Monday, March 14, 2016

நாட்டின் வளா்ச்சி

நாட்டின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி என்று கூப்பாடு போடும் அனைத்து அரசியல் கட்சிகளும் வளர்ச்சி என்பதை எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதை அறியாதவர்கள் அல்ல..

நம் நாட்டின் வாழ்வாதாரம் எது? வளம் எது? என்பதனையும் அறியாதவர்கள் அல்ல, வேளாண்மைதான் நம் பலம் என்பதனை பாலகனும் அறிவான் ஆனால் முற்றும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் இவர்கள் அறியாதாரோ???

அறியாமல் செய்த பிழை என்று கூறினால் நம்மை மடையன் என்று கருதுகிறார்கள் என்பதே உண்மை.  லஞ்ச லாவண்யத்திற்க்கும், கோடிகளை கொணர்வதற்க்காகவுமே வளர்ச்சி திட்டங்கள் எனும் பேரில் வேளாண்மையை வேருடன் அறுத்து வலிந்தவன், நொடிந்தவன் வாழ்வாதாரத்தை  கருவறுப்பதையே கடமையென கருதும் கயவர்களுக்கு தெரியாதா? மீத்தேன் எனும் அரக்கனின் விளைவுகள்????

இந்த மீத்தேன் வாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தஞ்சை மட்டுமே பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம் ஓட்டுமொத்த தமிழ் நாடே   பாலைவனம் ஆகும் என்பதே உண்மை..

தென்னிந்தியாவிற்க்கே உணவளித்த தமிழ் நாடு தனக்கான உணவுக்கே அண்டை மாநிலங்களிடமும் அண்டை நாடுகளிடமும் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படும்..

நிலப்பரப்பில் இருந்து 6000 அடி ஆழத்திற்கு துளையிட்டு நிலக்கரியை ஊடுருவி அங்குள்ள நீரை வெளியேற்றி பின்னர் liquid hydrogen செலுத்தி மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படும். அவ்வாறு நிலத்தடி நீர் (மாசுகலந்த) வெளியேற்றப்படும் போது விளைநிலங்கள் பாதிப்படையும்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் கடல் நீர்  உட்புகும். தஞ்சை, கடலூர், கரூர், திருச்சி, மதுரை, கும்பகோணம் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை அழிக்கப்படும்..

தொழிற்ச்சாலையால் வெளியேற்றப்படும் மாசுக்களால் காற்று மாசுபட்டு சுகாதாரம் கெடும்..

சொல்லிமாலாது...சுருக்கமாக சொன்னால் நம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் சுடுகாட்டில்தான் வாழ வேண்டும்!!!!

கொள்ளையடித்த அரசியல் வாரிசுகள் அயல்நாட்டில் ஆனந்த கூத்தாடுவான்..

நமக்கென்று கேள்வி கேட்க எவனும் இல்லை விவசாய பெருமக்களே.. சிந்தியுங்கள்.. மே 16 நம் கை விரல்களில். நம் எதிர்காலம்.??????

No comments:

Post a Comment