சீடனுக்குரிய பக்குவம்!
ஆசிரமம் ஒன்றில் சீடர்களுக்குள்ள விதிகள் ரொம்பக் கடுமையானவை. அங்கே யாருக்குமே பேச அனுமதி இல்லை. விதிவிலக்காக பத்து வருடத்திற்கொருமுறை இரு வார்த்தை மட்டுமே பேசலாம்.
இளம் சீடன் ஒருவன் பத்து வருடங்களுக்குப் பின் குருவிடம், படுக்கை... முரடு என்று கூற, அப்படியா! என்ற குரு எழுந்து போய்விட்டார்.
அடுத்த பத்து வருடம் கழித்து அதே சீடன் உணவு சரியில்லை எனக்கூற அப்படியா! என்று எழுந்து போய்விட்டார் குரு.
அடுத்த பத்து வருடம் கழித்து குருவே சீடனிடம் வந்து, ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? எனக் கேட்டார்.
சொல்ல ஒன்றுமில்லை என்றான் சீடன். இனி நீ கற்கவும் ஒன்றுமில்லை என்ற குரு, எப்போது உன்னிடம் இந்தப் பக்குவம் வளர்ந்து விட்டதோ.. இனி கற்பதைவிட, கற்பிப்பதற்கே, நீ தகுதியுடையவன். சென்று வா... என்று கூறி, வழியனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment