தேசதந்தை மகாத்மா காந்தி விவேகானந்தடமிருந்து தான் ஆத்ம பலத்தை பெற்றார். கடவுள் இல்லையென்று கடைசிவரை நம்பிய பண்டிட் ஜவஹலால் நேரு விவேகானந்தடமிருந்து தான் கணக்கிட முடியாத தேச பக்தியை பெற்றார். அறிவு மேதையான சக்கரவர்த்தி ராஜகோபலச்சார்யும், செயல் வீரரான நேதாஜி சுபாஸ்சந்திர போசும் மகாகவியான பாரதியும், சுவாமி விவேகானந்தரிடம் இருந்தே ஆக்க சக்தியை பெற்றனர். மாபெரும் இந்திய புரட்சிக்கு காரணமாகவும், உந்து சக்தியாகவும் இருந்த சிவாஜி, குரு கோவிந்த சிங், விவேகானந்தர் போன்றோர்கள் உலகத்தின் பார்வையில் சின்ன சிறுசுகள் தான், ஆனால் இந்த அக்னி குஞ்சுகள் தான் மண்டி கிடந்த அறியாமை இருள்காட்டை வெந்து தணித்த ஞான சூரியன்கள் என்று நினைக்கும் போது இளைஞர் சக்தியின் மகத்வத்தை வியாக்காமல் இருக்க முடியாது.
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து அன்று பெரிய தலைவர்கள் எல்லாம் திட்டம் வகுத்தனர். அந்த திட்டத்ததை செயல்படுத்தியதில் தொன்னூறு பங்கு இளைஞர்களே முன் நின்றானர். திருப்பூர் குமரன் மணியாட்சி வாஞ்சிநாதன், ஜெய் ஹிந்த் செண்பகராமன் போன்றோர்கள் அக்கால இளைஞர்களின் தியாக வரலாற்றை இன்றும் நமது கண் முன்னால் நிறுத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment