Saturday, September 6, 2014

அகத்தியர்

வணக்கம்

அகத்தியர் வர்ம சூத்திரம்
வேறெந்த தற்காப்புக்
கலைகளிலோ மருத்துவ
உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள்
வர்மத்தில் உண்டு , இங்கே சில
உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக்
காட்ட விரும்புகிறேன்

ஒளிவு, பூட்டு,
பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும்
தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல்
வேறெந்தத் தற்காப்புக் கலையிலும்
இல்லை.
வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும்
ரத்தத்தை எந்தக் கட்டும்
போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால்
கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும். ஜன்னி ,
வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித
மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின்
தடவுமுறைகளால் உடனடியாகச்
சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத்
தலைவலி என்னும் கொடிய
நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம
அடங்கல் கொண்டு நாலைந்து
நிமிடங்களில்
ஓட்டிவிடலாம்.நட்போடு கைகுலுக்குவது
போலவோ , பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ
நடித்துக்
கொண்டு பகையாளியைப்
பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம்
அறிந்தவனுக்கு முடியும்.
மயங்கி வீழ்ந்தவனையும்,
அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும்
வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப்
பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.
வர்மத்தின் அளவுகோல்கள்
பஞ்சபூதம் ,முக்குற்றம் ,நாடி நிலை ,
விரலளவு ,கைபாகம் ,செய்பாகம்,
மூலிகைமருந்து
இதில் கைபாகம் செய்பாகம்
என்பது முக்கியமானவை
செய்பகம் அறிய வேணும்
புனிதமுடன்
கைப்பாகம் தலங்கள்
வேணும்
ஓம் என்ற மாத்திரையும் விபரம்
வேணும்
உத்தமனே பாதைகள்
ஓர்மை வேணும்
-
வர்ம சூட்சா சூட்சம்
வர்ம தளம் என்பது வர்மத்தின்
புள்ளிகளை குறிக்கும் .மாத்திரை என்பது
அவ்விடத்தில் கொடுக்க வேண்டிய
அழுத்தத்தின்
அளவுகளை குறிக்கும்.கைபாகம்
என்பது விரல்,விரல்கள் பாதிக்கும்
முறை அதாவது குத்தும் முறை என்றும்
சொல்லலாம் செய்பாகம்
என்பது மூன்றையும் செயல் படுத்தும்
முறையாகும்
வர்மத்தின் அடங்கல்கள்
இந்த அடங்கல்கள் பொதுவாக
யாரும் வெளியிடுவதில் தயக்கம்
காட்டுகின்றனர் ஏன் என்றால் இதில்
தாக்கி விட்டால் அந்த
பகுதி செயல் இழந்து விடும் இந்த
அடங்கல்கள் மொத்தம் 16
உள்ளன அவைகளில் அகத்தியர் வர்ம
சூத்திரத்தின் படி முக்கியமான
மூன்று அடங்கல் உள்ளன மேல்
அடங்கல் ,நடு அடங்கல்,கீழ் அடங்கல்
இவை பொதுவானவை
இந்த மூன்றை வைத்து தலை வலி ,(பேக்
பெயின்)முதுகு வலி ,அடிபட்டு ரத்தம்
வருவதை நிறுத்தலாம்
இங்கு தொடர்ந்து ஐந்து நிமிடம்
பிடித்தால் வலி குணமாகி விடும்
அவை படங்களுடன்
மேலே கொடுத்துள்ளேன். இதை
தவறாக பயன்படுத்தவேண்டாம்

பார்ப்போம்

No comments:

Post a Comment