புது வீடு கிரகபிரவேசத்தின் போது கோ பூஜை
செய்வது மூடநம்பிக்கையா?
நாம் புது வீடு
கட்டி பால் காய்ச்சி குடிபுகும்நாள்…
பசுவையும் இளம்
கன்றையும் வீட்டு வாசலில் உலக்கையை –போட்டு தாண்டி வீட்டிற்குள் அழைத்து வந்து பூஜை
செய்து வழிபட்டு ஆசீர்வாதம் வாங்குவோம் இது ஏன் என்று தெரியுமா?
எல்லாரும் செய்யறாங்க..
நாங்களும் செய்தோம்….
ஆனால் பெரும்பாலானோர்க்கு… இதுக்கு விளக்கமும் தெரியாது காரணமும் தெரியாது..
அதனால்தான் திருட்டு
திராவிட படிச்ச கூமுட்டை பகுத்தறிவு நடுநிலைகள் இதை எல்லாம் மூடநம்பிக்கை என்று கேலி
செய்து பரிகசிக்கிறது..
செய்வதை ஏன் செய்கிறோம்
என்று தெரிந்து செய்வோம்…
பசுவுக்கு துஷ்ட
சக்திகள் அமானுஷ்ய சக்திகள் எதிர்மறை ஆற்றல் உள்ள இடத்தை அறியும் சக்தி உண்டு..
அதனால் அந்த பசுவை
தன் கன்றுடன் வீட்டுக்குள் அழைத்து வருவார்கள். அந்த பசு கன்றுடன் எந்தவித எதிர்ப்பும்
இல்லாமல் வீட்டின் அனைத்து அறைகளையும் சுற்றிவந்து அமைதியாக இருந்துவிட்டால்…..
அந்த வீட்டில்
எந்தவித துஷ்டசக்திகளும் எதிர்மறை ஆற்றலும் இல்லை. மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம்
என்று உணர்ந்துகொள்ளலாம். அப்படி இல்லாமல்…
அந்த வீட்டு வாசப்படியை
தாண்டி வீட்டின் உள்ளே வராமல் முரண்டு பிடித்தாலோ பயந்து கத்தினாலோ அல்லது தன் கன்றை
அழைத்து வராமல் திரும்பி சென்று விட்டாலோ…
அந்த வீட்டில்
ஏதோ தவறாக உள்ளது துஷ்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்றும். மனிதர்கள் வசிப்பதற்கு
ஏற்ற இடம் இல்லை என்று உணர்ந்துகொள்ளலாம்.
அதற்காகதான் எளிமையான
செலவில்லாத இந்த சடங்கு.
அன்று எல்லார்
வீட்டிலும் பசுமாடு இருக்கும் சுலபமாக இந்த பழக்கத்தை கடைபிடித்தார்கள்.
இன்று நகரத்தில்
பசுமாடு இல்லை வளர்க்க கூடாது.
அதனால்தான் நாம்
வசிக்கும் வீடு எதிர்மறை ஆற்றல் உள்ளதா? துஷ்ட சக்தி உள்ளதா என்று அறியாமல்…
பகுத்தறிவு பேசி….
எதையும் பார்க்காமல்
வீட்டுக்கு குடி வந்து எப்பொழுதும் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையை சந்தித்துகொண்டு
இருக்கிறோம். .
நம் முன்னோர்கள்
ஒன்றும் முட்டாள்கள் அல்ல…
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் அனைத்தும் நம் நன்மைக்கே..
இங்கு எதுவும்
மூடநம்பிக்கை கிடையாது.
புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.
புரியாதவர்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment