Sunday, March 31, 2019

சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்

சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்.*
சிவபுராணம் என்பது சிவனை பற்றியும் அவன் இருக்கும் இடமான *சிவபுரத்தையும் கூறும் ஒரு சிவரகசிய புதையலாகும்.* (இங்கு *சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து* வரியை ஞாபகம் வைக்க)
தினமும் நமக்கு *இறைவனால் கொடுக்கபடும் ஒரு துளி அமிர்தம் அதை முழுவதுமாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நூல் தான் இந்த சிவபுராணம்.*
சிவபுராணத்தின் *முதல் வரியில் இருந்து, முதல் ஐந்து வரிகள் வாழ்க, வாழ்க என முடியும்* வரியை கவனிக்க *வா…ழ்….க, இது தமிழில் ழ்… என்ற எழுத்து மட்டுமே உள்நாக்குவரை சென்று தொட்டுவரும்.*
*உங்களுக்கு அமிர்தம் இயற்க்கையாக சுரக்கும் ஒரு துளி, உள்நாக்கில் படர்ந்து இருக்கும் அதை நாக்கு நுனியால் தொடும்போது உங்களுக்கு பலம் கூடும்.*
*இதனால் தான் இதை ஓதும் முன் உடல் சுத்திகள் செய்து அதிகாலை பிரம்மத்தில் ஓத சொன்னார் வள்ளலார்.*
*இந்த நேரத்தில் அமிர்தம் கொட்டாது சிறு துளி அளவாக ஊரும், அதாவது சுரக்கும் அதை பிடித்து உடல் முழுவதும் பரவ செய்ய வாழ்க வாழ்க என ஆறு முறை பாடலில் வரும் இவ்வாறு அமிர்தம் உண்டு, ஸ்தூல உடலை வழுபடுத்திய பின் அடுத்த நிலைக்கு செல்வோம்.*
அடுத்தது *வெல்க வெல்க என்று அமிர்தம் கொடுத்த இறைவனை உடலில் வெளிப்படுத்தி* அடுத்த பகுதிக்கு செல்கிறோம்.
இதற்கு *அடுத்த ஆறு வரிகள் இது சூட்சம உடல் என குறிப்பிடும் பிராண உடலை வழுபடுத்த போற்றி போற்றி என கூறுகிறோம். போ….ற்….றி இதில் முதலில் உள்ள போ என்றால் ஓரெழுத்து சொல் அனுப்புதல், நடுவில் உள்ள எழுத்து ‘’ற்’’ அண்ணாக்கு என்னும் அன்னத்தில் தொடும். இங்கு நாக்கு தொடும் போது பிராண உடல் வலிமையாகும்.*
அது எப்படி பிராண சக்தி சூட்சம உடலுக்கும் போகும் என கேள்வி கேட்க வேண்டாம், தீர ஆய்வு செய்து தான் விளக்கபட்டது. இது புரிய மெய்யென்ற (உடம்புக்குரிய) எழுத்து அறிந்திருக்க வேண்டும்.
நண்பர்களே ஒன்று நன்றாக நினைவில் கொள்ளவும் *அடியோ, வினையோ (சூட்சம) பிராண உடலை தாக்காமல் ஸ்தூல உடலை தாக்காது பிராண சரீரம் வலிமையானால் தூல சரீரம் இன்னல்கள் வேகமாக தாக்க தூல உடல் இடம் கொடாது.*
*நான் செய்வினை , செயபாட்டு வினை அனுப்பவேண்டுமானால் முதலில் உங்கள் பிராண உடலில் தான் விளைவை ஏற்படுத்துவேன். பின் அதுதான் ஸ்தூல உடலை பாதிக்கும்.*
சரி இந்த எழுத்தை ஆராய்வோம்.....
*வாழ்க + போற்றி = 2 : ½ : 1(மாத்திரை அளவு)*
மேற்கண்ட மாத்திரை அளவு ஒன்று தான் ஆனால் பிறக்கும் இடமும் பொருளும் வேறு.
*போற்றி என்று சொன்னால் பிராண தேகம் வலிமையடையும் இதனால் தான் அனைவரும் போற்றி மாலை பாடுகின்றனர்.*
உம்: ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
பிராண தேகம் வலிமை என்றால் நீங்கள் வலிமை மிக்கவர்
இப்படி சிவபுராணம் பாடும்போது ஸ்தூல சூட்சம உடல் பலம் அடைந்து பதினேழாவது வரிக்கு போனால் *சிவன் என்பவர் சிந்தையுள் நிற்பார்,* இப்போதான் நிற்க வைக்க முடியும்.
அவரிடமே அருள் பெற்று *வினை முழுவதும் அழிய சிவபுராணம் பாட ஆரம்பிக்க போறேன் என்கிறார் இருபதாவது வரியில்,*
அப்பிடினா!! இப்ப பாடினது எல்லாம், நான் சொன்ன வேலையை செய்வதற்க்காக மட்டுமே என உணர்க
இப்படி மாணவன் தன் ஸ்தூல, சூட்சம தேகங்களை வழுபடுத்திய பின் சிவபுரத்திற்க்கு செல்லும் வழியை கூறுகிறார்.
*அடுத்து21வது வரி கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட என ஆரம்பிக்கிறார் உடம்பில் இருக்கும் இறைவன் கண்ணை வைத்து வழிகாட்டி உள்ளே செல்லும் மார்க்கத்தை கூறி அந்த மார்க்கத்தில் வருகிற உடல் இன்னல்கள், இப்பிறவியில் வந்து பெற்ற, படித்த பல விடயங்கள் அங்கு வரும் அது அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும் அங்கு அதையெல்லாம் கவனிக்காமல் இருட்டில் சென்று கொண்டே இருக்கவேண்டும்.*
இந்த கட்டம் கொஞ்சம் சிரமம் தான் இருந்தாலும் மனதிற்க்கு எதையும் காட்டாமல் இருளை மட்டுமே காட்டி உள்ளே உள்ள ஒளி தெரியும்வரை செல்ல வேண்டும்.
அதாவது மாணிக்க வாசகர் சொல்வதுபோல்
*“விலங்கு மனத்தால் விமலா”*
விலங்கு மனம் என்பது மனதிற்க்கு கற்பித்த ஒரு விடயத்தை மட்டும் நினைக்க செய்யுமாறு விலங்கு போடப்படுவது, அதாவது விலங்கு போல ஒன்றை மட்டுமே செய்வது. இது மிகவும் முக்கியமான இடம் சித்தர்களின் குரல் நண்பர்களே!!!
*மனமும் உடலும் ஒன்றாக இருக்க ஒரு மெய் எழுத்து உள்ளது. அதை தக்க குரு மூலம் அறிக.*
*இப்படி செல்லும் போது இருட்டின் நடுவே விளக்கு இல்லாமல் ஒளி தெரியும் அது தான் சிவபுரத்தின் (பிராண உலகத்தின்) நுழைவுவாயில், அங்கு செல்வதற்க்குள் நடக்கும் சம்பவம் 21வது வரியிலிருந்து 87 வது வரி வரைக்கும் அனுபவம்*
*அவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி உங்களையும் அதில் சிக்க விடாமல் மீட்டு வந்து வாயிலில் நிற்க வைப்பார். இது எல்லாம் சிவ யோகத்தில் அபூர்வயோக சாதனை என கருத்தில் கொள்க*
சிவபுரம் என்பது பிராண உலகம் அது உள்ளே சென்றவுடன் நிஜத்தில் உள்ளதை போல் இருக்கும் அங்கு பலபேர் உங்களை சந்திப்பார்கள். அங்கு நீங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.
*முதல் முறையாக உள்ளே போகும் போது நீங்கள் யார் மூலம் வந்தீர்கள் என அவர்களிடம் கூற வேண்டும். பின் அந்த குருவின் சார்பாக அடியாரோ, அக்குருவோ வந்து அழைத்து செல்லுவர்.*
*அதாவது கடைசி வரி சிவன் அடிகீழ் உள்ள பலரும் வணங்கி அழைத்து செல்லுவர் என்கிறார்.*
*இது முழுக்க முழுக்க என் அனுபவ சூட்சம யாத்திரை...*
*இதை அனுபவமாக சொல்லவேண்டுமானால் சூட்சம யாத்திரை செய்பவர்களுக்கு எளிதாக புரியும். அதாவது சூட்சம பயணம் செய்யும் போது சூட்சம உலகில் நுழைந்தவுடன் தாங்கள் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இங்கு வந்தீர்கள் என சூட்சம வாயிலில் உங்களுக்கு ஓர் எண்ணம் வரும் இங்கு தான் தெளிவாக ஒரு குருவின் பெயர் சொல்லவேண்டும் அதை விடுத்து பல குருமார்பெயர் தெரிந்து மனம் வெளிபடுத்தினால் அங்கு பயணத்தில் குழப்பம் வரும் பின் அதை சரி செய்யவே பிராணன் விரயமாகும்.*
*இங்கு நடப்பது எல்லாமே உங்கள் சித்தமனதின் வேலை அது மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தடுமாற வைக்கும். அதற்கு முன்னமே சித்தத்தை சரியாக வைத்திருந்தால் பயணம் தொடரும் இல்லை என்றால் மீண்டும் வரவேண்டியது தான். சித்தர்களின் குரல் நண்பர்களே!! முதல் முறை மட்டுமே தடுமாற்றம் நடக்கும் பின் அனுபவம் கைகொடுக்கும்,இது முழுக்க முழுக்க என் அனுபவ உண்மை....*
*மேற்கண்டவற்றில் நான் சொல்லுவதும் மாணிக்கவாசகர் சொல்லுவதும் ஒன்றுதான் என உங்களுக்கு புலப்படும்.*
