Monday, November 25, 2024

35. கோயில் வலம் வருதல் ஆன்மீகமா? வேண்டுதலா? மூடநம்பிக்கையா? ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்கு பிரஷர் செருப்பு வாங்கி நடப்பதைவிட…, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்குபிரஷர் பயிற்சி உபகரனங்களை வாங்கி பயிற்சி செய்வதைவிட…, டோக்கன் வாங்கி பிசியோ தெரபிஸ்டுகளை பார்க்க காத்திருப்பதைவிட…, எளிய காஸ்ட் எபெக்ட்டிவ் பிராஸஸ் அதாவது செலவில்லாத 100 சதவீத பலன் கொடுக்கும் அதிசயம் கோயிலைச்சுற்றி கருங்கல் தரையில் நடப்பது. .கோவிலை 48 சுற்று 108 சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு சுற்றிவிட்டு வந்து உடலும் மனமும் உற்சாகமாக சுறுசுறுப்பாக இருப்பதாக வியப்பார்கள். அந்த பலனை இ|றைவனுக்கு அட்ரிப்யூட் சமர்ப்பணம் செய்வார்கள். காரணம் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோயில்கல் இருக்கும் இடம் காந்த புலன் உள்ள இடம். அலைபாயும் மனதை சஞ்சலப்படும் மனதை சாந்தபடுத்தி ஒருநிலைப்படுத்தும் திறன் அந்த காந்தபுலனுக்கு உள்ளது. அடுத்து அந்த கருங்கல் கொத்திப்போட்டு சொறசொறப்பாக கரடு முரடாக இருக்கும். நம் உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் வந்து முடியும் இடம் நமது காலில்தான். அந்த பாதத்தில் அந்த கொத்திபோட்ட கருங்கல் அழுத்தி படும்போது அனைத்து நரம்புகளும் தூண்டப்பட்டு செயல்படாத நரம்புகளும் நன்கு செயல்படத்தொடங்கும். கோயிலில் அங்கபிரதட்சணம் செய்வதும் இதே காரணத்துக்குதான். உடலில் ஏற்பட்ட ஏற்படும் சுலுக்கு பிடிப்பு ரத்தகட்டு வீக்கம் உடல்வலி நரம்பு பிடிப்பு வாயு தொல்லை போன்ற உபாதைகள் அங்கபிரதட்சணம் செய்பவர்களுக்கு வராது இருந்தால் நீங்கிவிடும். மனதை ஒருநிலைப்படுத்தவும் நம் எண்ணங்களை மனதை குவித்து நமது குறிக்கோளை அதாவது நோய், வெற்றி, இலட்சியம் பிரச்சனை போன்றவற்றை வேண்டுதலாக நினைத்து செய்யும் போது பிரபஞ்ச ஆகர்ஷண சக்தி செயல்பட்டு நிறைவேற்றி வைக்கும். மலைகளில் கோயில் அமைத்தற்கும் (மூட்டுவலி நீங்க) பிரகாரத்தை கருங்கல் கொண்டு கொத்தி போட்டு அமைத்தற்கும் காரணம் நம் ஆரோக்கியத்திற்கே என்பதை அறிக. வாரம் ஒரு முறை மலையில் அமைந்த கோயிலுக்கு நடந்து சென்று வாருங்கள். உடலும் மனமும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நம் ஆரோக்கியத்துக்குதான் கோயிலே தவிர மூட நம்பிக்கைகளுக்கு இல்லை. தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே… புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள். புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள். தமிழன் திமிரானவன் சுந்தர்ஜி

 


 

கோயில் வலம் வருதல் ஆன்மீகமா? வேண்டுதலா? மூடநம்பிக்கையா?

 

ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்கு பிரஷர் செருப்பு வாங்கி நடப்பதைவிட…,

சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்குபிரஷர் பயிற்சி உபகரனங்களை வாங்கி பயிற்சி செய்வதைவிட…,

டோக்கன் வாங்கி பிசியோ தெரபிஸ்டுகளை பார்க்க காத்திருப்பதைவிட…,

எளிய காஸ்ட் எபெக்ட்டிவ் பிராஸஸ் அதாவது செலவில்லாத 100 சதவீத பலன் கொடுக்கும் அதிசயம் கோயிலைச்சுற்றி கருங்கல் தரையில் நடப்பது.

.கோவிலை 48 சுற்று 108 சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு சுற்றிவிட்டு வந்து உடலும் மனமும் உற்சாகமாக சுறுசுறுப்பாக இருப்பதாக வியப்பார்கள்.

அந்த பலனை இ|றைவனுக்கு அட்ரிப்யூட் சமர்ப்பணம் செய்வார்கள்.

காரணம் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோயில்கல் இருக்கும் இடம் காந்த புலன் உள்ள இடம்.

அலைபாயும் மனதை சஞ்சலப்படும் மனதை சாந்தபடுத்தி ஒருநிலைப்படுத்தும் திறன் அந்த காந்தபுலனுக்கு உள்ளது.

அடுத்து அந்த கருங்கல் கொத்திப்போட்டு சொறசொறப்பாக கரடு முரடாக இருக்கும். நம் உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் வந்து முடியும் இடம் நமது காலில்தான்.

அந்த பாதத்தில் அந்த கொத்திபோட்ட கருங்கல் அழுத்தி படும்போது அனைத்து நரம்புகளும் தூண்டப்பட்டு செயல்படாத நரம்புகளும் நன்கு செயல்படத்தொடங்கும்.

கோயிலில் அங்கபிரதட்சணம் செய்வதும் இதே காரணத்துக்குதான். உடலில் ஏற்பட்ட ஏற்படும் சுலுக்கு பிடிப்பு ரத்தகட்டு வீக்கம் உடல்வலி நரம்பு பிடிப்பு வாயு தொல்லை போன்ற உபாதைகள் அங்கபிரதட்சணம் செய்பவர்களுக்கு வராது இருந்தால் நீங்கிவிடும்.  

மனதை ஒருநிலைப்படுத்தவும் நம் எண்ணங்களை மனதை குவித்து நமது குறிக்கோளை அதாவது நோய், வெற்றி, இலட்சியம் பிரச்சனை போன்றவற்றை வேண்டுதலாக நினைத்து செய்யும் போது பிரபஞ்ச ஆகர்ஷண சக்தி செயல்பட்டு நிறைவேற்றி வைக்கும்.

மலைகளில் கோயில் அமைத்தற்கும் (மூட்டுவலி நீங்க) பிரகாரத்தை கருங்கல் கொண்டு கொத்தி போட்டு அமைத்தற்கும் காரணம் நம் ஆரோக்கியத்திற்கே என்பதை அறிக.

வாரம் ஒரு முறை மலையில் அமைந்த கோயிலுக்கு நடந்து சென்று வாருங்கள். உடலும் மனமும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நம் ஆரோக்கியத்துக்குதான் கோயிலே தவிர மூட நம்பிக்கைகளுக்கு இல்லை.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment