Friday, November 15, 2024

விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவதும் ஆசிரியர் மாணவனை தலையில் குட்டுவதும் ஏன்?

 


விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவதும் ஆசிரியர் மாணவனை தலையில் குட்டுவதும் ஏன்?

ஆன்மீகமா? தண்டனையா? மூட நம்பிக்கையா?

மருத்துவமே என்றால் ஆச்சரியமா இருக்கா? ஆனால் அதுதான் உண்மை.

நாம் தலையில் குட்டிக்கொள்ளும் முன் நெற்றியின் மேல் இருபுறமும் TEMPLER LOBE.உள்ளது. இந்த இடத்தில்தான் நம் ஞாபக சக்தியை தூண்டும் நாடிகள்/ நரம்புகள் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் மெதுவாக குட்டிக்கொள்வதால் இந்த நாடிகள்/ நரம்புகள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. ஞாபக சக்தி மீட்கப்படுகிறது.

நெற்றிப்பொட்டில் நாம் குட்டிக்கொள்ளும்போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாக திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல் முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.

இதனை மனதில் கொண்டுதான் ஆசிரியர்கள் மாணவர்களை முன் நெற்றியில் குட்டி தண்டிப்பது போல் ஞாபக சக்தியை தூண்டிவிட்டு புத்திசாலியாக்கினார்கள்.

மற்றவர்கள் விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போட்டு ஞாபக சக்தியை பெருக்கி கொண்டார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment