#சத்திர_சிகிச்சையின்_தந்தை (Father of Surgery) யார் என்று தெரியுமா?
வேறுயாரும் அல்ல #விஸ்வாமித்திரரின் மகன் #சுஸ்ருத_மகரிஷி தான்.
இவரே கி.மு 8ம் நூற்றாண்டளவில் #உலகின்_மிகச்சிறந்த_மருத்துவராகத் திகழ்ந்துள்ளார்.
சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை..
உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “#சுஸ்ருத_சம்ஹிதையை” மனித சமுதாயத்திற்கு வழங்கியவர்.
சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்.
இவர் #ஆயுர்வேதத்தையும் #ஜோதிடத்தையும்அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர்.
பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர்.
இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர்.
உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.
இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.
#மயக்க_மருந்து_அறிவியல் மற்றும் #பிளாஸ்டிக்_சத்திரசிகிச்சையின் தந்தையாகப் போற்றப்படுபவர் இவரே..
இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வுகளுக்கும் உண்டான மருத்துவ முறையை விளக்கிருக்கிறார்.
125 விதமான அறுவை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை.
இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப்பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார். சுஸ்ருத சம்ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சை முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
சில மூடர்களிடம் கேட்கிறேன். இன்னுமா வெள்ளையர்கள் கிறிஸ்தவத்தை கொண்டுவந்ததால் தான் கல்வி வளர்ச்சியடைந்தது என்று கூறப் போகிறீர்கள்?
முட்டாள்களே அந்நியர் ஆட்சி பாரதத்திலும் ஈழத்திலும் இல்லாமல் இருந்த போதே இந்நாடுகள் எப்போதோ அபிவிருத்தி அடைந்திருந்து காணப்பட்டன
அந்நியர் ஆட்சியால் சிதைந்ததே இத்தனை வருட அவலங்களுக்குக் காரணம்..
No comments:
Post a Comment