*இந்த சூட்சம பயணம் இயல்பாகவே பல சமயத்தில் தூக்கத்தில் எனக்கு அன்னை சித்தர் குருநாதரின் அருளால் நடந்திருக்கிறது. உங்களுக்கும் நடக்கும். ஆனால் நம் மனம் சரியாக இல்லாததால் சரியாக செல்லமுடியாமல் கவனிக்க முடியாமல் போகிறது பலருக்கு...*
*இங்கு நிறைய விஷயம் மறைப்பாக சிவ ரகசியமாகவே உள்ளது. ஆதலால் இது பயிற்சி அல்ல, அல்லவே அல்ல!*
மாணிக்கவாசகர் சிவபுராணம் கூறிய பின் *கீர்த்தித் திருஅகவல்* கூறியிருப்பார். இது அகவல் என்றால், இலக்கண படி, தலைப்பு பற்றி உண்மையை கூறுதல். அதாவது திரு என்கிற குருபிராணை பற்றிய அகவல்.
சற்று கவனிக்க அதில் சிவபெருமானின் பெருமை அனைத்தையும் கூறி கடைசி இரண்டு வரியில்
*“பொலிதரும் புலியூர் புகுத்தி இனிது அருளினான்*
*"ஒலிதரு கயிலையின் உயர்கிழவோனே*
கயிலையின் உயர்கிழவோன் என்பது யாரு? வேறு யாரு சிவந்தான். சிவன் தான் என்னை அழைத்துவந்தான் என்று கூறியவுடன் பல்லோரும் வணங்கி உள்ளே வழிவிட்டு பாதையை காட்டுவர்.
இப்படி தான் யார் மூலம் இப்பிராண உலகத்தில் வந்தேன் என்று கூறி
அடுத்து *திரு அண்டபகுதிக்கு* செல்கிறார். பிராண உலகம் தாண்டி அதி சூட்சம் என்று சொல்லுகின்ற பிரபஞ்சத்தின் பகுதிக்கு செல்கிறார். பின் அதை விளக்கி இந்த ஆன்மா வந்த பாதைக்கு செல்கிறார்.அதன் வழியாக சென்று பேராத்மா எனப்படும் அவரை சந்தித்து மீண்டும் தன் பிராண தேகத்தில் வருகிறார். இது வரைக்கும் உள்ள விடயங்கள் *போற்றி திரு அகவல் 86 வது வரி வரைக்கும்* கூறுகிறார்.
அதற்கு அப்புறம் மீண்டும் போற்றி பாடி பிராண வலிமை பெற்று திரும்புகிறார்.
இதெல்லாம் குறைந்த நிமிடங்களிலும் நடக்கலாம் அது பற்றி பின் பார்ப்போம்...
மாணிக்கவசகர்பெருமானுக்கு இந்த பகுதில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னு விடாமல் மிக தெளிவாக 100 பாடல்களாக அடுத்த *திருச்சதகம்* என்ற தலைப்பில் 10 தலைப்புகளாக தொகுத்து தருகிறார் இது தான் மிக முக்கியம் இதை கவனமாக ஆராய்க.
சதகம் என்பது இலக்கண படி பார்த்தால், தான் பார்த்த காட்சிகளையும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கி கூறும் பகுதியாகும்.
ஞான சாதகர்கள் சிவபரம்பொருளை முறையாக சென்று காணம்போது என்ன செய்ய வேண்டும், என்ன நடக்கும் என்பது கூறுகிறார். இது மிக முக்கியமான பகுதியாகும்
1⃣சிவபுராணம்
2⃣கீர்த்தித் திருஅகவல்
3⃣திருஅண்டப் பகுதி
4⃣போற்றித் திருஅகவல்
5⃣திருச்சதகம்
இந்த ஐந்து யோக ஞான பகுதிகளுக்கும் ஒரு பெரிய தாழ்பால் போட்டு மூடியுள்ளார். அந்த யோக ஞான தாழ்பாலை திறக்க ஒரு இசை வேண்டும் அதை முதலில் படித்து பின் இதை படிக்க தெளிவாக விளங்கும்.
அது என்ன என்கிறீர்களா? அது தான் மாணிக்கவாசகர் இயற்றிய *"யோகஞானதாழிசை"* என்ற பாடல்கள் ஆகும்.
இதில் மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே ஆனால் மேற்கண்ட ஐந்து பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல் தான் இது. இதை படித்து ஞானம் பெற அனைவரையும் வேண்டுகிறோம்.
இதை மேம்போக்காக படித்து அர்த்தம் கொள்ள வேண்டாம். இது அனைத்தும் யோக ரகசியத்தை கூறும் பகுதி. நாளுக்கு நாள் திருவாசகம் படிக்க ஆவல் கூடி கொண்டே போகிறது.
மொத்தத்தில் ஒரே வரியில் இந்த பதிவின் ஒட்டுமொத்த சாரத்தையும் சொல்ல வேண்டுமானால்...
*"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"*

