Saturday, November 16, 2024

அமுக்குவான் பேய் உண்மையா? நம்மை கொன்றுவிடுமா?

 


அமுக்குவான் பேய் உண்மையா? நம்மை கொன்றுவிடுமா?

இரவு நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அமுக்குவது போல் இருக்கும். உங்களால் கண்னை திறக்க முடியாது.

கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது.. சரி திரும்பி படுக்கலாம் என்று நினைத்தாலும் முடியாது.

ஒரு நிமிடம் கழித்துதான் உங்களுக்கு விழிப்பு வரும் எதுவும் செய்ய முடியும்.

எழுந்து பார்த்தால் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். என்னடா என்று திகைப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுகிறது.

உயிரைக்கொல்லும் அளவு கொடூரமாக பேய் இல்லை என்றாலும் இதுவும் ஒரு முக்கியமான பேயாக நினைத்து பயப்படுகிறார்கள்.

உண்மையில் இது தூக்க பக்கவாதம் என்கிற சிறு கோளாறால் வருவது.

சில நேரம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும், உங்கள் உடல் தூங்கிக்கொண்டே இருக்கும்.

அதனால்தான் உங்களால் எழவோ, கண்ணை திறக்கவோ பேசவோ இயலாது.

இந்த கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் வருவது..

இந்த தனிமை தூக்க பக்கவாதம் எப்போதாவது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக வந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. தானாகவே சரியாகிவிடும்/

அடிக்கடி ஏற்படும் தூக்க பக்கவாதம் அரைமணி நேரமாக நீடித்தால் உடன் மருத்துவரை அணுகவும், மந்திரவாதியிடம் இல்லை.

ஏன்றென்றும் அன்புடன்

சுந்தர்ஜி

மரபுவழி தமிழ் மருத்துவர்


No comments:

Post a Comment