Wednesday, November 13, 2024

சனி நீராடு என்றால் என்ன? ஏன் செய்ய வேண்டும்?

 



சனி நீராடு என்றால் என்ன? ஏன் செய்ய வேண்டும்?

நம் உடலின் வெப்பநிலை ஒரே சீராக இருக்க வேண்டும்…

நம் காலசூழ்நிலையாலும், நாம் உட்கொள்ளும் உண்வு முறைகளாலும், வேலை தன்மையாலும் நம் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். சமநிலை அற்று இருக்கும்.

அதனால் தலைவலி சளி உடல் அசதி வலி நீர்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும்.

இதை தவிர்க்கவும், நம் தோலில் உள்ள வெப்பநிலையை போக்கும் துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கவும்,,,

வாரத்தில் ஒரு நாள்..

சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணை கொண்டு உடல் முழுவதும் பூசி ஒரு மணிநேரம் ஊரவைத்து…

பின்னர் வீட்டில் தயாரித்த சீவக்காயை வடி கஞ்சியில் கலந்து தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்தால்…

உடல் சூடு குறைந்து சமநிலை ஏற்படும். தலையும் சுத்தமாகும், தோலும் பளபளப்பாகும்.

பெண்கள் வெள்ளி கிழமையும், ஆண்கள் சனிக்கிழமையும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்தது.

எண்ணை தேய்த்து குளிக்கும் நாள் அன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் மற்றும் தம்பதிகள் சம்போகம்/ தாம்பத்தியம் தவிர்ப்பது நல்லது.

எங்க கிளம்பிட்டீங்க? சனி நீராடுக்கா?/ எண்ணை தேய்ச்சி குளிக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி



No comments:

Post a Comment