Thursday, September 10, 2015

அதிகப்படியான உடல்பருமன் உங்கள் வாழ்நாளைக் குறைக்கலாம்



சோம்பேறித்தனம், இயந்திர வாழ்க்கை, அளவுக்கதிகமான ஓய்வு, உடல் ஆற்றலை பயன்படுத்தாத விளையாட்டுக்கள், உடற்பயிற்சி இல்லாமை போன்ற இக்கால வாழ்க்கை முறையால் பலரின் உடலின் எடை அளவுகதிகமாகவும், அதிக உடல்பருமனுடனும் இருக்கிறார்கள். இப்படி உடல்பருமன் அளவுக்கதிகமாக இருக்கும்போது உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நமக்கு வரும் வாய்ப்பு அதிகம் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும் அதைக் குறைக்க போதுமான வழிகளைக் கையாள்வதில் சிரமம் கொள்ளத் தயங்குகிறோம். 

இப்படி அதிக உடல்பருமனுடன் இருப்பதால் நமது ஆயுட்காலம்கூட குறைய வாய்ப்புள்ளது என்ற தற்போதைய ஆய்வு முடிவுகள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் மெக்கில் பல்கலைக்கழக உடல்நல மையம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு நிரிழிவு நோய் அல்லது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வெகுவிரைவாக வரும் வாய்ப்புகள் உள்ளது 
என அவர்கள் தெரிவித்துள்ளனர்.Ads By BoostIt.caசர்வதேச உடல்நல மற்றும் ஊட்டச்சத்து அமைப்புநடத்திய கணக்கெடுப்பில், ஒரு ஆண்டின் முடிவில் எத்தனை பேருக்கு நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது போன்ற மாதிரியினை உருவாக்கினர். 

இதில் வித்தியாசமான உடல் பருமன் கொண்ட சுமார் 4000 பேர் கலந்துகொண்டனர். இதில்தான் அந்த அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்தது, அதிக உடல் பருமன் உள்ளவர்களின் ஆயுட்காலம் சாதாரணஆயுட்காலத்தினைவிட எட்டு ஆண்டுகள் பின்தங்கியிருந்ததுதான் அது. அதாவது அதிக உடல் பருமனுடன் இருந்தால் குறித்த காலத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாம் இறக்க நேரிடும். ஒருவரின் சராசரி உடல் எடை அடர்த்தி 18.5 முதல் 25 வரை இருந்தால் அவரின் உடல் நல்ல ஆரோக்கியமுடன் இருப்பதாக அர்த்தம். ஆனால், இதைவிட அதிக எடை கொண்டவர்களுக்கான ஆயுட்கால இழப்பு, சரியான உடல் எடையுடன் இருப்பவர்களைக் காட்டிலும் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகமாக இழக்கப்படும். 

வயதிற்கு தகுந்தாற்போல் உடலின் உயரம் மற்றும் எடை சரியாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு. இன்னும் தெளிவாகக் கூறினால் இளம்வயதில் நம்உடல் எடையில் கவனம் செலுத்தாவிட்டால், வயதாகும்போது அதன் பாதிப்புகள் பயங்கரமாக இருக்கும். அத்துடன் இப்படி உடல் பருமன் அளவுக்கதிகமாக இருப்பது, புகைப்பிடிக்கும் பழக்கத்தினைவிடக் கொடியதுஎன்பதை மறவாதீர்கள்.

No comments:

Post a Comment