Thursday, October 23, 2014

Our dreams

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்"

தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால்
வரிசை என்று பொருள். வரிசையாக
தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற
பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப்
பெயராக நிலைத்துவிட்டது!

தீமையை விலக்கும் உண்மையாகவும்,
இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச்
சொல்கிறோம்.

இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின்
குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப்
பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய்
விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக்
கொண்டு வருவதாக ஐதீகம்.

பஞ்சாங்கங்களில்
தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் "
என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம்
செய்ய உத்தமம் என்றோ காணப்படும்.

சந்திர தரிசனம்

"சந்திர தரிசனம்" என்றால் என்ன?
ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம்
நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய
உதயத்திற்கு சுமார்
ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன்
மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில்
அடிவானத்தில் தெரியும்.
சூரியன் உதயமாகிவரும்
நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய்
கண்ணுக்குப் புலப்பட மாட்டாது.
ஆனாலும் கூட சூரிய
உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால்
சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண
முடியும். மேகமூட்டமோ,
மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.
இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர்
நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும்.

ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க
வேண்டும். ஆகையால்தான்
தீபாவளியன்று விடியுமுன்
குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

கதை, கதைகள்

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம்
நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு.
ஒவ்வொரு மாநிலத்திலும்
ஒவ்வொரு கதையை தங்கள் பேரக்
குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள்.
நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல்
கதை 'நரகாசுர வதம்'.
பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்!

நரகாசுரன்
பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட
தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம்
சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம்
வாங்கியிருந்தான்.

வரத்தை வாங்கீட்டோம்ங்கிற
தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த
தேவர்களையும், நாட்டு மக்களை பல
துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.
எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும்
வீட்டுல வெளக்கேத்தக்
கூடாதுன்னு உத்தரவு போட்டான்.

வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்!

வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின்
தலைகளைக் கொய்தான். நரகாசுரனின்
கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான்
கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.

கிருஷ்ணரும்
நரகாசுரனை அழிக்கிறேன்
என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.
பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன்
நரகாசுரனை எதிர்த்துச்
சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான்
கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர்
நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர்
மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார்.

இதனால்
கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட
சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க.
நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம்
ஒரு விண்ணப்பம் செஞ்சான்.
எனக்குச்
சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும்
வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால
நான் இறக்கிற இந்த நாளை மக்கள்
வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான்
ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.
பூமாதேவி நரகாசுரனின்

கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க.
அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன்
இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத்
திருவிழாவாக..
தீபத்திருவிழாவாக
எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

வட நாட்டில்..

ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன
வாசத்திலிருந்து ராமரும், சீதையும்
நாடு திரும்பும் நாள் தான்
தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.

வீடுகளில்
தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள்.
ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள்
என்பது ஐதீகம்.

மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள்
கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும்
விரதமும் இருக்கிறார்கள்.

குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக்
கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும்
கொழிக்க வேண்டும்
என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான்
தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.

சீக்கியர்களின் தீபாவளி

சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற.....
தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின்
ஆறாவது குருவான குரு கோவிந்த சிங்
குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்
சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான்
தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள்.
அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான்
தீபாவளி என்று சொல்வாரும் உண்டு.

Our dreams

நம் எண்ணங்கள்
நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிப்பவரா,

அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்...

ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,

உன்னிடம் இந்த
பொம்மை வாங்குவதற்கு தேவையான
பணம் இல்லை என்று சொன்னார். அந்த
சிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும்
பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்
குறைவாக உள்ளது என்றார். அந்த
சிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.
நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்க்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான் மேலும் அவன்
பேச தொடர்ந்தபோது என் இதயம்
நின்று விட்டது போல் உணர்தேன்.

அவன்கூறியது "இந்த பொம்மையை
என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டால்,
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், அனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.

நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,
நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன்
கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,

மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளா னது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?
இரண்டு நாள்
கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த
செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டால் என்று.

நான்
அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன்

அந்த சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. அனால்
ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்
ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்

23_10_2014

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.

ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?

இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்

இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்

வாழும்போதாவது

எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.

Tuesday, October 14, 2014

13.10.2014

எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை  யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

உலோகத் தகட்டில் கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் கீறப்படும் இந்த யந்திரங்கள் சூட்சுமமான பல அர்த்தங்களை  தன்னகத்தே கொண்டவை.இந்த யந்திரங்களை உயிர்ப்பிக்க மந்திரங்கள் அவசியம் ஆகிறது. மந்திரங்களினால் உயிர்ப்பிக்கப் படும் யந்திரங்கள் சக்தி கேந்திரமாய் விளங்குகின்றன.யந்திரம் மற்றும் அதை உயிர்ப்பிக்கும் மந்திரம் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து தெளிவதையே தந்திரம் என்கிறோம்.

இத்தகைய யந்திர வழிபாட்டினைப் பற்றிய தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் அகத்தியர் அருளிய "சண்முக யந்திரம் " பற்றிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தகவல் "அகத்தியர் 12 000 " என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பாரப்பா சண்முகனார் பூசைகேளு
பத்தியுடன் முக்கோணம் பதிவாய்ச் செய்து
நேரப்பா அறுகோணந் தன்னிலேதான்
நிசமான ஓம்மென்றே நன்றாய்ப்போடு
காரப்பா அதனிடையின் வெளியிலேதான்
கருணையுடன் சரவணபவா வென்றேதான்
சேரப்பா அட்சரத்தை நாட்டிக்கொண்டு
சிவசிவா அதனைச் சுற்றி ஓம்போடே.

போடப்பா சுற்றியே ஓங்காரம்போட
நன்மையுள்ள சக்கரமுஞ் சித்தியாச்சு
வீடப்பா பிலப்பதற்கு சக்கரத்தைச்சுத்தி
விருத்தமென்ற வளையமடா மூன்றுபோடு
கோடப்பா கீற நன்றாயக் கோட்டைபோட்டு
குறிப்பாக நால்வாச லிட்டுக்கேளே.

கேளப்பா வாசலிற் தேவதையைக்கேளு
கீழ்வாசலில் பிரமனுட பீஷம்போடு
தாளப்பா தென்வாசல் மாலின்பீஷம்
தயவான மேல்வாசல் ருத்திரபீஷம்
வாளப்பா வடவாசல் மயேசன்பீஷம்
மைந்தனே வாசலிலே தேவதைகள்நாட்டி
ஆளப்பா சதாசிவன்போல் நீயிருந்துகொண்டு
அன்பாகச் சக்கரத்தைப் பூசைசெய்யே.

செய்யப்பா பூசைவிதி தன்னைநன்றாய்
செப்பமுடன் செய்வதற்குத் திருவைநோக்கி
கையப்பா கால்முகங்கள் சுத்திசெய்து
கருரணைபெற விபூதியுத் தளமாய்ப்பூசி
வையப்பா சக்கரத்தைப் பீடமீதில்
மார்க்கமுடன் தானிருத்தி வைத்துமேதான்
மெய்யப்பா தூபமொடு தீபஞ்செய்து
வேதாந்தப் புருவமதில் சிம்மென்றுநில்லே.

நில்லப்பா மனதறிவால் வணக்கமாக
நினைவாகப் சண்முகர்க்குப் பூசைசெய
சங்கையுடன் ஓம்கிலி சிம்மென்றோதே
ஒமெனவே சண்முகர்க்குப் பூசைசெய்து
சோல்லப்பா மூலமென்ற அக்கினியினாலே
சிவசிவா புருவநடுக் கமலம்நோக்கி
நல்லப்ப நல்மனதாய் நோக்கமானால்
நாதாந்த சண்முகனார் தெரிசனையாம்பாரு.

