Monday, June 29, 2020

திருக்குறள்



#Arunagiri
#Sundarji

Surya Trust
#திருக்குறள்






Tamilan
Tamilan

Friday, June 26, 2020

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்

#Arunagiri 
#Sundarji 
#Ourdreams 
#Surya Trust 








நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...
🌝 தவளை கத்தினால் மழை
🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
🌝 தை மழை நெய் மழை
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு
🌝 களர் கெட பிரண்டையைப் புதை
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல்
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்
🌝 விதை பாதி வேலை பாதி
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்

Thursday, June 18, 2020

நமது பாரம்பரியம் வரலாறு

               #Suryatrust 
                    #Arunagiri 
                       #Sundarji 


#பூமி #உருண்டை என்று கலிலியோ தான் முதலில் கண்டு பிடித்ததாக வெளிநாட்டு காரன் சொல்லியதை நாமும் படித்து கொண்டு இருக்கோம்

அவர் பிறப்பதற்கு #800 #ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் பாகல்கேட் மாவட்டத்தில் கட்டப்பட்ட வராஹ சாமி #கோவிலில்
#பகவான் உருண்டை வடிவில் ஆனா பூமியை தூக்கியபடி இருக்கும் சிலை செதுக்கப் பட்டுள்ளது,

நமது #பாரம்பரியம் #வரலாறு தெரியாமலே அடுத்தவன் சொல்லியதை பெருமையா படித்து கொண்டு இருக்கோம்


Wednesday, June 17, 2020

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!


#தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த #தமிழும் #தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், #பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

 

#குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் #தென்னாப்பிரிக்காவையும் #இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

 

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

 

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

 

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

 

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

 

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

 

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

 

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

 

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

 

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.



Tamilan

Monday, June 15, 2020

காலத்திற்கு ஏற்ற கதை

#காலத்திற்கு ஏற்ற கதை
#Arunagiri
#Sundarji

*சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார்.

 அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.

அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார்.  


அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த
 நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.*

*மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.

குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது.  

திகைத்துப் போனார் சாது.

 அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.*

குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.

அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன்
 இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.

சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.


திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.

சாது மெல்லச் சிரித்தார்.

"சொல்லாதே!" என்றார்.

திருடன்
மிரண்டான்."எது?*
என்ன?" 
என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.*

சாது சொன்னார்.


குதிரையை நீயே வைத்துக்கொள்.

*ஆனால், 
 நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே.*

மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.

என்னால் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.

ஆனால் தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போகக்கூடும்.

புரிகிறதா?"...
திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விடாதீர்கள்.

நல்லவர்களையும் நல்ல நட்பையும் இழந்து விடாதீர்கள்
   

படித்ததில் பிடித்தது. 

நம்பிக்கையுடன் பயணியுங்கள்.

 நல்லவர்களை  இழந்து அவர்கள் செய்த உதவியை மறந்திடாதீர்கள்.

Saturday, June 13, 2020

அனுமன் பிறந்த கதை

#அனுமன் #பிறந்த #கதை

#Sundarji
🐒ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு #சேவை செய்ய #பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன.

🐒 #பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது.

 🐒தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார்.

🐒 தனக்கு அழகா
ன இரண்டு #குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள்.

🐒எனவே, ருத்ராம்சமான தன் #சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன்.

 🐒தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி #வாயு #பகவானுக்கு உத்தரவிட்டார்.

🐒புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் #பூலோகம் வந்தாள். 

🐒ஒரு #காட்டில் தவம் செய்து கொண்டிருந்த #ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள். 

🐒""ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ,'' என சாபமிட்டார்.

 🐒புஞ்ஜிகஸ்தலை
யின் முகம் வானர முகமாகி விட்டது. 

🐒அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள்.

🐒#அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, ""பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்,'' என்ற வரம் அளித்தார்.

🐒அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு 

🐒"அஞ்ஜனை' என்ற பெயர். "கேஸரி' என்றால் "சிங்கம்'. "அஞ்ஜனை' என்றால் "மை பூசிய பேரழகி'. ஒருநாள், 

🐒அப்சரஸாக உருமாறி ஒரு மலைச் சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.

🐒அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான்.

🐒 அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள்,

 🐒அணைப்பது யார் என தெரியாமல் ""ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது,'' என கதறினாள்.

🐒அப்போது வாயுபகவான் காட்சியளித்து""பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை.

🐒 மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய்.

🐒 நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. 

