Monday, December 29, 2014

மாதவிலக்கு

மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு.... பெரிய நெல்லிக்காயைத் துருவி காப்பி பொடி போல் பொடி செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும். நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது கீழாநெல்லி இலையை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாதவிலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும் செம்பருத்திப் பூ மாத விலக்கை ஏற்படுத்தக் கூடியது. தகுந்த வயது வந்ததும் பூப்பெய்யாத பெண்கள் இப்பூவை உண்டுவர பூப்பெய்யலாம். வெள்ளைப் பூண்டை தோல்நீக்கி வேகவைத்துச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் சுரக்கும் கடுக்காய், மருதம்பட்டை, ஆவரம்பூ 200 கிராம் எடுத்து பொடிக்கவும். 5கிராம் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வர ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும். மாதவிலக்கு காலத்தில் வாழைப்பூச் சாற்றில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். வாழைப்பூவை ரசம் செய்து அருந்தினால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்

No comments:

Post a Comment