Saturday, March 30, 2019

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!


நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

Friday, March 29, 2019

.Centre Point of World’s Magnetic Equator.

· 
#SuryaTrust
#SUNDARGe
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க… தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World’s Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.
(7) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது.

Thursday, March 21, 2019

ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது


🌞🌞 ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது
💥💥 ஒரு ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து ஒரு வருடத்தில் கிடைக்கும் ஆக்சிஜன்18 மனிதர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது
🌞🌞 ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்படைஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது
💥💥 நிழல் தரும் ஒரு மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு🌴🌴🌴🌴 வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன
🐦🐦 கிளி வளர்த்தேன் பறந்து போனது
🐁🐁 அணில் வளர்த்தேன் ஓடிப் போனது
🌴🌴 மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது......🌴🌴🌴
🌸🌸 பணம் சம்பாதிக்க ஆர்வம் காட்டுவது போல் கொஞ்சம் குளத்தின் ஓரம் ஏரி ஓரம் ரோட்டோரம் வசதி படைத்தவர்கள் கொஞ்சம் பணம் செலவிட்டு மரம் நட முன்வந்தால் அதை வளர்த்து பாதுகாக்க ஏழைகள் தன் ரத்தத்தையே கொடுப்பார்கள்...........
🌴🌴🌴🌲🌲🌳🌳🍁🍁🍁🌿🌿🍀🍀🌴

Wednesday, March 20, 2019

எனது தர்மத்தை கேலி போசுகிறவர்கள் எனது வழிபாட்டு முறையை பழிப்பவர்கள் எங்களது கலாச்சாரத்தை அழிக்க நினைப்பவர்கள்

எனது தர்மத்தை கேலி போசுகிறவர்கள் எனது வழிபாட்டு முறையை பழிப்பவர்கள் எங்களது கலாச்சாரத்தை அழிக்க நினைப்பவர்கள் இவர்களை எதிர்த்தால் நான் #மதவாதி என்றால் நான் ஒரு #மாண்புமிகு_மதவாதிதான் கர்வம் கொள்கிறேன்#ஹரஹர_மஹாதேவ்
#வெற்றிவேல்_வீரவேல் நீங்கள் ???


Tuesday, March 19, 2019

மகத்தான தலைவர் காமராசர். *காமராசருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் ,

