மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும்
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் என பிரித்தானிய மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறைவாக உறங்குவோரும், அதிகமாக உறங்குவோரும் உயிராபத்தை எதிர்நோக்கிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆறு மணித்தியாலங்களுக்கு குறைவாக உறங்குவோர் நோய்களினால் பீடிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் உயிரிழக்க நேரிடலாம் எனவும் பிரித்தானிய மற்றும் இத்தாலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நபர் ஒருவர் சராசரியாக ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரையில் உறங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் உறங்குவோரும் இதேபோன்று மரண அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகளவான உறக்கம் நோய்களுக்கான அறிகுறியாகவே கணிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1.5 மில்லியன் மக்களிடம் 16 விதமான ஆய்வுகளின் பின்னர் அந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இறப்பு வீதத்திற்கும் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment