Thursday, November 20, 2014

Our dreams

நம் எண்ணங்கள்
உண்மைய சம்பவம்.....
ஜப்பானுக்கு சுற்றுலா சென்ற போது ரயிலில்
நம்ம ஆள் ஒருவர் பயணம் செய்யும்
போது பழக்க தோஷத்தில் எதிரே உள்ள சீட்டின்
மீது கால் போட்டு சொகுசாக அமர்ந்த
படி பயணம் செய்தார்.
இதை கண்ட ஓரு ஜப்பானியர் அவர்
சீட்டை விட்டு எழுந்து வந்து உடனே நம்ம
ஆளின் காலை சீட்டிலிருந்து எடுத்து தன்
மடி மேல் வைத்து கொண்டார்.
நம் ஆளுக்கு ஒரு மாதரி ஆகி விட்டது,
உடனே நம்ம ஆள் ஏன் இப்படி செய்தீர்கள்
என்று கேட்டார்.
அதற்கு ஜப்பானியர் சொன்னார் நீங்கள் எங்கள்
நாட்டின் சொத்தை அவமதிப்பது போல்
கோவமாக இருந்தது.
இருந்தாலும் நீங்கள் எங்கள் நாட்டின்
விருந்தினர் அதனால் உங்கள் செளகரியத்துக்கா
க என் மடிமேல் வைத்துக்கொண்டேன்
என்று சொன்னார்.
நம்ம ஆள் கூனிக்குறுகி அவரிடம் தான் செய்த
தவறுக்கு மன்னிப்பு கோரினார்.
அதற்கு அந்த ஜப்பானியர் இங்கு மட்டுமல்ல
உங்கள் நாட்டிற்கு சென்றாலும்
பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு இடையூறு கொடுக்காமலும்
நடந்து கொள்ளும்படி சிரித்த முகத்துடன்
அறிவுறுத்தினார்.
இப்ப சொல்லுங்க நாம் ஏன் முன்னேற
முடியவில்லை...??

No comments:

Post a Comment