#ARUNAGIRISCIALACTIVIST
தமிழகத்தில் தேசியத்திற்கும்
பாரதிய ஜன சங்கத்திற்கும்,
அடித்தள மிட்ட,
மகத்தான தலைவர் காமராசர்.
*காமராசருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் ,,,
*காமராசருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம்?
வரலாற்றை சற்றே திரும்பிப்பார்ப்போம்!
*பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்துகொள்வோம்!
*ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர்..
*மக்களுக்கு மறதிவியாதி எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது..
*உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்..
*காமராஜர் காங்கிரஸ்தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்..
*அகில இந்திய காங்கிரஸ்தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார்.. ஆனால் இந்திரா தொடர்ந்து இந்திரா ஊழல் மற்றும் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் 1969-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கினார்..
* இதனால் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஸ்தாபனகாங்கிரஸ் எனவும், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (ஆர்) எனவும் பிளவுபட்டு காங்கிரசின் சின்னம் முடக்கப்பட்டது..
*காங்கிரஸ் பிளவுபட்ட பின் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திரா, காமராஜரை ஒருமையில திட்டிய கருணாநிதியுடன் கூட்டணி சேர்ந்து காமராஜரை நிந்தித்தார்...
*கருணாநிதி-இந்திரா கூட்டணி காமராசரை மரியாதை குறைவாக நடத்தியது....
*பின்னர் 1971-ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காமராசரின் ஸ்தாபன காங்கிரஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்துடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது... காமராசர் முதல்வராகவே கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்திரா கருணாநிதியுடன் கூட்டணி வைத்தார்.. அந்த தேர்தலில் காமராசர்-ஜனசங்க கூட்டணி தோற்றது!
*பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர்..
*ஆனால் மீண்டும் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்- பாஜகவின் ஜனசங்க கூட்டணி 1975-ல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இந்திரா காங்கிரசை மண்ணைகவ்வ செய்தது...
இதனால் இன்றும் குஜராத் ஸ்தாபனகாங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் காமராசர் படம் உள்ளது!
* இதற்கிடையே ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற்ற இந்திராவை அலகாபாத் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்ததால் இந்தியாவில் சட்டவிரோத எமர்ஜென்சி கொண்டுவந்தார் இந்திரா!
*எமர்ஜென்சியில் சுதந்திரபோராட்ட காங்கிரசாரை கைது செய்து, இந்திரா சிறையிலடைத்தார்.. காந்தி பிறந்தநாளிலாவது சுதந்திரபோராட்ட உண்மை காங்கிரசாரை இந்திரா விடுவிப்பார் என காத்திருந்தார் காமராசர்..
ஆனால் இந்திராவோ சுதந்திர போராட்ட வீரர் ஆச்சாரியா கிருபாளினியை கைது செய்து துன்புறுத்தினார்.. இதனால் மனம்வெந்த காமராசர் 1975ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார்..
*காமராசர் இறந்த பிறகு ஸ்தாபன காங்கிரசின் ஒரு பிரிவினர் மூப்பனார் சிவாஜிகணேசன் போன்றோர் இந்திரா காங்கிரசில் சேர்ந்தனர்..
*சில தீவிர காமராசர் பக்தர்கள் காமராசரை கொன்ற இந்திராவோடு சேரக்கூடாது என்ற காரணத்தால் ஸ்தாபன காங்கிரசிலேயே தொடர்ந்தனர்..
*பின்னர் காமராசரின் பக்தர்களின் ஸ்தாபனகாங்கிரஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கம் மற்றும் பாரதிய லோக்தளம் மற்றும் சோஷலிச கட்சி ஆகியவை இணைந்து ஜனதா பரிசத் கட்சி உருவானது..
*இந்த கூட்டணி 1977-ல் நடைபெற்ற தேர்தலில் இந்திராவை மண்ணைகவ்வ செய்து பெரும் வெற்றி பெற்று மொராய்ஜி தேசாய் அவர்களை பிரதமராக்கியது..
*அந்த அரசில் அடல்பிஹாரி வாஜ்பாய் மத்திய அமைச்சர் ஆனார்..
*இந்த அரசு கவிந்தபோது காமராஜரின் ஸ்தாபனகாங்கிரசாரின் ஒரு பகுதியினரை இணைத்து, ஜனசங்கம் என்ற கட்சி பாஜக என்ற புதிய கட்சியாக உருவானது.. இதில் இணைந்த காமராசர் பக்தர்களின் பிரதான நோக்கம் எந்த காலத்திலும் இந்திரா குடும்பத்தை எதிர்க்க வேண்டும் என்பதே!
*ஆக தற்போதைய பாஜக வில் உள்ள ஒரு பிரிவினர் காமராசரின் பழைய ஸ்தாபன காங்கிரஸ்காரர்கள்..
*எனவேதான் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் "காமராசர் உயிரோடு இருந்திருந்தால் இந்த விசயத்தை பாராட்டியிருப்பார்" என்று டெல்லியில் பேசினார்..
*ஓட்டுவங்கிக்காக காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் காமராசரை புகழ்வது போலல்லாமல் டெல்லியில் காமராசரை புகழ்ந்தார் பிரதமர்..
*காமராசர் கடைசி வரை ஸ்தாபன காங்கிரசில்தான் இருந்தார்.. காமராசரை கொன்ற இன்றைய இந்திரா காங்கிரசாரும், நடுநிலமைவாதிகளும், காமராசரின் பக்தர்களும் இருட்டடிக்கப்பட்ட காமராசரின் உண்மையான வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளவும்..
*உண்மையான வரலாற்றை படித்தால் தான் பாஜகவுக்கும் காமராசருக்கும் இருக்கும் தொடர்பும் பிரதமர் மோடி ஏன் காமராசரை நினைவுகூர்ந்தார் எனவும் புரியும்..
மு.அருணகிாி