திருவளர்ச்செல்வன்
- திருநிறைச்செல்வி…. என்று கல்யாண பத்திரிக்கையில்
போடுவதன் அர்த்தம் என்ன? ஏன் ?
திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால்
#திருவளர்ச்செல்வன்/#செல்வி என்றால்…
அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.
#திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய/ கடைசி மகன்/மகளின் திருமணமாகும்.
திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.
எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள்
நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.
திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன,
இத்திருமணமே இறுதியானதாகும்,
இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
பழந்தமிழர் மரபு
பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment