Friday, December 6, 2024

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள் ?

 

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள் ?

பக்தியா? மூடநம்பிக்கையா?

நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்கு தெரியாமலே புரியாமலே பழக்கமாக்கிவிட்டார்கள்.

அதில் இதுவும் ஒன்று

ஆடி மாதத்தில் பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள வண்டல் மணல்களை அடித்து சென்று இருக்கும்.

அதனால் ஆற்றில் நீர் பூமிக்கு கீழே இறங்காமல் நேராக சென்று கடலில் கலந்து வீணாகிவிடும், (அந்த காலத்தில் இப்போது இருப்பது போல தண்ணீர் தேக்க அணைகள் இல்லை).

ஆனால் களிமண் இருக்கும் இடத்தில் தண்ணீர் உறிஞ்சி பூமிக்கு கீழே சென்று நிலத்தடி நீர் பெருகும்.

அதுதான் வறட்சி காலங்களிலும் ஆற்றில் நீர் வராத இல்லாத காலங்களிலும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் உதவும்.

அதனால் விநாயகர் சதுர்த்தியன்று ஒவ்வொரு வீட்டிலும் களிமண்ணால் விநாயர் சிலை செய்து வழிபட்டு ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள்.

அதை ஏன் மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்கவேண்டும்?

ஈரக்களிமண் ஆற்று நீரின் வேகத்தில் சீக்கிரம் கரைந்து சென்றுவிடும். சற்று காய்ந்த களிமண் கரையாமல் அப்படியே ஆற்றின் கீழ் சென்று படிந்துவிடும்.

இதனால் ஆற்றில் வரும் நீர் களிமண்ணால் உறிஞ்சப்பட்டு கீழே நிலத்தடி நீராக சென்று கொண்டே இருக்கும்.

இது அன்றைய ஆற்றங்கரை நாகரீகத்தின் தண்ணீர் ஆதாரத்திற்கு முக்கிய காரணம்.

இதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் களிமண் கொண்டுபோய் ஆற்றில் போட்டுவிட்டு வாருங்கள் நல்லது என்று சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்.?

அதுமட்டுமில்லை அன்று எந்தவித தொழில்சாலைகளும் இல்லாத காலத்தில் ...

விவசாயிகளிடம் இருக்கும் பணம் மற்ற தொழில் செய்பவர்களுக்கு சுழற்சி ஆகவே ஒரு பண்டிகையாகவும் கொண்டாடச்சொன்னார்கள்.

இது தெரியாத மண்டூஸ்கள் இன்று விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்து ஆற்றிலும் கடலிலும் போட்டு நீர்நிலைகளை பாழ்படுத்தி வருகிறார்கள்.

என்னத்த சொல்ல?

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment