Wednesday, November 13, 2024

மொட்டை போடுவது ஏன்? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

மொட்டை போடுவது ஏன்? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

இரண்டும் இல்லை… நம் ஆரோக்கியத்துக்குதான்…

சிறு வயதில் குழந்தைகளுக்கு/ சில பெரியவர்களுக்கும்தான் தலையில் ஈறு பேன் பொடுகு தொல்லை அதிகம் இருக்கும்.

காரணம் தலையை நன்கு அலசி சுத்தமாக பராமரிக்க முடியாது தெரியாது.

அதனால் ஏதாவது ஒரு கடவுள் பெயரைச்சொல்லி மொட்டை போட்டுவிட்டால்..

தலை சுத்தமாகிவிடும் பேன் ஈறு பொடுகு தொல்லை இருக்காது.. முடியும் நன்கு வளரும்.

இப்ப புரியுதா மொட்டை இரகசியம்.

சரி அதை ஏன் கடவுள் பெயரைச்சொல்லி கோயிலில் போடவேண்டும்?

வீட்டிலோ அல்லது கடையிலோ போடலாமே?

மொட்டை போடுவதாக ஏதாவது ஒரு சாமிக்கு…

பரிட்சையில் வெற்றி பெற வேண்டும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அல்லது நோய் குணமாக வேண்டும் இப்படி ஏதாவது ஒரு குறிக்கோள் வேண்டுதல் இருக்கும்…

அப்படி வேண்டும் பொழுது அந்த குறிக்கோளையே நினைத்துகொண்டு இருப்பதால்…

மனது அலைபாயாமல் ஒருநிலைப்பட்டு மூளையை நன்கு செயல்பட வைத்து…

நம் உடலில் நேர்மறை ஆற்றல் உருவாக்கி நோயை குணப்படுத்தும், பரிட்சையிலும் கவனமாக இருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள், குறிக்கோளை அடைந்துவிடுவார்கள்.

அதனால்தான் தெய்வத்திடம் வேண்டுதல் வைத்து கோயில் சென்று சுற்றத்துடன் நட்புடன் சென்று முடி காணிக்கை செலுத்த படுகிறது.

அது குடும்ப மொத்தத்திற்கும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இது வீட்டில் போடும் மொட்டைக்கோ அல்லது கடையில் போடும் மொட்டைக்கோ கிடைக்காது… 

எங்க கிளம்பிட்டீங்க? திருப்பதிக்கா? பழனிக்கா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி



 

No comments:

Post a Comment