Thursday, December 18, 2014

குளியல் பொடி

நலுங்குமா-மூலிகைக் குளியல்பொடி

இன்று பல்வேறு வகையான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.இவற்றில் சில, அதிகப்படியான எண்ணெய்ப்பசையை நீக்குவதாகவும் இன்னும் சில, வறட்சியை நீக்குவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.ஆனால் இவை எந்த அளவிற்கு உடலுக்கு நன்மை செய்யும் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் சோப்பினால் புற்றுநோய் வருவதாகக் கூட செய்தி அறியமுடிந்தது.ஆனால் இயற்கையாக தோலுக்கு நன்மையை மட்டுமே செய்யக்கூடிய குளியல் பொடியாக நமது பாரம்பரிய ‘நலுங்குமா’ இருப்பது சித்தர்கள் நமக்கு அருளிய கொடையென்றே சொல்லலாம்!

நலுங்குமாவில் சேரும் சரக்குகள்

கிச்சிலிக்கிழங்கு

வெட்டிவேர்

சந்தனம்

கோரைக்கிழங்கு

கார்போகரிசி

விலாமிச்சம்வேர்

பாசிப்பயறு

அனைத்துச் சரக்குகளையும் சம அளவு எடுத்து அரைத்துச் சலித்து காற்றுப் புகாமல் வைத்துக் கொள்ளவும்.

இந்தக் குளியல் பொடியினைப் பயன்படுத்தி தோல்நோய்கள் வராமல் நமது சந்ததியினரைக் காப்போம்!

No comments:

Post a Comment