Wednesday, December 10, 2014

10-12-2014 Thakshasila World First University

உங்களுக்கு தெரியுமா உலகின் முதல்
பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள்
இந்தியர்கள் என்று?; தக்சசீலா உலகின்
முதல் பல்கலைக்கழகம்; Thakshasila
World First University

அனைவருக்கும் வணக்கம்..,
ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம்,
அறிவு ஆகியவற்றை கொடுப்பதுதான் கல்வி! அந்த
கல்வியின் மூலம் பெற்ற அறிவை கொண்டே எந்தவித
மந்திர சக்தியின் உதவியும் இன்றி இப்புவியில்
தனக்கு தேவையானவற்றை,
தானே தயாரித்துக்கொள்ளும்
வல்லமையை மனிதனால் பெற முடிந்தது! அந்த
வல்லமையை அவன் கற்கும்
அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றிட
முடியாது., அதையும் தாண்டி கற்கும் உயர்
கல்வியிடமிருந்து மட்டுமே அவனால் பெற இயலும்!
அத்தகைய உயர் கல்வியை உலககெங்கும் உள்ள
மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவை தான்
பல்கலைக்கழகங்கள்! இத்தகைய சிறப்பு மிக்க
பல்கலைக்கழகங்கள் என்ற அமைப்பை உலகில் முதன்
முதலில் நிறுவியவர்கள் இந்தியர்கள் என்பது நம்மில்
எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே!

தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப்
மாநிலத்திலுள்ள ராவல்பிண்டி மாவட்டத்தில்,
தலைநகரான
இஸ்லாமாபாத்திலிருந்து வடமேற்கு திசையில் 32
கி.மீ தொலைவில் அமைந்துள்ள நகரம்
தக்சசீலா (Thakshasila)
இது தற்போது டேக்ஸிலா (Taxila)
என்று அழைக்கப்படுகிறது! இந்த மண்ணில்தான்
உலகின் முதல் பல்கலைக்கழகமான தக்சசீலா (University of
Thakshasila, 700 BCE – 500 AD)
கிட்டத்தட்ட 2700 (700 BCE)
ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது!

என்னாது 2700 வருசமா என்று நீங்கள் வியப்பது என்
மனக்கண்ணில் தெரிகிறது! இது பற்றி மேலும்
தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த
பல்கலைகழகத்திற்க்கான பெயர் காரணம்
பெற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

இதற்க்காக நாம் வேதகாலத்தை (Vedic Period)
நோக்கி பயணிப்பது அவசியமாகிறது! அக்காலத்தில்
மிகவும் புகழ் பெற்று விளங்கிய அரசுகளுள்
ஒன்று காந்தாரா (Gandhara Kingdom)!
இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும்
ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதிகள்
சிலவற்றை உள்ளடக்கியது! இங்குதான் உலகில்
மிகவும் புகழ் பெற்ற கலைகளுள் ஒன்றாகக்
கருதப்படும் காந்தாரக்கலை பிறந்தது!

இந்த
காந்தாரா நாட்டிற்கும் (Gandhara Kingdom)
இந்துக்களின் புனித இதிகாசங்களான இராமாயணம்
(Ramayana)
மற்றும் மகாபாரதத்திற்கும் (Mahabharata)
நெருங்கிய தொடர்பு உண்டு!
இராமாயணத்தில் வரும் ராமனின் (Raghava Ram)
தம்பியான பரதன் (Bharata) பற்றி நாம் அனைவரும்
அறிவோம்! வனவாசம் முடிந்து ராமன்
நாடு திரும்பினால் தனக்கென ஆட்சி செய்ய
ஒரு தனி நாடு வேண்டும் என்று கருதிய பரதன்
காந்தர்வர்களை தாக்கித் தோற்கடித்து அந்த இடத்தில்
தனக்கென ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தினான். அரசின்
தலைநகருக்கு தனது மூத்த மகன் தக்சனின் (Thaksha)
நினைவாக தக்சசீலா (Thakshasila) என்று பெயரிட்டான்!

இந்த நகரம் தான் தற்போது டேக்சிலா (Taxila) என்ற
பெயரில் அழைக்கப்படுகிறது! பரதனின்
இன்னொரு மகனான புஷ்கலாவதியின் (Pushkalavati)
நினைவாக உருவாக்கப்பட்ட நகரம்
புருஷபுரா (Purushapura), இந்த நகரம் தான்
தற்போது பெஷாவர் என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
தக்சசீலா என்ற ஊரில் துவங்கப்பட்டதன்
காரணமாகவே பல்கலைகழகத்திற்கு தக்சசீலா என்று
பெயர் வந்தது!
2700
ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பல்கலைகழகத்தில்
10,500
க்கும் மேற்பட்ட மாணவர்கள்
கல்வி பயின்றிருக்கிறார்கள் என்றால் அந்த
பல்கலைக்கழகம் எத்தனை பிரம்மாண்டமாய்
இருந்திருக்க வேண்டும்
இல்லையா நண்பர்களே அது தான் தக்சசீலா! 

இங்கு....
வேதம், அறிவியல், கணிதம், மருத்துவம், மதம்,
அரசியல், வானியல், இசை, ஜோதிடம், இலக்கணம்,
விவசாயம், ஆயுர்வேதம், சட்டம், வில்வித்தை,
போர்த்தந்திரம், வேட்டையாடுதல், மறைந்திருக்கும்
புதையலை கண்டுபிடித்தல் உள்ளிட்ட 65-க்கும்
மேற்பட்ட துறைகளில்
உயர்கல்வி போதிக்கப்பட்டிருக்கிறது என்றால்
அப்போதே நாம் கல்வி கற்ப்பித்தலில் எத்தகைய
அசாதாரண வளர்ச்சியை பெற்றிருந்திருக்கிறோம்
என்று நீங்களே யூகித்துக்கொள்ளலாம்!
அந்தக்காலத்திலேயே பாபிலோனியா, கிரீஸ்,
அரேபியா, சீனா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட
நாடுகளிலிருந்து மாணவர்கள்
வருகை புரிந்து இங்கு கல்வி பயின்றிருக்கிறார்கள்
என்றால் இந்த பல்கலைகழகத்தின் புகழ் எவ்வளவு தூரம்
பயணித்திருக்கிறது என்று நீங்களே கற்பனை செய்து
பார்த்துக்கொள்ளுங்கள்!

தக்சசீலா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை.., மதம்,
நாடு, மொழி என்ற எந்தவித பேதமுமின்றி முழுக்க
முழுக்க திறமை அடிப்படையில் தான்
அமைந்திருந்தது! மன்னரின்
வாரிசு என்பதற்காகவோ அல்லது பெரும்
செல்வந்தரின் வாரிசு என்பதற்காகவோ எவரும்
சேர்த்துக் கொள்ளப்படவில்லை! இங்கு கல்வி பயில
விரும்பும் மாணவரது குறைந்த பட்ச வயது 16 ஆக
நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது!
அதோடு அடிப்படை கல்வியில்
தேர்ச்சியடைந்து விட்டதாக
தனது ஆசிரியரிடமிருந்து உறுதிப்பத்திரம்
பெற்றுவரவும் வலியுறுத்தப்பட்டிருந்தது!
முறைகேடுகளை தவிர்க்கும்
பொருட்டு அந்தக்காலத்திலேயே இங்கு
நுழைவுத்தேர்வு முறை பின்பற்றப்பட்டது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள் அப்போதே நம்மவர்கள்
எவ்வளவு உசாராக இருந்திருக்கிறார்கள் என்று!

நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெரும்
மாணவர்கள் மட்டுமே இங்கு கல்வி பயில
அனுமதிக்கப்பட்டார்கள்!

நுழைவுத்தேர்வு எழுபவர்களில் வெறும்
பத்து சதவீதம் பேர்தான் தேர்ச்சி பெற்றார்கள் என்றால்
நுழைவுத்தேர்வு எப்படியிருந்திருக்கும்
என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்!
இங்கு கல்வி பயிலும்
மாணவர்களுக்கே இத்தனை கடுமையான
சோதனைகள் வைக்கப்பட்டிருந்தால்,
இங்கு கல்வி போதிக்க வரும்
ஆசிரியர்களுக்கு எத்தனை கடுமையான
சோதனைகள் வைக்கப்பட்டிருந்திருக்கும்?
தக்சசீலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக
பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களும் மிகவும்
புகழ்பெற்றவர்களே! 

அவர்களில்
குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் சாணக்கியர் (Chanakya,
350 BCE – 275 BCE)!
இவர் புகழ்பெற்ற
இந்தியப்பேரரசுகளில் ஒன்றான மெளரியப்
பேரரசை (Maurya Empire, 322 BCE – 185 BCE)
தோற்றுவித்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் உலகின்
மிகச்சிறந்த அரசியல் நீதி நூலான
அர்த்தசாஸ்திரத்தை (Arthashastra) எழுதியவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது!

ஒரு நாட்டை ஆள்பவர்கள் எப்படி நடந்துகொள்ள
வேண்டும், அந்த நாட்டிற்கான
வருவாயை பெருக்கும் வழிமுறைகள் என்னென்ன,
அண்டை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்
போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய
விஷயங்கள் என்னென்ன,
அண்டை நாடுகளை கைப்பற்றுவதற்கான போர் தந்திர
முறைகள், சட்டம், வெளியுறவுக் கொள்கைகள்
போன்றவற்றை பற்றி உலகிலேயே முதன் முதலாக
தெளிவான விளக்கங்களோடு எழுதப்பட்ட தன்னிகரற்ற
நூலாக அர்த்தசாஸ்திரம் கருதப்படுகிறது!

நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளும்
போது கவனத்தில் கொள்ளப் வேண்டிய முக்கிய
விஷயங்கள் பற்றி இவர் வகுத்த கொள்கைகளில் பல
இன்றளவும் உலகம் முழுவதிலும் நடைமுறையில்
உள்ளது என்றால் அர்த்தசாஸ்திரத்தின் மகத்துவம்
எத்தகையது என்று நாம் உணர்ந்துகொள்ளலாம்!
இங்கு பேராசிரியராக பணியாற்றியவர்களில்
மற்றொரு புகழ் மிக்க பேராசிரியர்களில் ஒருவர்
பாணினி (Panini, 600 BCE – 500 BCE approx) இவர்
புகழ்பெற்ற சம்ஸ்கிருத இலக்கண நூலான
அஸ்டாத்தியாயியை (Ashtadhyayi) எழுதியவர்
என்பது குறிப்பிடத்தக்கது!

இலக்கணத்திற்காக
எழுதப்பட்ட நூல்களில் உலகின் எந்த மூலையிலும்
இதுவரை அஸ்டாத்தியாயிக்கு இணையாக
ஒரு நூலும் எழுதப்படவில்லை என்பது இந்த்
நூலிற்கு இருக்கும் பெருமையாகும்!
எட்டே எட்டு அத்தியாயங்களை கொண்டுள்ள இந்த
நூல் சமஸ்கிருதத்திற்கான இலக்கண
விதிகளை மிகத்தெளிவாகவும்
மிகத்துல்லியமாகவும் விளக்குகிறது!
சொற்கள் உருவாக்கத்தின்
அடிப்படை விதிகளை விளக்கும் இந்நூல்
எழுத்துக்களை எப்படி பயன்படுத்துவது,
பயன்படுத்தும் இடத்திற்கேற்ப சொல்லின் அர்த்தம்
எப்படி மாறுபடுகிறது என்பது பற்றியும்
தெளிவாக விளக்குகிறது! சுருக்கமாக
கூறவேண்டும் என்றால் தமிழில் , , என்ற
எழுத்துக்களை பயன்படுத்தும் போது ஏற்படும்
பொருள் வித்தியாசத்தை உதாரணமாக கூறலாம்!
இதைப்போல அஸ்டாத்தியாயி 3959 இலக்கண
விதிகளை உள்ளடக்கியிருக்கிறது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்! 

இந்நூலை முழுமையாக
படிப்பது இப்போது வரை மிகக்கடினமான
பணியாகவே கருதப்படுகிறது!

இந்நூலை கற்றுக்கொள்வதே கடினமான
பணி என்றால் இந்நூலை எழுதியவர் எத்தகைய
அறிவுடையவராக இருந்திருக்கவேண்டும்!

தக்சசீலா பல்கலைக்கழகத்தில் படித்து வெளிவந்த
மாணவர்கள் எவரும் சோடைபோய்விடவில்லை!

அனைத்து மாணவர்களும் மிகவும் புகழ்
பெற்றே விளங்கியிருக்கிறார்கள்!
உதாரணத்திற்கு விஷ்ணு ஷர்மா (Vishnu Sharma, 300
BCE)!
மற்றும் ஜீவகா (Jivaka, 500 BCE)! ஆகிய
இருவரை எடுத்துக்கொள்வோம்! இதில்
விஷ்ணு ஷர்மா விலங்குகளை கதாப்பாத்திரங்களாக
உருவகப்படுத்தி அரசியல்
நீதிக்கதைகளை குழந்தைகளும் புரிந்துகொள்ளும்
வகையில் எழுதப்பட்ட பஞ்சதந்திரக்
கதையை (Panchatantra) இயற்றிய ஆசிரியர் ஆவர்!

இன்றளவும் இந்த நூல்தான் சிறுவர்களுக்கான
நீதிக்கதைகளை எழுதுவதற்கு அடிப்படையாக
காரணியாக இருக்கிறது என்றால் மிகையில்லை!

மற்றொருவரான ஜீவகா ஒரு மருத்துவர் ஆவர்! 

இவர்
தான் உலகிலேயே முதன் முதலாக
நாடித்துடிப்பைக் கொண்டு ஒரு நோயாளியின்
உடல் நிலையை சோதிக்க முடியும்
என்று கூறியவர்! 

இவர் மகதநாட்டு (Magadha Empire, 684
BCE – 413 BCE)
அரசரான பிம்பிசாரவின் (Bimbisara, 558 BCE
– 491 BCE)
அரண்மனை மருத்துவராக பணியாற்றியவர்
என்பது குறிப்பிடத்தக்கது! அதோடு கெளதம
புத்தரின் (Gautama Buddha, 563 BCE – 483 BCE) தனிப்பட்ட
(Personal Doctor)
மருத்துவராகவும் இருந்தவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது!
ஒவ்வொரு மாணாவனின் புரிந்துகொள்ளுதல்
திறனுக்கு ஏற்ப 5 முதல் 8 ஆண்டுகள்
வரை இங்கு உயர்கல்வி போதிக்கப்பட்டது!

இன்றுள்ளதைப் போல் ஆண்டுதோறும்
தேர்வுமுறைகள் இங்கு கட்டாயம் கிடையாது!
ஒரு மாணவன் எப்போது தேர்ச்சியடைந்துவிட்டான்
என்று அவனது ஆசிரியர்
பரிந்துரைகிறாரோ அப்போதே அந்த மாணவன்
பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற
அனுமதிக்கப்பட்டது! 

இன்றுள்ளத்தை போல்
பட்டமளிப்பு விழா என்று எதுவும் கிடையாது!
இவர் தேறிவிட்டார் என்று உறுதிமொழி பத்திரம்
ஏதும் வழங்கப்படவில்லை! 

மாணவர் பெற்ற
அறிவு ஒன்றே அவர் பெற்ற கல்விக்கான சான்று!
இருந்தாலும் உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள்
இங்கு கல்வி பயில கடும் போட்டியிட்டனர் என்றால்
மிகையில்லை! 

அதற்க்கு காரணம்
இங்கு பயிற்றுவிக்கப்பட்ட கல்வியின் தரம்!
அன்று உலகையே திரும்பி பார்க்க வைத்த
இதே இந்திய பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம்
இன்று எப்படி இருக்கிறது தெரியுமா நண்பர்களே!

சர்வதேச தரமிக்க பல்கலைக்கழகங்களுக்கான
தரவரிசை பட்டியலில் முதல்
இருநூறு இடங்களுக்குள் கூட
ஒரு இந்தியா பல்கலைக்கழகமும் இல்லை என்பதே!

ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறதல்லவா! ஆனால்
அது தான் உண்மை!...

No comments:

Post a Comment