காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் சீனர்களால் கண்டுபிடிக்கப் பட்டது என வரலாறு கூறுகிறது. நமக்கு அநேகமாய் பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டில்தான் காகிதம் பரிச்சயமாகி இருக்கும் என நினைக்கிறேன். இது பற்றிய தகவல் எனக்கு சரியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் விளக்கிடலாம்.
சமீபத்தில் போகர் ஜால வித்தை நூலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பாடல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆம், போகர் தனது பாடலில் காகிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் காகிதத்தால் செய்யப் பட்ட பாத்திரத்தில் பலகாரம் சுடுவதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?, அந்த பாடல் இதுதான்....
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?, அந்த பாடல் இதுதான்....
தேரியதோர் பிரண்டதனை யரைத்துக் கொண்டு
திடமான காகிதத்தாற் றென்னைசெய்து
மாரியே பின்புறத்தில் மூன்றுபூசல்
மைந்தனே யுலரவைத்துப் பூசிவாங்கி
கோரியே மூன்றுகல்லை யடுப்புபோல
கூட்டியே தொன்னையதின் மேலேவைத்து
வாரப்பா எண்ணையது காய்ந்தபின்பு
வடைபோளி யதிரசங்கள் சுட்டுவாங்கே.
- போகர்.
திடமான காகிதத்தாற் றென்னைசெய்து
மாரியே பின்புறத்தில் மூன்றுபூசல்
மைந்தனே யுலரவைத்துப் பூசிவாங்கி
கோரியே மூன்றுகல்லை யடுப்புபோல
கூட்டியே தொன்னையதின் மேலேவைத்து
வாரப்பா எண்ணையது காய்ந்தபின்பு
வடைபோளி யதிரசங்கள் சுட்டுவாங்கே.
- போகர்.
சற்று தடிமனான காகிததில் தொன்னை போல் செய்து கொண்டு அதில் பிரண்டை யை அரைத்து, அந்த காகித தொன்னையில் பின் புறத்தில் பூசி காய வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
இதே மூன்று தடவைகள் பூசி நன்றாக காயவைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்..
இப்படி மூன்று கல்லைக் கொண்டு அடுப்பு உண்டாக்கி நெருப்பு மூட்டி அதில் காயவைத்த இந்த காகிதத் தொன்னையை வைத்து எண்ணெய் ஊற்றி, கொதித்த பின் வடை, போளி அதிரசம் எல்லாம் சுட்டு எடுக்க முடியும் என்கிறார் போகர்.
வாய்ப்பிருப்பவர்கள் இதை பரிட்சித்துப் பார்க்கலாமே.
அப்ப காகிதத்தை கண்டுபிடித்தது யார்?
நம் முப்பாட்டனார் தமிழன். . .டா . . .
இதையெல்லாம் நாம் எப்ப உணரப்போறோம்?
No comments:
Post a Comment