பாரப்பா யோகபூசை அறிவானந்தம்
பதிவான தீபமென்ற மனக்கண்பார்வை
நேரப்பா வாசியென்ற அமுதபானம்
நிலையான பிர்மமாமாயே மாய்கைமாழும்
கருவான சூட்சமடா நாதவித்து
காத்து மனக்கண்ணாலே தன்னைக்காணே
அட்டாங்க யோகமுடன் மௌனயோகம்
அட்டசித்து னித்தனையு மறியலாச்சே.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான சில முன்னெடுப்புகளும், முறைகளும் உண்டு. அதன்படியே அவற்றினை கீறிட வேண்டும்.

இந்த யந்திரத்தினை ஆறங்குல (6"x6") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கீறிய தகட்டினை, பீடம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, உடல் தூய்மை செய்து,  திருநீறு அணிந்து சுகாசனத்தில்  கிழக்கு முகமாய் அமர்ந்து மனதை ஒரு முகமாக்கி, குருவை பணிந்து "ஓம்கிலி சிம்" எனும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டுமாம்.

தொடர்ந்து இம்மாதிரி பூசை செய்து வந்தால் யோக பூசை, அறிவானந்தம், தீபம் என்ற மனக்கண் பார்வை, வாசி என்ற அமிர்த பானம், பிரம்ம மய நிலை, மாயை நீங்குதல், நாதவித்து சூட்சுமங்கள், மனக்கண்ணால் தன்னை அறிதல். அட்டாங்க யோகம், மௌன யோகம், அட்டமா சித்துக்கள் ஆகியவை சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

Monday, October 13, 2014

12.10.2014

இறைவா

"சினை முட்டைக்குள் நூழைய
முடியாமல்
முட்டி போதும் விந்து அணுக்களை போல்"

என்னையும்
இவ்வுழகில்

வாழ விடு

வாழ்க்கை கொடு

Wednesday, October 8, 2014

9.10.2014

என்றும் இளமையாய் இருப்பது

நம் எண்ணங்களும்
சிந்தனைகளும் தான்

முடியாதென்பது  நம்
உடல்கள்
செயல்களும்  

மட்டுமே

Tuesday, October 7, 2014

8_9_2014

தாயின் கருவரையில்
இருந்தும்

பூமா தேவியின் மடியில்
இறந்தும்

இடைப்பட்ட காலங்களில்
நாமும்
நம்மை சுற்றியுள்ளவர்களை
பேனி காப்போம்

Monday, October 6, 2014

பிணமும் பணமும்

பல கோடிகள் உங்கள்
கையில் இருந்தாலும்

தெரு கோடியில் ஓர் நாள்
உறங்க தான் வேண்டும்

Saturday, October 4, 2014

கல்பனா சாவ்லா

விண்வெளி வீரர்
 தேசியம்இந்திய, அமெரிக்கர்
 பிறப்புஜூலை 1 1961
ஹரியானா, இந்தியா
 இறப்புஜனவரி 2, 2003 (அகவை 41)
டெக்சாசுக்கு மேலாக
 முந்தைய பணிஅறிவியலாளார்
 விண்வெளி நேரம்31நா 14 ம 54 நி
 தேர்வு1994 நாசா பிரிவு
 திட்டங்கள்STS-87, STS-107
திட்டச் சின்னம்
கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). இந்தியாவில் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு . பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.

அறிவு_2

ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்துத் தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாகச் சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களிலும் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.

அறிவு

அறிவும் உணர்வும்
தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே; ஆங்கிலச் சொல்லான Knowledge கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ Five Sense, Sixth Sense என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த "sense" எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புக்கொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம்.

Friday, October 3, 2014

4_10_2014

பசித்தால் புசியுங்கள்

அமைதியை தேடி செல்லாதிர்கள் அது
உங்கள் மனதில் உள்ளது

Thursday, October 2, 2014

3_10_2014

இருப்பதை கொண்டு
சிறப்பாக வாழ்வோம்

இருப்பனும்  ஏழை தான்
ஏதோ ஓர் வழிகளில்