Wednesday, December 24, 2014

நம் எண்ணங்கள்

Our  Dreams
சபாிமலை


வாழ்க்கையில் ஒரு நல்லது நடந்தால் போதும். அதையடுத்து பல நல்லவைகள் வரிசைகட்டி வந்து, நம்மை வாழ்வாங்கு வாழச் செய்யும். இது நடத்துகிற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிரூபணமாகிக்கொண்டே வருகிறது. வாசகர்களின் நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும்  ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான பூஜை வழிபாட்டு வைபவங்களை நடத்தி வருவதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

அந்த வரிசையில், கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளத்தில், சபரி மலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு, கடந்த சித்திரைப் பிறப்பையொட்டி, சிறப்பு விபூதி அபிஷேகம் செய்து, அதை வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்து மகிழ்ந்தது சக்திவிகடன். இதோ... ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு உகந்த கார்த்திகை மாத வேளையில், உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள், மாலையணிந்து விரதம் அனுஷ்டிக்கும் இந்த தருணத்தில், சபரிகிரிவாசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யத் திட்டமிட்டது உங்கள் சக்திவிகடன்.

''நல்ல விஷயங்களை, உலக நன்மைக் கான சத்காரியங்களை தொடர்ந்து செய்துக் கிட்டே இருக்கணும். அப்பதான் நம்ம தேசம் வளமுடன் இருக்கும். வாசகர்களுக்காகவும் உலக மக்களின் நலனுக்காகவும் சபரிமலையில் செய்கிற இந்த பூஜையில் என்னையும் சக்தி விகடனுடன் இணைத்துக் கொள்ளுங் கள்'' என்று உற்சாகம் பொங்கத் தெரிவித்த சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர், அபிஷேக தேவைக் காக... கெமிக்கல் பயன்படுத்தப்படாத, எந்தக் கலப்படமும் இல்லாத சுத்தமான விபூதியை, தம் தந்தை சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் பெயரில் நடத்திவரும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கினார்.

இந்த முறை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு விபூதி அபிஷேகம் செய்வதுடன், மாளிகைபுரத்து மாதாவுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தையும் சேர்த்து வழங்கலாமே என்று யோசித்தோம்.

''ரொம்ப நல்ல விஷயம். சிருங்கேரி மடத்துக்காக, பெரியவாளின் அனுக்கிரகத்தோடு விபூதி, குங்குமம், மஞ்சள் தயாரிக்கிறோம். இது தெய்வ சங்கல்பம். ஆண்டவன் கட்டளை. மாளிகைபுரத்து அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி, வாசகர்களுக்குக் கிடைக்கிற மஞ்சள், சிருங்கேரி மடத்துக்காக தயார் செய்யப்பட்ட மஞ்சளா இருக்கட்டும்.'' என்று திருநெல்வேலியைச் சேர்ந்த வைரம் மார்க் மஞ்சள், குங்குமம் நிறுவனத்தின் உரிமையாளர் காசி விஸ்வநாதன் மிக நெகிழ்ச்சியுடன் அபிஷேகத்துக்கான மஞ்சளை வழங்கினார்.

வழக்கம்போல், இந்த முறையும் சபரி மலையில் பூஜை ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்'' என்று பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூவிடம் தெரிவிக்க, மனிதர் உற்சாகமாகிவிட்டார். ''ஒரு ஐயப்ப பக்தரா, பாடகரா எத்தனையோ முறை சபரிமலைக்குப் போயிருக்கேன். ஆனா, லட்சக்கணக்கான வாசகர்களுக்காக, உலக நன்மைக்காக இப்படியொரு பூஜையும் அபிஷேகமும் செய்றதுக்காக ஐயப்பனைப் பாக்கப் போறது, என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை'' என்று நெகிழ்ந்தவர், அவரின் நண்பர் நாகசுந்தரத்திடம் தொடர்புகொண்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோரிடம் சக்திவிகடன் நடத்தும் விசேஷ அபிஷேகம் பூஜை குறித்த விவரங்களைத் தெரிவித்தார். நாகசுந்தரம் என்பவர், சிறந்த ஐயப்ப பக்தர். பலவருடங்களாக, மாதந்தோறும் ஐயப்ப ஸ்வாமிக்கு பட்டு வஸ்திரங்களை அனுப்பி வைப்பவர். அவர் அபிஷேக பூஜைக்கு சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு உதவிகளைச் செய்துகொடுத்தார்.

விபூதி மற்றும் மஞ்சளை எடுத்துக் கொண்டு, கடந்த டிசம்பர் 2ஆம் தேதி இரவு, சபரிமலைக்குச் சென்றோம். அற்புதமான தரிசனம். 'காலையில் 6.30 மணிக்கெல்லாம் அபிஷேகம் செய்து விடலாம்’ என்று மேல்சாந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

3ம் தேதி. விடிந்தது. மலையில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள்... பக்தர்கள்... லட்சக்கணக்கான பக்தர்கள்! காவி நிறமும் கறுப்பு நிறமுமாக மலையின் வண்ணமே மாறிவிட்டிருந்தது. எங்கெங்கும் சரண கோஷம். சபரிமலை தேவஸ்தானத்தின் கீழ்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி நம்மை அன்புடன் வரவேற்றார். 'ஓ... விகடனோ. அறியும்அறியும்’ என்று விபூதி, மஞ்சளைத் தொட்டு ஆசீர்வதித்தார். அதையடுத்து மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரியைச் சந்தித்தோம். 'விகடனும் பரிச்சயம். வீரமணிராஜூவும் பரிச்சயம்’என்று சொல்லிவிட்டு, 'பள்ளிக்கட்டு பாடணும். இந்த விபூதியைஇட்டுக் கொள்கிற எல்லாருடைய பாவங்களும் போகணும்’ என்று சொல்லி, வீரமணி ராஜூவைப் பாடச் சொல்ல... தன் மகன் அபிஷேக்குடன் கணீர்க் குரலெடுத்துப் பாடினார் வீரமணி ராஜூ. பாடலின்போது விபூதி, மஞ்சளைத் தொட்டு, கண்கள் மூடி பிரார்த்தித்து, 'ஐயப்பா... ஐயப்பா...’ என்று சொல்லி ஆசீர்வதித்தார் மேல்சாந்தி. தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஜெயன் என்பவரை அழைத்து, அபிஷேகத்துக்கான எல்லா உதவிகளையும் செய்துதரச் சொன்னார்.

அதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள், கடும் விரதமிருந்து தரிசிக்கிற ஹரிஹரபுத்ரனின் சந்நிதிக்குச் சென்றோம். அவருக்கு ஜவ்வாது மணம் கமழும் விபூதியின் அபிஷேகம் சிறப்புற நடந்தது. வரிசை

No comments:

Post a Comment