Tuesday, September 8, 2015

சாம்பிராணி போடுவது ஏன்?;

சாம்பிராணி என்பது ஒரு மரப்பிசின் ஆகும்.அனைத்து மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் அனைத்துசடங்களிலும் மற்றும் வழிபாடுகளிலும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.
சாம்பிராணி போடுவது , ஹோமங்கள் செய்வது போன்றவை நம் சுற்று சூழலில் உள்ள அசுத்தத்தை நீக்கி 
நமக்கு ஒரு நேர்மறையான(positive) சக்தி அளிப்பதற்கே.
போபாலில் அக்னிஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.
தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் சாம்பிராணி தூபம் போடுவர்.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,மங்கல நாட்களான செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் மாலைவேளையில்,குளித்துவிட்டு தெய்வபடங்களுக்கு விளக்கேற்றி வைத்து,சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள்,தரித்திரம் அகலும்.லெஷ்மி கடாட்சம் கிடைக்கும்.செல்வம் பெருகும்.

No comments:

Post a Comment