🐒நீ #உலகம் புகழும் ஒரு #புத்திரனைப் பெறுவாய்,'' என சொல்லி மறைந்தார்.

🐒அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள்.

🐒 வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு "மாருதி' என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.

🐒 அஞ்சலி மைந்தன் அ#
Arunagiri
னுமன் ராமனுக்கு மட்டும் சேவகம் செய்யவில்லை

🐒 கிருஷ்ணருக்கும் சேவகம் செய்தவரே

🐒 அவர் ஒரு சிரஞ்சீவி பக்தனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இவரை என்றென்றும் போற்றுவோமாக

Friday, June 12, 2020

கோவிந்தா ஹரி கோவிந்தா !



#கோவிந்தா ஹரி கோவிந்தா !
#கோவிந்தா ஹரி கோவிந்தா !

#Arunagiri
#Sundarji
#Surya Trust
#Our Dreams



ஒரு சமயம் பாண்டிய மன்னன் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றான். 
ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே ,தாங்கள் யார்.?" என வினவினான்.
" நான் புனித கங்கையில் நீராடிவிட்டு, சேதுக்கரைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்," என்றார் முதியவர்.
/AAAAAAAAA9s/JHz4qB29ecATSLNKPIVo7wrO65osf_ARQCK4BGAsYHg/s396/httparunagirimadurai.blogspot.com.jpg

"ஓ...அப்படியா ? மிக்க #மகிழ்ச்சி.
ஆன்மிகப் பற்றுடைய தாங்கள் ஏதாவது ச்லோகம் சொன்னால் நன்றாக இருக்கும்," என்றான் மன்னன்.
முதியவர் சுலோகமும் சொல்லி அதற்கான பொருளையும் சொன்னார். "

 மழைக் காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாய் வாழ ,மற்ற எட்டு மாதத்திலும்  உழைக்க வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலிலும்,முதுமைக்குத் தேவையானதை இளமையிலும் தேட வேண்டும். அதே போல அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேட வேண்டியது அவசியம்," என்றார் முதியவர் .

அவரை வணங்கி வழியனுப்பி வைத்த மன்னன். முதியவர் சொன்ன முதல் மூன்று விசயங்களை முடித்து விட்டேன். அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேடுதல் என்றால் என்ன....!! என்று குழம்பியவாறே, அரண்மனைக்குச் சென்றான். 
    
    மறுநாள் குலகுரு செல்வ நம்பியையும், பண்டிதப் பெருமக்கள் பலரையும் அழைத்து , இது குறித்து விசாரித்த போது யாரும், மன்னனின் சந்தேகத்தைப் போக்க இயலவில்லை.
   
   #மன்னன் ஒரு மூங்கிலின் உச்சியில் ஒரு பொற்காசு முடிப்பைக் கட்டி ,அரண்மனை வாசலில் நடுமாறும்,மன்னனின் சந்தேகத்தை தெளிவுறச் செய்வோர்களுக்கு இந்தப் பொற்காசுகள் அடங்கிய முடிச்சு இலவசம் என்றும் அறிவிக்கச் செய்தான்.
    
   அன்றைய இரவில் #ஸ்ரீவில்லிபுத்தூர் 
பெரியாழ்வார்  கனவில் பெருமாள் தோன்றி," பரம்பொருளைத் தொழுது அருளைப் பெறுதலே ,அடுத்த பிறவிக்கான தேவை," என்று சொல்லி மன்னன்  சந்தேகம் போக்கும்படி கூறி மறைந்தார்.

    
  #பெரியாழ்வாரும் அதன்படியே அரண்மனையருகே வந்து ,வாசலில் #மூங்கில் மரமருகே நின்றபடி, வல்லப தேவனை அழைத்து, " மன்னா,! நாராயணனே பரம்பொருள்,இப்பிறவியில் அவரை வணங்கி அருள் பெறுதலே அடுத்தபிறவிக்கான தேடல்  ஆகும்,"என்று சொல்லி முடிக்கும் தறுவாயில் மூங்கில் மரம் வளைந்து ,தாழ்ந்து பொற்காசு முடிச்சை நீட்டியது. மன்னனும் ஆச்சரியமடைந்து பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றான்.
    
அதே நேரத்தில் #கருட வாகனத்தில் பெருமாளும் காட்சியளித்தார். அப்போது தான் ஆழ்வாரும் பல்லாண்டு பல்லாண்டு எனத் தொடங்கும் பாசுரம் பாடினார்.
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் சொல்லி வழிபட்டால் பல்லாண்டு நலமுடன் வாழலாம்.

கோவிந்தா ஹரி கோவிந்தா !