நம் எண்ணங்களின் வணக்கங்கள்
வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில்,
புனித கதவு ஒன்று உள்ளது. அதை, ‘போர்ட்டா சான்டா’
என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒரு
முறை தான் திறப்பர்.
-
இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது
எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த
பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த,
1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை
பார்த்ததாக எழுதியுள்ளார்.
-
ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள்
இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து
விடும் என நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில், இதை
தவறாக பயன்படுத்தத் துவங்கிய போது நிறுத்தப்பட்டது.
-
முதலில், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறக்கப்பட்ட
கதவு, பின், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக குறைக்கப்
பட்டது. பின், 25 ஆண்டுகளாக மேலும் குறைக்கப்பட்டது.
இந்த வகையில், கடைசியாக போப் ஜான் பால்,
டிச.,24, 1999ல் கதவைத் திறந்து வைத்து, ஆண்டு முடிவில்
சடங்குகள் நடத்தி, மூடச் செய்தார்.
-
குறிப்பிட்ட நேரத்தில் இக்கதவு வழியாக முதலில் போப்பும்,
அவருடைய பரிவாரங்களும் நுழைவர். அடுத்து, பொது
மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
-
ஒருமுறை ஆறாம் போப் பால் கதவை திறந்தபோது,
மேலேயிருந்து கற்சிதறல்கள் மற்றும் குப்பைகள் தலையில்
விழுந்தன.
-
அடுத்து, இரண்டாம் போப் ஜான் பால் முன்னெச்சரிகையாக,
மேலே சுத்தம் செய்யச் சொல்லி, கையால் தள்ளினாலே
கதவு திறக்கும்படி தயார் நிலையில் வைத்த பின்னரே,
உள்ளே நுழைந்தார்.
-
இரண்டாம் போப் ஜான் பாலுக்கு இன்னொரு பெருமையும்
உண்டு; இந்த கதவை இருமுறை திறந்து உள்ளே செல்லும்
பெருமை பெற்றவர் இவர் மட்டுமே!
-
அடுத்து, டிச., 24, 2024ல் தான், மீண்டும் புனித கதவு
திறக்கப்படும்.
-
இதுபோன்ற புனித கதவுகள் உலகில் ஏழு இடங்களில்
மட்டுமே உள்ளன. ஐரோப்பாவில், ஆறு இடங்களிலும்,
கனடாவில் ஒரு இடத்திலும் உள்ளது.
-
இந்த ஏழு கதவுகளில், இரண்டு கதவுகளே பிரபலமானவை.
-
முதலாவது, ஸ்பெயின் நாட்டின் கலிகா என்ற இடத்தில்,
செயின்ட் ஜேம்சை கவுரவிக்கும் ஆலயத்தில் உள்ளது.
-
இவரின் பிறந்த நாள் ஜூலை, 25; இது, ஞாயிற்றுக்
கிழமையில் வந்தால், அன்று, புனித கதவு திறக்கப்படும்.
-
இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில்
ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்தது, கனடாவின் க்யூபெக் நகரில் அமைந்துள்ள
பசிலிக்கா கதீட்ரல்.
இதன், 350வது ஆண்டுவிழா, இந்த ஆண்டு
கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சார்பாக ஒரு புனித
கதவு அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு கடைசி வரை இக்கதவு திறந்திருக்கும்.
No comments:
Post a Comment