Wednesday, December 11, 2024

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது?

 

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது?

ஆன்மீக காரணமா? மூட நம்பிக்கையா?

புரட்டாசி மாதத்தில் அசைவம் விலக்கி பெருமாளை சேவிக்கவேண்டும் என்று பல குடும்பங்களில் வழிவழியாக சொல்லி கடைபிடித்து வருகிறார்கள்.

காரணம் கேட்டால் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் அதனால் அசைவம் சாப்பிட கூடாது என்றுதான் சொல்வார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு சொல்லத்தெரியாது.

ஆனால் உண்மை காரணம் நம் ஆரோக்கியத்துக்குதான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை.. ..

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. அதனால் சூட்டை கிளப்பி விடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் அதிக கெடுதல் தரக்கூடியது.

இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டு மேலும் சூட்டை அதிகப்படுத்தி நாமே உடல் நலத்தை கெடுத்துக்கொள்வது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம்.

புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவதால் ஏற்கனவே இருக்கிற உடல் சூட்டில் மேலும் அதிக சூட்டை கிளப்பி அஜீரண கோளாறு, வயிறு உபாதை,  சோம்பல், மறதி சலிப்பு ஏற்படுத்தும். கோபத்தையும் காமத்தையும் அதிகப்படுத்தும்

அதுமட்டுமின்றி சரிவர பெய்யாத மழையால் திடீர் வெப்ப மாறுதல் ஏற்பட்டு வைரஸ் கிருமிகள் உருவாகி சளி காய்ச்சல் தொந்திரவுகள் அதிகரிக்கும். இதனால் உடல் நலமும் மனநலமும் கெடும்.

இதை எல்லாம் செலவில்லாமல் தவிர்க்கவே புரட்டாசியில் அசைவம் விலக்கி விரதம் இருந்து மனதை ஒருநிலைப்படுத்தி பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

காரணம் அங்குதான் துளிசி தீர்த்தம் தருவார்கள். அது காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற உபாதையை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்க வல்லது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி



No comments:

Post a Comment