பாம்புகள் நடனமாடுவது ஏன்?
பாம்புகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு நடனமாடின என்ற செய்திகள் எப்போதாவது பத்திரிக்கைகளில் வருவதை பார்த்திருப்பீர்கள்.
பாம்புகள் எப்போது இவ்வாறு நடனமாடுகின்றன? இரண்டு நேரங்களில், பெண் பாம்புடன் ஆண் பாம்பு இணையும் போது இந்த நடனங்கள் அரங்கேறுகிறது.
முதல் நடனத்தில் 2 ஆண் பாம்புகள் இணைந்து கடுமையாக ஆடுகின்றன.
தங்களது பெண் பாம்புகளை கவரும் விதமாக இவ்வாறு அற்புதமாக ஆடுகின்றன.
இரண்டாவது இனச்சேர்க்கைக்காக ஆண் பாம்பும், பெண் பாம்பும் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு நடனமாடுகின்றன.
தங்களது கழுத்தையும், தலையையும் உயர்த்தி ஆங்கில எழுத்து யூ போன்ற வடிவில் நடனமாடுகின்றன.
இந்த நடனத்தில் ஆண் பாம்பு தன் முகவாய்க்கட்டையை பெண் பாம்பின் கழுத்தில் வைத்து தேய்க்கிறது.
இந்த நடனம் 1 மணிநேரம் வரை நீடிக்கிறது, இனச்சேர்க்கைக்காக நடனமாடும் பாம்புகள் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுகிறது.
No comments:
Post a Comment