Tuesday, September 2, 2014

மதுரை மீனாச்சி

தமிழகத்தின்
இரண்டாவது பெரிய
நகரமான மதுரை தென்னக
ரயில்வேயின் சென்னை-
கன்னியாகுமரி தடத்தில்
சென்னையிலிருந்து 496
கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறது. தொழில், சுற்றுலா,
கல்வி, கலாச்சாரம் என்று தமிழின்
அனைத்துத் துறைகளிலும்
கால்பதித்து வெற்றி கண்டிருக்கும் இந்த
மதுரை, சுற்றுலா செல்வோருக்கு மிகவும்
உகந்ததாக இருக்கும்.
மதுரை மண்ணை மணக்கச் செய்யும்
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆரம்பித்து,
திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை,
அழகர்கோயில், திருமலை நாயக்கர்
அரண்மனை, வைகை அணை என்று நகரைச்
சுற்றிலும் இயற்கை வளம், ஆன்மீகம்
கொழிக்கும். அதனை விடுத்து மதுரையிலிருந்து
கொடைக்கானல், பழநி, இராமநாதபுரம்,
தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மற்ற
சிறப்புகள் வாய்ந்த இடங்களுக்கும்
போக்குவரத்து வசதிகள் மிகுந்துள்ளது. 24
மணிநேர போக்குவரத்து வசதிகள்
இங்கு உண்டு. தென்னக ரயில்வேயில்
மதுரை ஒரு மிகமுக்கிய சந்திப்பாகும்.
ரயில்வே பயண நேரத்திற்கு
www.southernrailway.org என்ற
தளத்தை நாடவும்.
இந்தியர்கள் அனைவருமே மதுரையை
மீனாட்சி யுடன்
இணைத்தே பார்த்து வருகின்றனர்.
வெளிநாட்டவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
மதுரைக்கு வருவோரது பயணம்
மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகாமல்
நிறைவு பெறுவதில்லை என்பது எனது எண்ணம்.
அன்னை மீனாட்சியின் புகழ் எங்கெங்கும்
பரவிக்கிடப்பதை இதனால்
புரிந்து கொள்ளலாம். இதனை அறியாதவர்
யாவரும் உண்டோ ? சாதாரண
கிராமத்து பெண்மணி கூட, மதுரை மீனாட்சி,
காஞ்சி காமாட்சி,
காசி விசாலாட்சி என்று அவளை அறியாமல்
கூறினாலும், அவளது மனதில்
எவ்வளவு ஆழத்தில்
அன்னை மீனாட்சி பதிந்து இருக்கிறாள்
என்று அறிவது சிறப்பு.

No comments:

Post a Comment