெல்லாம் உங்கள்
வீட்டிலிருந்து யாராவது 
குறுக்கே வந்துள்ளீர்கள். 
அதற்காக
நான் உங்களைத் திட்டினேனா?
சரி , நமக்கு இன்னும் நேரம்
வரவில்லை என்று என்னை
நானே சமாதானப்
படுத்திக்
கொண்டேன் .இன்றாவது 
அது சிக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
சென்று கொண்டிருக்கிறேன் .

'' அபசகுனம் என்று வீட்டுக்குத்
திரும்ப நினைத்த அந்தணர்
தனது முடிவை மாற்றிக்
கொண்டு ,பூனைக்கு வந்தனம்
சொல்லிவிட்டு தன பயணத்தைத்
தொடர்ந்தார் .

Rajasthan: The Land of Colors

Call it the land of kings or the land of colors, Rajasthan's heritage, culture, safaris, sand dunes, lush forests and wildlife-makes it a destination nonpareil. The desert state is very popular for its rich culture and traditions, a glimpse of which you can see in the music and dances of Rajasthan that allure and soothe your heart. The colorful Pushkar fair adds more beauty to the state and brings alive the rich tradition of Rajasthan enhancing the glory of the golden sand.
Rajasthan is a land of romantic palaces and magnificent forts, boasting of tales of courage and sacrifice. A visit to these Forts and Palaces would be an altogether new experience The Umaid Bhavan palace is one of the largest royal palaces in the world.
Rajasthan is also noted for national parks and wildlife sanctuaries. There are four national parks and wildlife sanctuaries named the Keoladeo national park of Bharatpur, Sariska Tiger reserve of Alwar, Ranthambore national park of Sawai Madhopur and desert national park of jaisalmer. Ranthambore National Park and Sariska Wildlife Sanctuary both are known worldwide for their tiger population and considered by both wild lovers and photographers as the best places in India to spot tigers.
Besides, it houses several small wildlife sanctuaries and eco-tourism parks. Prominent among them are Mount Abu Sanctuary, Bhensrod Garh Sanctuary, Darrah Sanctuary, Jaisamand Sanctuary, Kumbhalgarh Wildlife Sanctuary, Jawahar Sagar sanctuary and Sita Mata Wildlife Sanctuary. Home to the world's largest collection of Indian native animals, besides Tigers, you can find other species like the great gaur, Indian bison, which can be seen with ease, notably including the apex predator Caracal, the Chinkara and the Great Indian Bustard.
A must see place in Rajasthan is Udaipur-which is all in praise for its beauty, culture, architectural heritage property and the Udaipur palace. Udaipur, one of the most beautiful cities of Rajasthan, often called 'Venice of the East'. It is also the 'City of Lakes'. The Lake Palace (Jag Niwas) located in the middle of Pichola Lake is the finest example of architectural and cultural marvel. The grand City Palace on the banks of the lake along with the Monsoon Palace (Sajjan Garh) on the hill above enhances the beauty of this magnificent city. Udaipur is also the centre for performing arts, crafts and its famed miniature paintings. The Shilpgram festival is a great crowd-puller on New Year.
Blue pottery, terracotta, dhurries and carpets, wooden artifacts, jewellery, folk paintings, phads and pichwais are some the souvenirs you can carry back from Rajasthan.
More facts:
Capital: Jaipur
Area: 342.269 km2
Population: 68,621,012
Closest airport: Jaipur, Udaipur, Jodhpur airport and Kota airport
Official languages: Rajasthani and Hindi
Top Attractions:
Jaisalmer:
Said to be right out of an Arabian Nights fable, Jaisalmer is a remarkable sandstone city that rises magically from the sand dunes of the Rajasthan desert. Jaisalmer's mesmerizing ancient fort, built in 1156, is perched high on a pedestal overlooking the city. Inside, the fort is alive and spellbinding. It houses five palaces, several temples, and some exquisite havelis (mansions), as well as shops and other residences. Jaisalmer is a giant sandcastle with a town attached with emblem of honor in a land of rough and tumble.
Jodhpur:
Beyond the 16th-century border, but it's the immediacy and grandeur of the old city, once a stop on a vital trade route, that has more and more travelers raving lies proper Jodhpur. The charming, walled old part of the city is presided over by the looming Mehrangarh Fort. The sprawling Umaid Bhawan Palace, the graceful cenotaph of Jaswant Thada and the alluring Madore Garden are the pride of Rajasthan.
Ranthambore National Park:
This national park is 1334 sq km of wild jungle scrub hemmed in by rock-strewn ridges. The landscape is dominated by the formidable 10th century Ranthambore Fort. It's a huge structure that contains ruined pavilions, splendid monuments, and dotted close are ancient temples and mosques, crocodile-filled lakes, chhatris (cenotaphs) and hides. The park was a maharajas' hunting ground till 1970 - a curious 15 years after it had become a sanctuary. Ranthambore National Park is full of history, having witnessed many battles played out on its land, and the rise and fall of many rulers. The chances of spotting a tiger in the wild at Ranthambore are amongst the best in India. In contrast with many national parks in India, Ranthambore is very accessible and easy to get to.
Pushkar:
Brahma dropped a lotus flower on the earth - so say the epics - and Pushkar floated to the surface. This pond-sized Hindu pilgrimage town is a magical desert-edged place, with one of the world's few Brahma temples. Rows of sacred Ghats front a mystically compelling lake, where hundreds of milky-coloured temples and weather-touched domes sit under an irregular, pale grey sky. For most of the year, Pushkar is a heavy-eyed little holy town that attracts a lot of backpackers and hippie types. Pushkar really comes alive for a couple of weeks in October/November, when the Pushkar Camel Fair comes to town. It's a fascinating and peculiar sight, and a great opportunity to witness an old traditional style Indian festival. Pushkar is worth a visit at any time of year though if you want to chill out
Jaipur:
The "Pink City" of Jaipur is huge, crowded, and deafening. However, it's a city full of charming primeval palaces and forts, with most of them daring dramatic views and elaborate architecture. Jaipur is part of India's popular Golden Triangle tourist circuit, and lures guests with its stunning remnants of a bygone era. A visit to Jaipur will give you an experience of how the monarchy once lived in all its glory. Staying in Jaipur is also particularly enjoyable. The city has some unbelievable heritage hotels that have been converted from old palaces, giving guests a very regal experience!
While at Jaipur one must see the architectural marvels like Hawa Mahal, Amber Fort, the Observatory, Jal Mahal and Jaigarh Fort - all of which bears authentication to the tremendous technological capabilities even in ancient India and offer glimpses of the grandiose lifestyles of Indian Maharajas.
Udaipur:
An enchanting place filled with old mansions, striking precincts, intricate temples, and majestic palaces overlooking expansive glistening lakes - Udaipur is in every sense worth the travel of miles. The City Palace, which stretches along the eastern shore of Lake Pichola, leaves visitors awestruck. The way it has been constructed is exquisite, with Rajput military architecture and Mughal style decorative techniques both combined together. The narrow lanes of the old city are fascinating to explore.
Udaipur is the Dream City of Rajasthan. It is often referred to as the landscaped city and is fondly called the "Venice of the East" .The Palace Museum, Sahelion ki Bari, Jag Mandir, the temples of Nathwada and Eklingji stand as witnesses to the hoary past. An evening boat cruise in the Lake Pichola - will take you around the stupendous forts, grandiose palaces and havelis and this would be an unforgettable fairytale experience.


காகிதம்,... பாத்திரம்!... பலகாரம்?



காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் சீனர்களால் கண்டுபிடிக்கப் பட்டது என வரலாறு கூறுகிறது. நமக்கு அநேகமாய் பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டில்தான் காகிதம் பரிச்சயமாகி இருக்கும் என நினைக்கிறேன். இது பற்றிய தகவல் எனக்கு சரியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் விளக்கிடலாம்.
சமீபத்தில் போகர் ஜால வித்தை நூலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பாடல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆம், போகர் தனது பாடலில் காகிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் காகிதத்தால் செய்யப் பட்ட பாத்திரத்தில் பலகாரம் சுடுவதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?, அந்த பாடல் இதுதான்....
தேரியதோர் பிரண்டதனை யரைத்துக் கொண்டு
திடமான காகிதத்தாற் றென்னைசெய்து
மாரியே பின்புறத்தில் மூன்றுபூசல்
மைந்தனே யுலரவைத்துப் பூசிவாங்கி
கோரியே மூன்றுகல்லை யடுப்புபோல
கூட்டியே தொன்னையதின் மேலேவைத்து
வாரப்பா எண்ணையது காய்ந்தபின்பு
வடைபோளி யதிரசங்கள் சுட்டுவாங்கே.
- போகர்.
சற்று தடிமனான காகிததில் தொன்னை போல் செய்து கொண்டு அதில் பிரண்டை யை அரைத்து, அந்த காகித தொன்னையில் பின் புறத்தில் பூசி காய வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
இதே மூன்று தடவைகள் பூசி நன்றாக காயவைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்..
இப்படி மூன்று கல்லைக் கொண்டு அடுப்பு உண்டாக்கி நெருப்பு மூட்டி அதில் காயவைத்த இந்த காகிதத் தொன்னையை வைத்து எண்ணெய் ஊற்றி, கொதித்த பின் வடை, போளி அதிரசம் எல்லாம் சுட்டு எடுக்க முடியும் என்கிறார் போகர்.
வாய்ப்பிருப்பவர்கள் இதை பரிட்சித்துப் பார்க்கலாமே.
அப்ப காகிதத்தை கண்டுபிடித்தது யார்?
நம் முப்பாட்டனார் தமிழன். . .டா . . .
இதையெல்லாம் நாம் எப்ப உணரப்போறோம்?

Friday, August 28, 2015

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
அரிசி, நெல் முதலானவற்றை
கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான்
கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.
இது எதனாலென்றால்,
கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும்
அந்த
வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.
வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும்
வாங்குபவர்கை கீழுமிருக்கும்.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும்
தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்ட
ிருந்தனர்
நம் முன்னோர்கள்.
இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும்
இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.
# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்...

கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்

இனிமையாய் பேசுங்க!
* விலங்கையும், மனிதனையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கல்லே ஒழுக்கம். ஒழுக்கம் தவறி விட்டால் மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.
* வியாபாரி அன்றாடம் லாபநஷ்டம் பார்ப்பது போல, இன்றைய பொழுதை எப்படி கழித்தோம் என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும்.
* மனிதனுடைய உயர்வும் தாழ்வும் நாக்கைப் பொறுத்தே அமைகிறது. அதனால், நாவடக்கத்துடன் நயமாகப் பேசுவது நன்மை தரும்.
* மழை சுத்தமான நீராக இருந்தாலும், சேருமிடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அதுபோல, மனிதன் யாருடன் சேர்கிறானோ அந்த குணத்தையே அடைகிறான்.
* ஒருவரின் புறத்தோற்றத்தைக் கண்டு முடிவு செய்து விடாதீர்கள். அவரது பண்பைப் பொறுத்தே நல்லது கெட்டதை உறுதி செய்ய வேண்டும்.
வாழ்வின் உயிர்நாடி எது?
* உன்னைப் புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. இகழும்போது கவலையும் அடையாதே.
* மரம் தன்னை நாடி வருபவருக்கு நிழல் தந்து உதவுவது போல, மனிதனும் தன்னை நாடி வந்தவருக்கு உதவ மறுப்பது கூடாது.
* தூய உணவை உண்ணும்போது தூய எண்ணம் உண்டாகும். அதனால், உணவு சமைக்கும் போது நல்லெண்ணத்துடன் சமைக்க வேண்டும்.
* உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும். பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.
* பசுவைப் போன்ற நல்லவர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற கொடியவர்களிடம் விலகி நில்லுங்கள்.
* பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது.
* போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக் கருதுபவர்களின் உ<ள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.
* பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது.
ஒழுக்கம் உயர்வு தரும்
* நல்லவர்களின் சேர்க்கை நன்மைக்கு வழிவகுக்கும். ஒருவன் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் நல்ல நண்பர்களோடு பழகாதது தான்.
* பணம் சேரச் சேர சாப்பாடு மட்டுமல்ல தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையும் கூட குறையத் தொடங்கும்.
* படிப்பினால் வரும் அறிவை விட அனுபவ அறிவே மேலானது. அனுபவசாலிகளின் அறிவுரைக்குச் செவிசாய்ப்பது நல்லது.
* பத்தியம் இருந்தால் வியாதி தீர்வது போல, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், தெய்வ நிலைக்கு உயரலாம்
* தன் புகழ் தெரியாமல் வாழும் நல்லவர்களின் புகழை, கடவுள் மூன்று உலகத்திலும் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்துவார்.
* வெயில் அதிகம் அடித்தால் மாலையில் மழை வரும். அதுபோல, அநீதி உலகில் அதிகரித்து விட்டால் மகான்கள் அவதரிப்பார்கள்.

Thursday, August 27, 2015

10 health benefits of cucumber

You might have often heard the phrase, ‘Cool as a cucumber’ used to refer to a person who does not show any heightened emotion in moments of extreme pressure. The simile has become so popular for good reason, as eating a cucumber will instantly make you feel better on a sunny day. The vegetable also known as kheera or kakdi in India is an excellent addition to your diet as it has more health benefits than one. Here are some of them.
1. Keeps your body hydrated
Cucumber contains 95% water and eating them is a great way to keep yourself hydrated. Not getting enough water can cause several problems as water flushes out all the toxins in your body.
2. Can be used to prevent hangovers
If the worst part about drinking alcohol for you is the early morning headache that usually accompanies it then there’s a way to avoid it. Nutrients like B Vitamins, sugar and electrolytes will make sure that if you eat a cucumber before going to bed, then the intensity of your hangover next morning will be significantly reduced. 
3. Useful for weight loss
Cucumbers are extremely low in calories and contain high amounts of dietary fibre. This makes cucumber a vegetable that will reduce your hunger pangs without giving you a lot of calories. . 
4. Reduces cholesterol
A cucumber contains zero cholesterol and if you are at risk of suffering from heart disease or have had heart related problems in the past, then you should definitely eat a cucumber a day. Additionally, researchers have found that a compound called sterols can help reduce cholesterol levels. 
5. Aids in digestion
You should eat cucumbers daily to help prevent many digestive problems like acidity, constipation, ulcer formation, etc. The reason that your digestive system loves cucumbers is because it has high amounts of water that helps flush out the toxins, dietary fibre that clears the food stuck in your colon and an enzyme called erepsin that helps in the absorption of protein.
6. Reduces bad breath
Putting a cucumber on the roof of your mouth for a few minutes will help kill all the bad-breath causing bacteria giving you a fresher breath. According to Ayuveda, bad breath is caused due to excess heat in your stomach and eating a cucumber will help release this. 
7. Helps reduce stress
In today’s fast paced world it is easy to get stressed. This stress creates hormonal changes that can affect your body in several ways. Cucumbers are extremely rich in B Vitamins which help regulate the functioning of your adrenal glands and counters the harmful effects that stress can have on your body. 
8. Prevents cancer
Cucumbers contain a group of phytonutrients called lignans which have been linked to a lowered risk of cancer. Additionally, the many antioxidants along with Vitamin C, improves your immunity and reduces free radical damage which in turn helps prevent cancer. 
9. Helps treat eye strain
Extreme dependence of today’s generation on computers and smartphones often leads to eye strain and headache. Keeping a slice of cucumber on your eyes and lying down for several minutes can help reduce eye strain and instantly make you feel more relaxed.
10. Could help prevent Alzheimer’s
Alzheimer’s is an extremely scary disease to have as it takes a heavy toll on both the patient and the caregiver. According to researchers at Salk Institute for Biological Studies, a flavonol called fisetin present in cucumbers prevented progressive memory and learning impairments in mice.
All these properties make cucumber a super food that you shouldn’t forget including in your diet.